சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, November 18, 2010

சட்டங்களை ஏமாற்றும் இளம் மனைவியர்!

பின்வரும் செய்தியைப் படித்தால் இந்தியாவில் நடக்கும் அநியாயம் உங்களுக்கு தெளிவாகத் தெரியும். “பெண்” என்ற ஒரே ஒரு அங்க அடையாளத்தை சாதகமாக்கிக்கொண்டு பெண்கள் சட்டங்களையும், அரசாங்கத்தையும் எப்படியெல்லாம் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொண்டிருக்கிறார்கள்!


பெண்ணை ஏமாற்றியதாக சிக்கினார்
19 நவம்பர் 2010 தினகரன்

துரைப்பாக்கம் : திருவான்மியூர் லட்சுமிபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ரோஜா (26). கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் நீலாங்கரையில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் ஜெகனை சேர்த்துள்ளார். அப்போது, மறுவாழ்வு மையத்தை நடத்தும் சாருஹாசனுடன் (29), ரோஜாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதுதெரிந்து மனைவியை விட்டு ஜெகன் விலகிச் சென்றார். அதன்பின், ரோஜாவை கோயிலில் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தியிருக்கிறார் சாருஹாசன். குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ரோஜா கூறியபோது, அவர் மறுத்துவிட்டாராம். இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், தலையில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் ரோஜா வந்தார். அவர் போலீசாரிடம் கூறுகையில், ‘சாருஹாசன் எனது தாலியை பறித்துக் கொண்டார்.

அவருடன் மீண்டும் என்னைச் சேர்த்து வைக்க வேண்டும், அல்லது அவரை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என்றார்.

அவரை குளித்து விட்டு வரும்படி அனுப்பினார் உதவி கமிஷனர் நரசிம்மவர்மன் கூறினார். அதன்படி ரோஜா குளித்து விட்டு வந்ததும், சாருஹாசனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் ரோஜாவை ஏற்க மறுக்கவே, பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கைவிட்டதாக வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

========

மேலுள்ள செய்திப்படி பெண் தனது கணவனை ஏமாற்றி வேறு ஒருவருடன் கள்ளக் காமம் செய்யலாம். சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்தியாவில் ஆணுக்கு மட்டும்தான் இந்த சட்டம் போலிருக்கிறது. விவாகரத்து செய்யாமலேயே மற்றொரு ஆணை திருமணம் செய்யலாம் தவறில்லை என்று பெண்ணுக்கு தனி சட்டம் இருப்பது மேலுள்ள செய்தியின் மூலம் அறியலாம்.

காவல் நிலைய கட்டப்பஞ்சாயத்தில் கூட முதல் கணவனை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்தாய் என்று ஒரு கேள்வி கூட எழவில்லை போலிருக்கிறது. கைது செய் அல்லது தீக்குளிப்பேன் என்று பெண் சொன்னவுடன் ஆண் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டார்கள். நல்ல விசுவாசமான அதிகாரிகள். இந்தியாவில் பெண்கள் எந்தத் தவறும் செய்யலாம். பெண்கள் செய்யும் குற்றங்களை காவல்துறை, நீதிமன்றம் உட்பட யாரும் தட்டிக்கேட்க முடியாது. ஏனென்றால் பெண்கள் நாட்டின் கண்கள் அல்லவா!

இப்படித்தான் இந்தியாவில் பல இளம்பெண்கள் தங்களின் குற்றங்களை மறைக்க கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குப் பதிவுசெய்து கைது செய்யவேண்டும் என்று காவல்துறையில் மீசையை முறுக்கி நிற்கும் ஆட்களைக்கூட மிரட்டி தங்கள் வழிக்குக் கொண்டுவந்துவிடுகிறார்கள். பாவம் காவல்துறை. கன்னியரின் கட்டளைக்கு அடிபணிந்து அப்பாவிகளுக்கு அநீதி இழைத்து பாவத்தை சம்பாதிக்கிறது.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.