தினமணி 17 Nov 2009
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த ஆராயி, திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை வந்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே மண்ணெண்ணெயுடன் அவர் தீக்குளிக்க முயன்றபோது அங்கு வந்த போலீஸார் ஆராயியைத் தடுத்து அவரைக் காப்பாற்றினர். அவரிடம் விசாரித்தபோது மருமகளின் கொடுமைகள் குறித்து தெரிவித்தார். போலீஸார் தொடர்ந்து அவரை விசாரித்து வருகின்றனர்.
====================
இதுவே மருமகள் காவல்நிலையத்தில் ஒரு பொய் புகார் கொடுத்திருந்தால் உடனடியாக வேலைக்காரர்கள் போல ஓடிப் போய் அந்த வயதான மாமியாரை கைது செய்திருப்பார்கள்.
சில கேடு கெட்ட ஜென்மங்களுக்கு தன்னைப்பெற்ற அன்னையும் ஒரு பெண் தான் என்ற எண்ணமில்லாமல் போய்விட்டது. அதனால்தான் இந்த வயதான தாயாரும் ஒரு பெண், அவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என்று தோன்றவில்லை போலும்.
சட்டத்தின் பார்வையில் பெண் என்பதற்கு ஒரு படம் வரைந்து வரையரை செய்திருக்கிறார்கள். அவர்களின் கவர்ச்சி கண்ணோட்டத்தின்படி மருமகள்கள் மட்டுமே இந்த நாட்டில் பெண்கள். சகோதரிகளோ, அன்னையரோ பெண்களாக கருதப்படுவதில்லை. இளம்பெண்களை மையமாக வைத்து 498A சட்ட வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அன்னையரைப் பற்றி நினைக்கத் தோன்றுமா?
மேலுள்ள செய்தி செய்தித்தாளில் வந்திருப்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனென்றால் செய்தித்தாள்கள் கூட இது போல பல வயதான தாயார்கள் படும் கஷ்டங்களை வெளியிடுவதில்லை. அவர்களுக்குக் கூட மருமகள் பற்றிய ஒருதலைபட்சமான செய்திகளை மட்டும் தான் வெளியிட விருப்பம். ஏனென்றால் மருமகள் பற்றிய செய்தி என்பது அவர்களுக்கு வியாபரத்திற்காக கவர்ச்சிப்பெண்களின் படங்களை போடுவது போல. எல்லாம் ஒருவகையில் பெண்களை இழிவு படுத்தி செய்யும் ஒரு வகை வியாபாரம் தான். இதை எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள்.
இது தான் இந்தக் காலத்தில் வயதான தாய்மார்களின் கதி: ஒன்று மருமகளின் பொய் வரதட்சணை கேஸால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் வயதான காலத்தில் அலைந்து கொண்டிருப்பார்கள். அல்லது மருகளின் உச்ச கட்ட கொடுமையை வெளியே சொல்லமுடியாமல் மனதுக்குள் குமுறிக்கொண்டிருப்பார்கள்.
இந்தக் காலத்தில் வயதான பெற்றோர்கள் மருமகள்களின் சதியால் எப்படி கொடுமைக்கு பலியாகிறார்கள் என்ற கொடிய உண்மையை கூட இயக்குனர் தங்கர் பச்சான் தனது "ஒன்பது ரூபாய் நோட்டு" என்ற படத்தில் காட்டியிருக்கிறார்.
இந்தக் காலத்தில் பெரும்பாலான மருமகள்கள் தனது கணவன் அவளுக்கு அடிமையாக இருந்து சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அவளது காலடியில் கொட்டி அழவேண்டும், அதே சமயம் அந்தக் கணவனை பெற்றெடுத்த வயதான தாய் நடுத்தெருவிற்கு விரட்டப்படவேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்தத் தாய் இல்லாமல் இந்தக் கணவன் கிடைத்திருப்பானா என்று யோசிப்பதில்லை. மாமியார் என்பதை விட முதலில் அந்தப் பெண்மணி ஒரு தாய் என்ற கோணத்தில் இந்தக்காலத்தில் மருமகள்கள் பார்ப்பதில்லை.
அன்னையை மதித்துப் போற்றாத நாடு சொர்க்கத்தில் இருந்தாலும் நரகத்தைப்போலத்தான் திண்டாடி நிற்கும். அன்னையரின் கண்ணீர் அந்த நாட்டையே எரிக்கும் சக்தியுடையது. மருமகள்களை மட்டும் பெண்ணாக நினைத்து அன்னையரை புறக்கணிக்கும் நாட்டிற்கு அந்த அழிவு வெகு தூரத்தில் இல்லை.
1 comment:
sathiyamana vaarthai.annamootiya deiva mani kaigal aanaikkaatil analai vilunkuom.VIZZY.
Post a Comment