இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, December 12, 2009

புதிய காதல் கலாச்சாரம்

காதலனுடன் பேச தீக்குளிப்பு மிரட்டல்: நள்ளிரவில் இளம்பெண் அட்டகாசம்

சென்னை: காதலனுடன் பேசுவதற்காக இரவு நேரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவியை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


தாம்பரம் அருகே சேலையூரைச் சேர்ந்தவர் ரேவதி. 23 வயதான ரேவதி அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ரேவதி தன்னுடன் படிக்கும் மாணவரை தீவிரமாக காதலித்து வந்தார். அந்த மாணவரின் வீடு ஆதம்பாக்கத்தில் உள்ளது.


நேற்று முன் தினம் இரவு காதலனை சந்தித்துப் பேச ரேவதி ஆதம்பாக்கம் சென்றார். ஆனால் அந்த மாணவரின் பெற்றோர் ரேவதியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ரேவதியை அங்கிருந்து விரட்டி விட்டனர்.

மனமுடைந்த ரேவதி, கடைக்கு சென்று சிறிய பாட்டிலில் மண்எண்ணெய் வாங்கினார். இரவு 10 மணியை தாண்டிய நிலையில் ஆதம்பாக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

போலீஸ் நிலைய வாசலில் நின்று தீக்குளிக்கப் போவதாக கூச்சலிட்டார். சத்தம் கேட்டு போலீசார் வந்து விசாரித்தனர். அவர்களிடம் ரேவதி, காதலனுடன் என்னை பேச அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் இங்கேயே உடலில் மண்எண்ணை ஊற்றி தீ குளித்து செத்து விடுவேன் என்றார்.

அவரை சமரசம் செய்த போலீசார் மாணவரை வரவழைத்து பேசினார்கள். அப்போது அந்த மாணவர், நானும் ரேவதியும் பேசி பழகுவது உண்மை தான். ஆனால் நான் அவரை காதலிக்க வில்லை. நல்ல நண்பராக நினைத்தே பழகினேன் என்றார்.

ரேவதி இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே மகளை காணாமல் தவித்த ரேவதியின் பெற்றோர் சேலையூர் போலீசுக்கு சென்று புகார் செய்தனர். இதையடுத்து ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்த ரேவதியை அவரின் பெற்றோர் வந்து அழைத்துச்சென்றனர்.

======================

காதலி வீட்டு முன் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

சிவகாசி: திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி காதலி வீட்டின் முன் போலீஸ்காரர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். சிவகாசி அருகே அதிவீரன் பட்டியை சேர்ந்த சொக்கர் மகன் தங்கப்பாண்டி(25). சட்டீஸ்கர் மாநிலத்தில், மத்திய சிறப்பு பாதுகாப்பு படை போலீஸ்காரராக 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். ஆசிரியை பயிற்சி முடித்த மாரனேரி அழகுமலை மகள் தேவி(22) என்பவரை தங்கபாண்டி காதலித்தார். ஆனால், தேவி காதலிக்கவில்லை. தேவியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் தங்கப்பாண்டி கூறினார்.

பெற்றோர்சம்மதிக்காததால், சில மாதங்களுக்கு முன் தங்கப்பாண்டி, தேவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். பெண்ணின் பெற்றோர்கள், "பெற்றோருடன் வந்து பெண் கேள்' என கூறி திருப்பி அனுப்பினர். உடனே சட்டீஸ்கருக்கு தங்கபாண்டியன் சென்றார்.தேவியை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழகத்தில் நடைபெறும் போலீஸ் தேர்வில் விருதுநகரில் கலந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேர்வு பெற்றார். தொடர்ந்து தேவியை திருமணம் முடித்து வைக்க கோரி பெண் வீட்டாரை வலியுறுத்தி வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தேவியின் வீட்டுக்கதவை தட்டினார். தேவியின் தாய் கதவை திறந்த போது, எனக்கு பெண் கொடுக்கா விட்டால் இதே இடத்தில் தற்கொலை செய்து கொள் வேன் என மிரட்டியவாறு தனக்கு தானே தீ வைத்து கொண்டார். எரிந்த நிலையில் நடந்து சென்ற அவர் அருகிலிருந்த மாரனேரி போலீஸ் ஸ்டேஷன் அருகே விழுந்தார். ஆபத்தான நிலையில் கிடந்த தங்கப்பாண்டியை, ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.அவரிடம், சிவகாசி மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். தேவியின் தந்தை அழகுமலை, தங்கப்பாண்டி தன் வீட்டிற்கு வந்து தனது மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என பிரச்னை செய்து, வீட்டின் முன் தீக்குளித்தார் என மாரனேரி போலீசில் புகார் செய்தார். மாரனேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
======================

