சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, November 21, 2010

அண்ணியா மனைவியா?

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு கணவன் வீட்டு முன் மனைவி உண்ணாவிரதம்
தினகரன் 22/11/2010

குலசேகரம் குமரி மாவட்டம் திருவட்டார் அடுத்துள்ள ஆற்றூரைச் சேர்ந்த முத்துக்குட்டி மகள் விஜயராணி(29). லேப் டெக்னீஷியன் படித்துள்ளார். இவருக்கும் குலசேகரத்தை அடுத்த இட்டகவேலி பண்டாரவிளையைச் சேர்ந்த பத்மராஜ் என்பவருக்கும் கடந்த பிப்.3ம் தேதி திருமணம் நடந்தது. தம்பதியினர் பத்மராஜின் அண்ணன் சுவாமிதாஸ், மனைவி செல்வியுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். அப்போது செல்வி, விஜயராணியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்விக்கும், பத்மராஜூக்கும் தகாத உறவு இருந்ததை அறிந்து விஜயராணி கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த பத்மராஜ், செல்வியுடன் சேர்ந்து மனைவியை தாக்கியுள்ளார். இதனால் விஜயராணி 6 மாதங்களுக்கு முன் தாயார் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று கணவன் வீட்டுக்கு உறவினர்களுடன் வந்த விஜயராணி பூட்டிக்கிடந்த வீட்டின் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். திருவட்டார் போலீசார் விஜயராணியிடம் விசாரணை நடத்தினர். பூட்டிய வீட்டை திறந்து விஜயராணியை வீட்டிற்குள் அனுப்பினர். அவர் வீட்டுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.1 comment:

Ravi kumar Karunanithi said...

kandippaga ottu podugiren.. good padhivu

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.