சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, December 23, 2009

ஆடு நனைகிறதே என்று ஓலமிடும் ஓநாய்கள்


புதுடில்லி:
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்ட அமலாக்கம் மந்தமாக இருப்பதாக கருதுவதை அடுத்து அதை கண்காணிக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த தொடங்கி, மூன்றாண்டுகள் ஆகிவிட்ட போதும், அதன் செயல்பாடு மந்தமாக இருப்பதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் முன் அறிக்கை வெளியிட்டார். வக்கீல்கள் குழு மற்றும் சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு நடத்தி, இந்த அறிக்கையை தயாரித்தது.

இதை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தடுப்பு சட்டத்தின் மூன்றாவது மாநாட்டில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் சமர்பிக்கப் பட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை கண்காணிக்க வேண்டியது அவசியம். மேலும், வழக்குகளை, சீக்கிரமாக முடிக்க, விரைவு கோர்ட் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பான நிறுவனங்கள், போதிய கவனம் செலுத்தாததால், பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனை மற்றும் கோர்ட்டுகளில், அக்கறையின்றி கவனிக்கப்படுகின்றனர். இன்னும், சில மாநிலங்களில், இந்த சட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. இதனால், பெண்கள் தொடர்பான வரதட்சணை கொடுமை வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. எனினும், பல மாநிலங்களிலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலங்களில் குறிப்பாக ஆந்திராவில், வரதட்சணை வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையை தொடர்ந்து, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்குமாறு வலியுறுத்தினார். இதுகுறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், "பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் சிறப்பான செயல்பாடு குறித்த கண்காணிப்பு கொள்கைகள் தொடர்பான வரைவு திட்டம் வகுக்க, திட்டக்கமிஷனுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. குடும்ப வன்முறைகள் குறித்து கண்காணிக்க, முழு நேர சமூக பணியாளர்கள் தேவை. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


=======================================


குடும்பங்கள் சிதைவதில் ஏன் தாமதம் என்று அரசு வருத்தப்படுகிறது போலும்! ஏற்கனவே உள்ள தவறான வரதட்சணை தடுப்புச்சட்டங்களும், IPC 498A போன்ற சட்டங்களும் தவறாகப்பயன்படுத்தப்பட்டு பல குடும்பங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதை ஜனாதிபதியே ஒரு முறை கூறியிருக்கிறார். நேற்றைய செய்தியில் கூட பார்த்தீர்களா மாதத்திற்கு 100 விவாகரத்து வழக்குகள் கோவை நீதிமன்றத்தில் மட்டும் குவிந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. செய்தியை இங்கே காண்க:
(கசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு) .

ஆனால் சட்ட அமைச்சரோ குடும்பவன்முறை தடுப்புச்சட்டம் என்கின்ற தொழில் மந்தமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். தொழில் மந்தமாக இருப்பதாக இவர்கள் வருத்தப்படும் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் "குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி பெண்கள் எப்போதும் பாதிக்கப்படுபவர்களாகவும், ஆண்கள் எப்போதும் குற்றவாளிகளாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால் எந்தப் பெண்ணும் தன் குடும்பத்திலுள்ள எந்த ஒரு ஆணுக்கெதிராகவும் (தந்தை,சகோதரன் உட்பட) குடும்ப வன்முறைச் சட்டத்தைப் பயன்படுத்தி பொய்யான புகார் கொடுக்கலாம்." ஆனால் அதே சமயம் ஒரு பெண் குடும்பத்திலுள்ள எந்த ஆணுக்கு வேண்டுமானாலும் எத்தகைய வன்முறையையும் இழைக்கலாம். அப்படி பாதிக்கப்படும் ஆணுக்கு சட்டத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அப்படி குற்றம் புரியும் பெண்ணை தண்டிக்க சட்டமே கிடையாது.
அதை உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள்.இப்படி பெண்களுக்குத் தவறான சட்டங்கள் என்னும் தவறான ஆயுதங்களை கையில் கொடுப்பதால் பல குடும்பங்கள் விவாகரத்தில் போய் முடிகின்றன. அதில் பாதிக்கப்படுவது ஒரு பாவமும் அறியாத குழந்தைகள்.


