இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, December 22, 2009

உண்மை நிலையை உணர்ந்திருக்கும் நோபல் விஞ்ஞானி

இந்திய மாணவர்களின் அறிவியல் திறன் : நோபல் விஞ்ஞானி கருத்து
தினமலர் டிசம்பர் 23,2009

சென்னை : ""இந்திய மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, நான் வழிமுறைகளை சொல்வது சரியாக இருக்காது; அதற்கான பொறுப்பும் எனக்கு இல்லை,'' என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


பள்ளி கல்லூரி மாணவர்களிடையே, அடிப்படை அறிவியல் துறைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களது ஆய்வு நோக்கை மேம்படுத்தவும், சென்னை பல்கலையில் ஏ.எல். முதலியார் அடிப்படை அறிவியல் வளர்ச்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இம்மையத்தை நேற்று துவக்கி வைத்து, மாணவர்களின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, பரிசுகளை வழங்கி, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


அப்போது அவர் பேசியதாவது:
நோபல் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கம் மாணவர்களுக்கு தேவையில்லை; அறிவியல் படித்து, சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் போதுமானது. நோபல் பரிசு என்பது ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. நூறு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில், ஒன்றுதான் நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்படுகிறது. இதனால், மீதம் உள்ள விஞ்ஞானிகள் திறமையற்றவர்கள் என்று கூற முடியாது. 1978ம் ஆண்டு முதல் எனது ஆராய்ச்சியை துவங்கினேன். ஆராய்ச்சிகளின் முடிவில், நோபல் பரிசு எனக்கு கிடைத்தது. இந்த பரிசு கிடைக்காவிட்டாலும், சிறந்த விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றிருப்பேன். இவ்வாறு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.


தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாடுகளில் அறிவியல் ஆய்வுகளுக்கு தேவையான வசதிகள் அதிகம் உள்ளன. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அதிகம் செலவிட வேண்டி வருகிறது. இந்தியாவிலும் சிறந்த அறிவியல் சோதனை மையங்கள் உள்ளன. சிறந்த விஞ்ஞானிகள் உள்ளனர். நான் சிறுவயதிலேயே, இங்கிருந்து சென்று விட்டதால், இங்குள்ள சூழலை அறிய முடியவில்லை. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஆய்வுப்படிப்புகளில் ஈடுபடும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்திய மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த நான் வழிமுறைகளை சொல்வது சரியாக இருக்காது; அதற்கான பொறுப்பும் எனக்கு இல்லை. இங்குள்ள அரசும், விஞ்ஞானிகளும்தான் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.


வெளிநாட்டில் வசிக்கும் இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். சீனாவில், இதே போன்று விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில், உலக நாடுகளில் வசித்த சீன விஞ்ஞானிகள் சீனா திரும்பியுள்ளனர். பிரதமரின் அழைப்பை ஏற்று, விஞ்ஞானிகள் இந்தியா திரும்பி பணிபுரிவதற்கு ஏற்ற அரசியல், அதிகார வர்க்க சூழல் அமைய வேண்டும். அப்படி உரிய சூழல் அமையுமானால், அவர்கள் இந்தியா திரும்புவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

===========================

இந்தியாவில் படித்தவர்களும், திறமையுள்ள பல வல்லுநர்களும் எந்தவகையான இழிநிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்களென்று இதிலிருந்து நன்றாகத் தெரிகிறதல்லவா?

குறிப்பாக அரசாங்க உதவியுடன் நடக்கும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கித்தவிப்பது பெரும்பாலும் நன்கு படித்த திறமையான பல்துறை வல்லுநர்களும், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், பொறியாளர்களும் தான்.

பல கோடி புத்திசாலிகளின் அறிவும், திறமையும் இப்படி அரசாங்கத்தால் அவமானப்படுத்தப்பட்டு, வீனாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது சுயபுத்தியுள்ள எந்தவொரு திறமையானஅறிஞரும் தங்களுக்கு தற்போது வெளிநாடுகளில் உள்ள மரியாதையையும், மதிப்பையும், அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவையும் விட்டுவிட்டு இந்த நாட்டிற்கு வருவதற்கு அஞ்சுவார்கள். இந்தியாவில் நடக்கும் இந்த அப்பாவிகளுக்கெதிரான சட்ட வன்முறை உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு உண்மை.
யாராவது தெரிந்தே பாழுங்கிணற்றுக்குள் விழுவார்களா?




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.