சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, November 27, 2010

காமத்திற்கும் உண்டோ கருணை!

தினமலர் நவம்பர் 28,2010

குறிஞ்சிப்பாடி : கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை அடித்து கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

வடலூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் மனைவி அம்சவள்ளி (24). சசிகுமார் கடந்த ஆறு மாதத்துக்கு முன் இறந்தார்.அம்சவள்ளிக்கும் இறந்த கணவர் சசிகுமார் நண்பர் வானதிராயபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் வேதநாயகத்திற்கும் (28) தொடர்பு ஏற்பட்டது.இந்நிலையில் அம்சவள்ளி நெய்வேலியில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை கடையில் வேலைக்கு சேர்ந்தார்.அங்கு மேலாளராக உள்ள மும்முடிசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் பழனிவேல் (30) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பழனிவேல் அடிக்கடி அம்சவள்ளி வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அறிந்த வேதநாயகம், பழனிவேலை பலமுறை கண்டித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வேதநாயகம், அம்சவள்ளி வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு பழனிவேலுவை பார்த்ததும் ஆத்திரம் அடைந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். அதில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கொலையை மறைக்க வேதநாயகமும், அம்சவள்ளியும் முடிவு செய்தனர். அதன்படி அம்சவள்ளி வடலூர் போலீசில் பழனிவேல் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் வேதநாயகம் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை கைப்பற்றினர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வேதநாயகத்தை கைது செய்தனர்.

========

ஒரு பெண் எத்தனை ஆட்களைத்தான் சமாளிப்பது. கொஞ்சம்கூட கருணையே இல்லாத ஆண்கள். இதுபோன்ற ஆண்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று வாரியத்தலைவிகள் கூப்பாடு போடுவார்கள்!

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.