அரசாங்கத்தின் இது போன்ற தவறான சட்டங்களுக்குள் பல தவறான உள்நோக்கங்கள் இருக்கின்றன. அவை என்னவென்றால்:

  • இப்போது நாட்டில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறிக்கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு நிதி திரட்டுவதாக வெளிநாடுகளில் பிச்சையெடுக்கும் ஒரு தொழில் நடந்து கொண்டிருக்கிறது.
  • பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இது போன்ற தவறான சட்டங்களால் அவர்களே தங்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டு கடைசியில் விவாகரத்தில் தான் இவர்களின் வாழ்க்கை போய் முடியும்.
  • அப்போது பல குழந்தைகள் நாட்டில் அனாதைகளாக தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்ற உறவுகள் இல்லாமல் அனாதைகளாகத் திரிவார்கள்.
  • பிறகு இப்போது பெண்களுக்கு ஒரு அமைச்சரகம் இருப்பது போல இந்த அனாதைகளுக்காகவும் ஒரு அமைச்சரகம் ஏற்படுத்தி ஒரு அமைச்சரை பணியமர்த்தலாம். அதற்குத் தனியாக ஆண்டுதோறும் "நிதி ஒதுக்கலாம்".
  • ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற விவாகரத்துக்களால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு தனிவாரியம் அமைத்து "நிதி ஒதுக்கலாம்".
  • அனாதை குழந்தைகளைக்காட்டி வெளிநாடுகளில் நிதியுதவி கேட்டு தங்களது கஜானாவை நிரப்பிக்கொள்ளலாம்.
  • இந்த அனாதைகளுக்கு உதவி செய்வதாக பல அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காளான்கள் போல முளைத்து நிதிதிரட்டலாம்.
இவைதான் இது போன்ற தவறான பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் கொடிய உண்மை. இல்லையென்றால் யாராவது தெரிந்தே தவறான சட்டங்களை இயற்றி அப்பாவிகள் பலியாவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பார்களா?

கோடிக்கணக்கான வயதான தாய்மார்களும், திருமணமாகாத பல சகோதரிகளும், சிறுமிகளும் பொய்யான வரதட்சணை வழக்குகளில் சிக்கி சிறையில் அடைபட்டு, அவமானப் படுத்தப்பட்டு, நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையாகவே பெண்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இவர்களையும் பாதுகாக்க ஏன் எந்தவித சட்டங்களும் இயற்றப்படவில்லை? சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களை இழிவு செய்வோரை தண்டிக்க அரசாங்கம் ஏன் முன்வரவில்லை? யோசித்துப் பாருங்கள்.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான் இது போன்ற பெண்கள் பாதுகாப்பு சட்டங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை. பெண்கள் ஏதோ அப்பாவிகள் போலவும் அவர்களைக்காக்க பல சட்டங்கள் வேண்டும் என்று அவர்களை பலிஆடுகளாக்கி ஒரு மிகப்பெரிய ஓநாய்க்கூட்டமே சதிவலை விரித்துக் காத்துக்கொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டால் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும். பல குடும்பங்கள் சிதையாமல் பாதுகாக்கப்படும். பல குழந்தைகள் தாய் தந்தையற்ற அனாதையாகாமல் நல்ல குடிமக்களாக உருவாக முடியும்.

1 comment:

தமிழ். சரவணன் said...

கணவன் இறந்ததற்கு சடங்கு செய்யும் பொழுது பிடிபட்ட கள்ளக்காதல் "குத்து" விளக்கின் படுகொலைசம்பவத்தை படியுங்கள்

மனைவி, கள்ளக்காதலன் கைது

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=2996

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.