தமிழகத்தில் குடும்பங்கள் சிதைந்துகொண்டிருக்கிறது. அதன் தீவிரமான அறிகுறி இப்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒருதலைபட்சமாக இயற்றப்படும் புதுப்புது மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் மூலம் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த குடும்ப சிதைவு பன்மடங்காக பல்கிப்பெருகும் என்பதை எதிர்பார்த்து காத்திருப்போம்.
விவாகரத்துக்களில் தமிழகம் முதலிடம்ஏப்ரல் 05,2012 தினமலர்
புதுடில்லி : 2010ம் ஆண்டில் கணவன் அல்லது மனைவி இழந்தோர், விவாகரத்து ஆனவர்கள் மற்றும் பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் டில்லி 4.1 சதவீதத்துடன் கடைசியில் உள்ளது. அனைத்து வகைகளிலும் முதல் 5 இடங்களை பிடித்த பெண்களின் பட்டியலை மகாராஷ்டிரா வெளியிட்டுள்ளது.
இதில் மேலே குறிப்பிட்ட அனைத்து வகைகளிலும் ஆண்களை விட பெண்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளனர். தனித்து வாழும் ஆண்களின் வீதம் 2.9 சதவீதமாகவும், பெண்களின் வீதம் 10 சதவீதமாகவும் உள்ளது. இந்த புள்ளி விபர அறிக்கை இந்திய மாதிரி பதிவு திட்டம் 2010ன் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழகத்தை தொடர்ந்து 8.2 சதவீதத்துடன் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும், 7.2 சதவீதத்துடன் ஒடிசாவும், 7.1 சதவீதத்துடன் இமாச்சல பிரதேசமும், 7 சதவீதத்துடன் மகாராஷ்டிராவும் உள்ளது. மனைவியை பிரிந்து வாழும் ஆண்களின் பட்டியலிலும் 14.5 சதவீதத்துடன் தமிழகமே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment