ஊனமுற்றவரை ஏமாற்றி 2ம் திருமணம்: தப்பி ஓட முயன்ற பெண் கைது
தினமலர் டிசம்பர் 06,2009
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, திருமணம் செய்து கொள்வது போல நடித்துஊனமுற்ற வாலிபரை ஏமாற்றி நகையுடன் தப்பியோட முயன்ற திருமணமான பெண்ணை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, உமரிக்காடைச் சேர்ந்தவர் பட்டுராஜ்(29), இருகால்களும் ஊனமுற்ற அவர் சென்னையில் காய்கறி கடையில் வேலைபார்த்துவருகிறார். மணப்பெண் தேவையென நாளிதழில் விளம்பரம் தந்தார். வரதட்சணை தேவையில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அதைப்பார்த்து பட்டுராஜை, மொபைல் போனில் புரோக்கர் தொடர்பு கொண்டார். தன் பெயர் வைதீஸ்வரன், ஊர் திருப்பூர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், நல்ல அழகான மணப்பெண் இருப்பதாக கூறினார். அதையடுத்து புரோக்கர் வைதீஸ் வரன், மணப்பெண் ரதிதேவி(24) உள்ளிட்ட ஐந்து பேர் கடந்த மாத கடைசியில் பட்டுராஜை சந்தித்தனர். அவருக்கு பெண்ணை பிடித்து போனதால், டிச.,3ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பட்டுராஜிற்கும், ரதிதேவிக்கும் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் வசதியில்லையெனக் கூறியதால் பட்டுராஜ், அங்கிருந்த உறவினர் ஒருவரிடம் இரவில் வாங்கி பத்து பவுன் செயினை ரதிதேவிக்கு அணிவித்தார். திருமணம் முடிந்தவுடன், கமிஷன் வாங்கிக்கொண்டு வைதீஸ்வரன் சென்றுவிட்டார். அன்று நடக்கவிருந்த முதலிரவை தள்ளிவைக்குமாறு ரதிதேவி கூறியதை பட்டுராஜ் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பட்டுராஜ் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ரதிதேவி, பத்து பவுன்செயின், பட்டுச்சேலை, மொபைல் போன் உள்ளிட்டவற்றை ஒரு சூட்கேசில் வைத்து வீட்டிலிருந்து வெளியேறி பஸ்ஸ்டாப்பிற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்த பட்டுராஜ் உறவினர்கள், ரதிதேவியை பிடித்து ஏரல் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ரதிதேவியின் சொந்த ஊர் மயிலாடுதுறை, கணவர் பெயர் குருமூர்த்தி, அவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். ரதிதேவியின் நடத்தை சரியில்லாததால் அவரிடமிருந்து கணவர் பிரிந்து வாழ்கிறார் எனத் தெரியவந்தது.முதல் திருமணத்தை மறைத்து ஊனமுற்றவரை திருமணம் செய்துஏமாற்றிய ரதிதேவியை போலீசார் கைது செய்தனர். தங்கசெயின் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவான புரோக்கர், உறவினர்கள் போல் நடித்தவர்களை தேடிவருகின்றனர்.
=====================
இது போன்ற கொடூர புத்தியுடன் பிறரின் வாழ்க்கையை சிதைப்பதில் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் இருக்கும் போது சட்டங்கள் எப்போதும் ஆண்களை மட்டும் குற்றங்கள் செய்யும் ஒரு தனிப்பிரிவாக சித்தரித்து தவறு செய்யும் பெண்களை ஏதோ அப்பாவிகள் போல பாதுகாப்பது ஏனென்று இதுவரை யாரும் யோசித்துப் பார்க்கவே இல்லை. இதற்கு உதாரணம் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். இந்த சட்டப்படி ஆண்கள் எப்போதும் குற்றவாளியாகவும் பெண்கள் எப்போதும் பாதிக்கப்படும் அப்பாவிகள் போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
பட்டுராஜ் இரக்கப்பட்டு மனைவிக்கு இரவல் நகை வாங்கி போட்டதால் அந்தப் பெண் நகையுடன் ஓட்டம் பிடித்தார். இது போல நாட்டில் பல அப்பாவி ராஜாக்கள் வரதட்சணை வாங்காமல் தங்கள் கைகாசு செலவு செய்து திருமணம் செய்ததால் இன்று காவல்நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் பொய் வரதட்சணை கேசுகளில் சிக்க வைக்கப்பட்டு அலைந்து கொண்டிருக்கின்றனர்.
பட்டுராஜை ஏமாற்றிய பெண் அகப்பட்டதை அடித்துக்கொண்டு இரவோடு இரவாக ஓட நினைத்தார். ஆனால் பல புத்திசாலி பெண்கள் பொறுமையாக காவல் நிலையத்திற்கு சென்று பொய் புகார் எழுதித் தந்து கணவரையும் அவரது குடும்பத்தையும் சிறையில் சில நாட்கள் தங்கவைத்து பிறகு ஒரு பெருந்தொகையை கறந்துவிட பொறுமையாக பேரம் பேசும் வியாபாரத்தை ஆரம்பிக்கிறார்கள். நோக்கம் ஒன்று தான் வழிமுறைகள் தான் வேறாக இருக்கிறது. பயன்படுத்தும் வழிமுறைகள் எல்லாம் அந்தப் பெண்ணின் திறமையையும் கூடியிருக்கும் தரகர்களின் திறமையையும் பொறுத்தது. ராஜாக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி கு...
10 years ago
No comments:
Post a Comment