சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, April 26, 2012

தவறான பாதையில் செல்லும் 15 வயது சிறுமிகள்

வயது வந்த ஒரு பெண் தனது விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் திருமணம் செய்யாமல் கூடி வாழலாம் என்று கற்பு - கத்தரிக்காய் கலாச்சார வழக்கில் முந்தைய ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி கலாச்சார காவலர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் முகத்தில் சட்டம் என்ற கரியை பூசியது. பின்வரும் இன்றைய செய்தித்தாள் செய்தியைப் பார்த்தால் இனி அடுத்துவரும் ஆண்டுகளில் இந்த தீர்ப்பை மீண்டும் ஒருமுறை மாற்றி எழுதவேண்டியிருக்கும் போலிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes".


புதுடில்லி:"இந்தியாவில், 15 முதல் 19 வயதுக்குள் உள்ள பெண்களில், எட்டு சதவீதம் பேர், 15 வயதை எட்டுவதற்கு முன், செக்ஸில் ஈடுபடுகின்றனர்' என, யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ல், ஐக்கிய நாடுகள் அமைப்பான யுனிசெப், ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இதன் முடிவுகள் குறித்துதெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
இந்தியாவில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில், எட்டு சதவீதம் பேர், 15 வயதை அடைவதற்கு முன்பே, செக்ஸில் ஈடுபடுகின்றனர்.ஆனால், இதே பருவத்தில் உள்ள ஆண்களை பொறுத்தவரை, மூன்று சதவீதம் பேர் மட்டுமே, 15 வயதை அடைவதற்கு முன், செக்ஸில் ஈடுபடுகின்றனர்.

பெரும்பாலான வளரும் நாடுகளிலும், கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், இதே போக்கு தான் நிலவுகிறது.இளம் வயதிலேயே செக்ஸில் ஈடுபடுவதன் மூலம், இளம் வயதிலேயே கர்ப்பமடையும் போக்கும் அதிகரித்து உள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, தாய்மை அடையும் ஒவ்வொரு 1,000 பெண்களிலும், 45 பேர், 15லிருந்து 19 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். எய்ட்ஸ் பிரச்னை குறித்து, 19 சதவீத பெண்களுக்கு (15 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்) மட்டுமே தெரிந்திருக்கிறது. ஆண்களை பொறுத்தவரை, 35 சதவீதம் பேருக்கு தெரிந்திருக்கிறது.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Sunday, April 22, 2012

கணவனுக்கு புது மனைவி செய்துவைத்த எண்ணெய்க் குளியல்!

வெளிநாடுகளுக்கு திருமணம் செய்து கொண்டு செல்லும் இந்திய இளம்பெண்கள் அங்கு கணவனால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும்,  அதற்கு துணையாக இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தார் தொலைபேசி வழியாக வெளிநாட்டில் இருக்கும் மருமகளை கொடுமை செய்வதாகவும் பல பொய் வரதட்சணை வழக்குகள் தினமும் பதிவு செய்யப்படுகிறது.  அதற்கு நடுவே இப்படி ஒரு செய்தி.

கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்த இந்தியப் பெண் அமெரிக்காவில் கைது

தினமலர் ஏப்ரல் 22,2012

ஹூஸ்டன்:அமெரிக்காவில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த இந்தியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டினில் கணவருடன் வசித்து வந்தவர் ஷ்ரியா பிமன் படேல், 27. இவருக்கு ஓராண்டுக்கு முன் தான் திருமணம் நடந்தது. கணவருக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாகக் கூறி குளியலறையில் அவரைப் பூட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த இவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால், கணவரே பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக இவர் கூறினார். ஆனால், கணவர் குளியலறையில் இருந்து வெளியே வராதபடி கதவைத் தாழிட்டும், குளியலறையில் தண்ணீர் வராதபடி குழாயை அடைத்தும் வைத்திருக்கிறார் ஷ்ரியா. இதெல்லாம் அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து ஷ்ரியா கைது செய்யப்பட்டு ஆஸ்டினில் உள்ள டிரவிஸ் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Monday, April 16, 2012

பொய் வரதட்சணை வழக்குப்போடுவேன் என்று மிரட்டிய மணப்பெண்!


