இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, December 22, 2009

காவலும், நீதியும் - இன்றைய நிலவரம்

ஆயுள் தண்டனைக் கைதிக்கு பதிலாகசிறையில் உள்ளவரை விடுவிக்க உத்தரவு
தினமலர் டிசம்பர் 23,2009

மதுரை:நெல்லை பாளை சிறையில், ஆயுள்தண்டனைக் கைதிக்கு பதிலாக உள்ளவரை, உடனடியாக விடுதலை செய்யும்படி, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது.மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கு:நெல்லை ராதாபுரம் அருகே, நயினார்குளத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் சில ஆண்டுகளுக்கு முன் முத்துப்பட்டன் என்பவரை கொலை செய்தார். இதில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர், ஐகோர்ட் கிளையில் அப்பீல் மனு செய்தார். அவரை ஜாமீனில் விட, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பின் அவரது மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவரை சிறையில் அடைக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சுடலைமுத்துவுக்கு பதிலாக, அவரது உறவினர் சிவக்குமார் சிறைக்கு சென்றார். நான்கு ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார். அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இம்மனு, நேற்று நீதிபதிகள் ஆர்.ரகுபதி, ஆர்.சுப்பையா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் செந்தூர்பாண்டியன், விசாரணையை ஜன., 6ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும், என்றார். மனுதாரர் வக்கீல்கள் ரத்தினம், ஜின்னா ஆகியோர், போலீசார் தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்பாவி வாலிபர் தேவையில்லாமல் சிறையில் உள்ளார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், என்றனர். அதை பதிவு செய்த நீதிபதிகள், சிறையில் உள்ள சிவக்குமாரை உடனடியாக விடுதலை செய்யும்படி, இடைக்கால உத்தரவிட்டனர். சிவக்குமாருக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்த விசாரணையை தள்ளிவைத்தனர்.


=========================

நான்கு ஆண்டுகளாக ஆள்மாறாட்டம் செய்து ஒரு ஆளை சிறையிலடைத்து வைத்திருக்கிறார்கள். இது தான் இன்றைய நிலைமை. இதுவே இப்படியென்றால் பொய் வரதட்சணை கேசுகள் எப்படி கையாளப்படும் என்று யோசித்துப்பாருங்கள். கிடைக்கின்ற அப்பாவிகள் எல்லாம் சட்டத்திற்கு முன் பலியாடுகள் தான். காப்பாற்றத்தான் மனிதாபிமானமுடைய மனிதர்கள் இல்லை.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.