ஒரு படித்த சுயபுத்தியுடைய பெண் வந்து போலிசை மிரட்டி தீக்குளிக்கப் போவதாக சொன்னபோது போலிஸ் அறிவுரை கூறி பத்திரமாக அனுப்பினார்களாம். அப்படியென்றால் கல்லூரியில் படிக்கும் 23 வயதான ஒரு பெண்ணுக்கு சுத்தமாக அறிவே இருக்காது என்று போலிசும் சட்டமும் பெண்களை இழிவு செய்கிறதா? இந்த நிலையில் தான் பலபேர் இருக்கிறார்களா? தற்கொலை செய்யப்போவதாக போலிஸை மிரட்டிய பெண் மீது ஏன் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை? மாறாக சமரசம் செய்ய சம்பந்தப்பட்ட ஆணை வரவழைத்து பேச்சு நடத்தினார்களாம்.பெண்ணின் பெற்றோர் வந்ததும் ஒரு கேள்வியும் இல்லாமல் அனுப்பிவிட்டார்களாம்.

ஆனால் அதுவே இரண்டாவது செய்தியில் பெண்ணின் தந்தை அந்த ஆணின் மீது புகார் செய்திருக்கிறார். போலிஸும் விசாரணை செய்து வருகிறார்களாம். இந்த கேசில் ஏன் சமரசம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? ஏனென்றால் இதில் ஆணுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது தான் இன்று நாட்டில் நடக்கும் அநீதி. பெண் எந்தத் தவறு செய்தாலும் ஒரு தண்டனையும் கிடையாது. அதுவே ஒரு ஆண் என்றால் ஒரு தவறும் செய்யவில்லையென்றாலும் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டால் கூட எல்லா வித தண்டனைகளும் தரப்படும்.

மேலுள்ள செய்திகளில் விஷயம் ஒன்று தான். தவறு செய்வதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. ஆனால் இவைகளை சட்டமும் சமுதாயமும் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றன என்பது தான் மிகவும் வருத்தத்திற்குறியது. இவைகளின் குருட்டுத்தனமான கண்ணோட்டத்தில் பெண் என்றால் எப்போதும் நல்லவள் போலவும் ஆண் என்றால் எப்போதும் குற்றம் செய்வதற்காகவே பிறந்தவன் போலவும் தான் கற்பனையாக எண்ணிக்கொடிருக்கிறார்கள். இந்தப் பாகுபாடான நடைமுறை தான் பெண்களை இன்னும் இழிநிலையில் தள்ளிக்கொண்டிருக்கிறது. பெண்களை இழிவுபடுத்துவதில் தவறான சட்டங்களும், ஆட்சியாளர்களும், பெண்ணடிமையை ஊக்குவிக்கும் போலி பெண்ணுரிமைவாதிகளும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இதுபோலத்தான் பல பொய்யான வரதட்சணை கேசுகளில் படித்த நல்ல பணியிலுள்ள
ஒரு பெண் வந்து தான் வரதட்சணை கொடுத்துத்தான் திருமணம் செய்ததாக எழுதிக்கொடுத்தாலும் அது குற்றம் என்று தெரிந்தாலும் போலிஸ் அந்த பெண்ணின் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல பொய்யான குற்றச்சாட்டுக்களுக்காக, செய்யாத தவறுகளுக்காக அப்பாவி கணவரையும் அவரது குடும்பத்தையும் துன்புறுத்துகிறார்கள்.

பொண்ணு வந்து என்ன சொன்னாலும் போதும் அது அத்தனையும் உண்மை என்று சொல்லும் கண்மூடித்தனமான பல கிழக்கோட்டான்களும், சட்டங்களும் இருக்கும் வரை பெண்களுக்கு நன்மதிப்பும் மரியாதையும் கிடைக்கவே கிடைக்காது.

ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்தாத சட்டங்கள் இருக்கும் வரை பெண்கள் எப்போதும் அடிமைப்பட்டுத்தான் இருப்பார்கள். பிறகு உரிமை வேண்டும் என்று போராடி என்ன பயன்? சம உரிமை வேண்டுமென்றால் எல்லா விஷயங்களிலும் சமமாக நடத்தப்படவேண்டும். குற்றம் புரிவதற்கு மட்டும் தண்டனையில்லாத உரிமை வேண்டுமென்றால் எல்லோரும் அந்தக் கூட்டத்தை கயமைத்தனம் உள்ள கொடிய மிருகங்களைப் போலத்தான் பார்ப்பார்கள்.

பெண்ணடிமையை ஊக்குவிக்கும் எந்த நாடும் எப்போதும் முன்னேறாது. விரைவில் அழிவை நோக்கித் தான் செல்லும். அழிந்து தான் போகவேண்டும்.





No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.