வேலூர்: தாலி கட்டும் நேரத்தில், மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டையை சேர்ந்தவர், அப்பாதுரை மகன் மாதவன். மளிகைக் கடை வைத்துள்ளார். இவருக்கும், சேலத்தை சேர்ந்த கோசல்ராம் மகள் ஜெயசுதா என்பவருக்கும், வாலாஜாபேட்டையில் உள்ள கோட்டாராமையா திருமண மண்டபத்தில், நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.

ஏற்பாடு தடபுடல் : நேற்று முன்தினம் இரவு, திருமண வரவேற்பு, தடபுடலாக நடந்தது. பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு போன்ற பல்வேறு சம்பிரதாயங்கள் நடந்தன. நேற்று காலை, 7.30 மணிக்கு, திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. மாப்பிள்ளை, சர்வ அலங்காரத்துடன், மணமேடையில் அமர்ந்திருந்தார். ஆனால், தாலி கட்ட வேண்டிய நேரத்தில், மணப்பெண் வரவில்லை. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, திருமண மண்டபத்தில் இருந்த ஜெயசுதா, யாருக்கும் தெரியாமல், அங்கிருந்து வெளியேறி, வாலாஜாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.

போலீஸ் ஸ்டேஷனில் புகார் : "மாப்பிள்ளை மாதவனை எனக்கு பிடிக்காததால், திருமணத்தில் இஷ்டமில்லை' என புகார் செய்தார். போலீசார், திருமண மண்டபத்துக்கு சென்று, இரு வீட்டாரிடமும் ஜெயசுதா கூறிய தகவலை தெரிவித்தனர். இதை, இரு வீட்டாரும் ஒப்புக் கொள்ளவில்லை. மாப்பிள்ளை, பெண் வீட்டார், போலீஸ் ஸ்டேஷன் சென்று, மணப்பெண் ஜெயசுதாவிடம், பேச்சு வார்த்தை நடத்தினர். ஜெயசுதாவின் வீட்டார், மாதவனை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சிக் கேட்டனர்; ஜெயசுதா மறுத்து விட்டார். போலீசாரும், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படியும் ஜெயசுதா, சம்மதிக்கவில்லை. இதனால், திருமணம் நிறுத்தப்பட்டதாக, போலீசார் அறிவித்தனர்.

"நான் மேஜர்' : இரு வீட்டாரும், போலீஸ் ஸ்டேஷனில், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயசுதா, ""நான் மேஜர். எனக்கு மாதவனை பிடிக்காததால், திருமணத்தை நிறுத்தினேன். அனைவரும் கலைந்து செல்லாவிட்டால், எல்லார் மீதும் புகார் செய்வேன்'' என கூறினார்.

"வரதட்சணை புகார் செய்வேன்' : ""திருமணச் செலவு, 5 லட்ச ரூபாய் ஆகி விட்டது. அதற்கான நஷ்டஈடு தர வேண்டும்'' என, மணமகன் வீட்டார் கேட்டனர். அதற்கு ஜெயசுதா, ""வரதட்சணை வாங்குவதும் தவறு; கொடுப்பதும் தவறு. நீங்கள் பணத்தை கேட்டால். வரதட்சணை கேட்டதாக புகார் செய்வேன்'' என கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும். அங்கிருந்து வெளியேறினர். தாலி கட்டும் நேரத்தில், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம். உறவினர்கள் மத்தியிலும், அப்பகுதியிலும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
==========

இதுபோல திருமணத்தின்போது பெண்ணை பிடிக்கவில்லை என்று மணமகன் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அப்போதும் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். வரதட்சணை சட்டங்கள் வரதட்சணையை ஒழிப்பதாற்காக பயன்படுத்தப்படுவதில்லை என்று இப்போது வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா?Sunday, April 15, 2012

பொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா?

கணவனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்குவதற்காக வரதட்சணை சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் இளம் மனைவிகளையும் இந்த சமுதாயம் தவறாகத்தான் பயன்படுத்தும் என்பது மாற்றமுடியாத உண்மை. இதில் பாதுகாப்பு தருகிறோம், கணவன் மீது எப்படியெல்லாம் பொய் வழக்குப்போடலாம் என்று சொல்லிக் கொடுத்து கணவனை உன் வழிக்குக் கொண்டு வருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறும் கூட்டம்தான் கடைசியில் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் அடுத்த ஆணின் இளம் மனைவிகளை அனுபவித்து வருகிறார்கள். அதற்கு சிறு உதாரணம்தான் இந்த செய்தி...ஐதராபாத் :வரதட்சணைக் கொடுமை வழக்கில் உதவி கேட்டு வந்த பெண்ணுடன், மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி குறித்து விசாரணை நடத்த, அதிகாரிகளுக்கு ஆந்திர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி கோபி பிரியா; இன்ஜினியர். இவர்களுக்கு, 2009ல் திருமணம் நடந்தது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி, குடும்ப நல கோர்ட்டில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார். இதற்குப் போட்டியாக, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கார்த்திக் மற்றும் அவரின் பெற்றோருக்கு எதிராக, கோபி பிரியா புகார் கொடுத்தார்.அப்போது, குண்டூர் ஊரக எஸ்.பி.,யான ஷியாம் சுந்தரிடம், இந்த விஷயத்தில் உதவும்படி கேட்டுக் கொண்டார்.

புகாரை விசாரிப்பதாக உறுதி அளித்த சுந்தர், கோபி பிரியாவுடன் அடிக்கடி தொலைபேசி மற்றும் மொபைல்போனில் பேசி வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கார்த்திக், தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடி, போலீஸ் அதிகாரியுடன் எத்தனை மணி நேரம் கோபி பிரியா பேசியுள்ளார் என்ற விவரங்களை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அதிர்ச்சி பட்டியல்:
துப்பறியும் நிறுவனமும், அவர் கேட்ட தகவலை திரட்டித் தந்தது. அதில், ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் கோபி பிரியாவுடன், போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் பேசியுள்ளது தெரியவந்தது.இவ்வாறு, 80 நாட்களுக்கும் மேலாக, 166 முறை ஷியாம் சுந்தர், கோபி பிரியாவுடன் பேசியுள்ளார். நள்ளிரவு, அதிகாலை என, நினைத்த நேரத்தில் இருவரும் பேசி வந்துள்ளனர். கடந்த ஜனவரி 1 மற்றும் மார்ச் 20ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், இப்படி பேசியுள்ளனர்.தன் வீட்டிலிருந்து, 53 முறையும், தன் மொபைல்போனிலிருந்து 61 முறையும், தன் அலுவலகத்திலிருந்து 26 முறையும், தனது முகாம் அலுவலகத்திலிருந்து 26 முறையும், ஷியாம் சுந்தர் போனில் பேசியுள்ளார். அதேபோல், கோபி பிரியாவும், தன் பங்கிற்கு, 226 முறை போலீஸ் அதிகாரியை அழைத்து பேசியுள்ளார். இருவரும், 1,944 குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு: இந்த அதிர்ச்சி தரும் பட்டியலை, தன் வழக்கறிஞர் மூலம் ஆந்திர ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கார்த்திக், போலீஸ் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.மேலும், இந்த வழக்கில் மட்டும், போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியது ஏன் என்றும், அவரது வழக்கறிஞர் புரு÷ஷாத்தமன் கேள்வி எழுப்பினார்.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆந்திர ஐகோர்ட் நீதிபதி சுபாஷ் ரெட்டி, அடுத்தவர் மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் குறித்து விசாரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Saturday, April 14, 2012

இந்தியக் குடும்பங்களை அழிப்பதில் ஆர்வம் காட்டுவது யார்?

இந்தியாவில் வரதட்சணையால் ஒரு பெண்ணின் திருமணம் நின்றுபோவதைவிட திருமணம் நடந்து ஒரு பெண்ணால் போடப்படும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்தைதான் அதிகம். இந்த உண்மையை இந்திய பெண் ஜனாதிபதியும் சொல்லிவிட்டார், மக்கள் மன்றத்தில் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணும் சொல்லியிருக்கிறார்.

இதுபோல பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரிலும், பெண்ணுரிமை என்ற பெயரிலும் வரிந்து கட்டிக்கொண்டு வேண்டுமென்றே ஒருதலைபட்டசமான, தவறான சட்டங்களை இயற்றி அவற்றை பெண்கள் தவறாகப் பயன்படுத்தி தாங்களே தங்கள் குடும்பங்களை அழித்துக் கொள்ளும்படி சூழ்ச்சி செய்து குடும்பங்களை அழிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது யார்? அதன் பின்னணியில் அவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது? உங்களுக்குத் தெரியுமா?
SPEECH OF THE HON'BLE PRESIDENT OF INDIA, AT THE NATIONAL CONFERENCEOF LADY LAWYERS AND LADY TEACHERS, AT YAVATMAL
YAVATMAL, DECEMBER 26, 2008

... .... ...Instances exist whereby protective legal provisions for the benefit of women have been subjected to distortion and misuse to wreak petty vengeance and to settle scores. Some surveys have concluded certain percent of dowry complaints are false and were registered primarily to settle scores. It is unfortunate if laws meant to protect women get abused as instruments of oppression...
Friday, April 06, 2012

சப்-இன்ஸ்பெக்டர் என்றால் குடும்பத்தை கலைத்துவிடுவாரா?


