இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, November 26, 2010

பெண்ணின் திருமணம் நின்றுபோனால் மந்திரிகளின் உயிருக்கு ஆபத்து!


சகோதரிகள் இரண்டாவது திருமணம் நின்றதால் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் எழுதினேன்
தினகரன் 27 நவம்பர் 2010

சென்னை: முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பலருக்கு மிரட்டல் கடிதம் எழுதியதாக மோகன் (27) என்பவரும் அவரது சகோதரிகள் 2 பேரும் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து கிண்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் இருவரும் நேற்று மாலையே திருச்சி கொண்டு செல்லப்பட்டனர்.


போலீஸ் விசாரணையில் மோகன் கூறியதாவது: எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டை. எம்.எஸ்சி படித்துள்ளேன். சகோதரிகள் கிரிஜா (35), அரசு பள்ளி ஆசிரியை. லதா (33), கிராம நிர்வாக அலுவலர். இருவரும் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு 2வது திரு மணம் செய்து வைப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த பழக்கடை நாகராஜ், அவரது தம்பி கனகராஜ் ஆகியோரை அணுகினேன்.


திருமண ஏற்பாடு சிறப்பாக நடந்தபோது உறவினர் பாஸ்கர் என்பவர் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், திருமணம் செய்ய மறுத்த நாகராஜ், கனகராஜ் ஆகியோரை பழிவாங்க நினைத்தேன். அவர்களை எப்படியாவது போலீ சில் சிக்க வைக்க துடித் தேன்.


அதற்காக அவர்கள் பெயரில் முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பலருக்கு மிரட்டல் கடிதம் எழுதினேன். இறுதியில் போலீசாரின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டேன். எனது சகோதரிகளின் திருமணம் நின்று போன விரக்தியில்தான் இவ்வாறு செய்தேனே தவிர எங்களுக்குள் வேறு எந்த முன்விரோதமும் கிடையாது. இவ்வாறு மோகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

=========

பொய் வழக்குப் போட்டு கணவனைப் பிரிந்து வாழும் 498A பெண்கள் அரசாங்கம் கொடுத்த சட்டத்தின் மூலம் தாங்களாகவே அழித்துக்கொண்ட தங்கள் வாழ்க்கையை நினைத்து நொந்துபோய் யாரையெல்லாம் எப்படியெல்லாம் பழிவாங்கப்போகிறார்களோ? முக்கியப் புள்ளிகள் ஜாக்கிரதை!




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.