சென்னை: திருமண பந்தத்தையும், தாம்பத்ய வாழ்க்கையையும் படு ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு பெண் கடைசியில் பரிதாபமாக இறந்து போயுள்ளார் சென்னையில். அவரது ரகசியத் திருமணமும், காதல் வாழ்க்கையும், அவரது மரணத்திற்குப் பின்னரே தெரிய வந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் அதிர்ந்து போய் நிற்கின்றனர். கூடவே இப்பெண்ணின் மரணம் கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

என்றைக்கு அலை பாயுதே சினிமாப் படம் வந்ததோ, அன்றைக்கே பலரது மன நிலையில் குழப்ப அலைகள் வீசத் தொடங்கி விட்டன. யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளலாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு பல பெண்களும் வர இந்த அலைபாயுதே ஒரு காரணமாக அமைந்து விட்டது.

காதல் வலையில் வீழ்ந்த பல பெண்களும் வீட்டுக்குத் தெரியாமல் தாலி கட்டிக் கொண்டு காதலர்களுடன் ரகசிய வாழ்க்கை வாழ்வதும், கடைசி நேரத்தில் குழப்பம் ஏற்பட்டு மரணத்தையோ அல்லது காதல் முறிவையோ சந்திப்பதும் அதிகரித்து விட்டது.

இப்படித்தான் சென்னையில் ஒரு பெண் யாருக்கும் தெரியாமல் சினிமாப் பட பாணியில் காதலனை ரகசிய மணம் புரிந்து கொண்டு, இந்த உறவு குறித்து ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரி சொல்லி வைத்து கடைசியில் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் உயிரிழந்து போயுள்ளார்.

கடலூர் தீபா -அரியலூர் பார்த்திபன்

கடலூரைச் சேர்ந்தவர் தீபா. 26 வயது. எம்.ஏ. படித்துள்ளார். அதேபோல அரியலூரைச் சேர்ந்தவர் பார்த்திபன். 27 வயது. இருவரும் சென்னை போரூரில் உள்ள விவேக் அன் கோ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தீபா பலத்த தீக்காயத்துடன் வட பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருடன் வந்த பார்த்திபனுக்கும் கையில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

தீக்காயத்துடன் பெண் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். தீபாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வாக்குமூலம் கொடுத்தார் தீபா. அந்த வாக்குமூலத்தில் பல பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

தீபாவின் வாக்குமூலம்...

எனது சொந்த ஊர் கடலூர். நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தேன். என்னோடு பார்த்திபனும் ஒன்றாக படித்தார். பார்த்திபனின் சொந்த ஊர் அரியலூர். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. 3 ஆண்டுகள் உயிருக்கு உயிராக ரகசியமாக காதலித்தோம்.

கோவிலில் கல்யாணம் - ரகசிய வாழ்க்கை-கட்டுப்பாடான செக்ஸ்

அலைபாயுதே சினிமா பாணியில் நானும், பார்த்திபனும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தோம். எனது பெற்றோருக்கும், அவரது பெற்றோருக்கும் இந்த தகவல் தெரியாது. எனது தந்தை சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்ததால், எங்களை ஏதாவது செய்துவிடுவார் என்று பயந்தோம்.

நாங்கள் நல்ல நிலைக்கு வந்தபிறகு, எங்கள் திருமணத்தை வெளிப்படையாக அறிவிக்க முடிவு செய்திருந்தோம். இதனால் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் செக்ஸ் விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை எங்களுக்குள் வைத்துக்கொண்டோம். செக்ஸ் வைத்துக்கொண்டாலும், குழந்தை உண்டாகாமல் பார்த்துக்கொண்டோம்.

அக்கம்பக்கம் கணவன் மனைவி-மற்றவர்களுக்கு அண்ணன், தங்கச்சி!

நாங்கள் இருவரும் ஒன்றாக சென்னை வந்து விருகம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம். இருவருக்கும் விவேக் அன்கோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வீட்டு உரிமையாளரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும், கணவன்-மனைவி என்று உண்மையை சொல்லிவிட்டோம்.

ஆனால் நாங்கள் வேலைபார்த்த நிறுவனத்தில் அண்ணன்-தங்கை என்று கூறிவிட்டோம். எனது தாயார் ஒருமுறை சென்னை வந்தார். அப்போது அவரிடம் பார்த்திபனை எனது நண்பர் என்று கூறி சமாளித்தேன். எனது தாயார் சென்னையில் இருந்தவரை அவரை வெளியில் தங்க சொல்லிவிட்டேன்.

ஐஏஎஸ் கனவு

எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. பயிற்சிக்கு கூட சென்றேன். ஆனால் எனது கனவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவது. பார்த்திபனும் அதே கனவில் இருந்தார். நாங்கள் இருவரும் ஐ.ஏ.எஸ். முதல் கட்ட தேர்வில் வெற்றிபெற்றோம். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டேன்.

ஆனால் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் டி.எஸ்.பி. ஆகலாம் என்று அந்த தேர்வும் எழுதினேன். ஆனால் எனது கனவை சிதைக்கும் வகையில் அன்று அந்த விபத்து நடந்துவிட்டது. இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

சமையல் அறையில் படிப்பு

கடந்த சனிக்கிழமை இரவு நான் சமையல் அறையில் உட்கார்ந்து நள்ளிரவு வரை படித்தேன். சமையல் அறையில் மின்சார பல்பு பியூஸ் போய்விட்டதால், மண்எண்ணெய் காடா விளக்கை பற்ற வைத்து அந்த வெளிச்சத்தில் படித்தேன்.

பார்த்திபன் படுக்கை அறையில் தூங்கினார். அவரது தூக்கத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதாலும், ஒன்றாக இருந்தால், செக்சுக்கு அவர் முயற்சிப்பார் என்பதாலும், நான் சமையல் அறையில் படித்தேன். ஆனால் அது எனது வாழ்க்கையை சிதைக்கும் என்று தெரியவில்லை.

படித்தபடியே அப்படியே தூங்கிவிட்டேன். தூக்கத்தில் எப்படியோ, எனது கைபட்டு காடா விளக்கு என்மீது விழுந்து தீப்பிடித்தது. நான் அணிந்திருந்த நைட்டி உடை எரிந்துவிட்டது. அந்த தீ எனது மார்பு முதல், அடி வயிறுவரை எரிந்து தீக்காயம் ஏற்பட்டுவிட்டது.

வலி தெரிந்து நான் தூக்கத்தைவிட்டு எழுந்து சத்தம்போட்டேன். சத்தம் கேட்டு, பார்த்திபனும் ஓடி வந்தார். அவர் என்னை காப்பாற்ற முயன்றதில் அவருக்கும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. எனது கவனக்குறைவால்தான் இந்த விபத்து நடந்து விட்டது. என்னை உயிர் பிழைக்க வைத்து, கடவுள் எனது கனவை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார் தீபா.

வாக்குமூலம் கொடுத்த அவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். பிரேதப் பரிசோதனைக்கு தீபாவின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போதுதான் பலருக்கும் பார்த்திபனும், தீபாவும் ரகசிய கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த கதை தெரிந்து அதிர்ந்தனர்.

விபத்தா... கொலையா?

தீபாவின் வாக்குமூலத்தில் பல குழப்பங்கள் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். பார்த்திபன் மீதும் போலீஸாருக்கும் சந்தேகம் உள்ளது. பார்த்திபனைக் காப்பாற்றுவதற்காக தீபா பொய்யான வாக்குமூலம் கொடுத்தாரா என்றும் சந்தேகம் உள்ளது.

விபத்து என்று தீபா சொன்னாலும், அவரது உடலின் முக்கால்வாசிப் பாகம் தீப்பிடிக்கும் வரையா அவர் தூங்கிக் கொண்டிருந்திருப்பார் என்றும் சந்தேகம் வருகிறது.

தீபாவும், பார்த்திபனும் கணவன், மனைவி போல வாழ்க்கை நடத்தி வந்திருப்பதால் ஆர்ஓடி ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபா, பார்த்திபனின் வாழ்க்கை, சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது என்ற கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.