சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, November 25, 2010

இந்திய கள்ளக்காதலிகளின் கட்டுக்கடங்காத அட்டகாசம்

தினமலர் 26 நவம்பர் 2010

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான விசாரணைக் கைதியை, கொல்ல முயன்ற பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை அடுத்த அடப்பன்காரச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன்(38); இவரது மனைவி இந்திராணி(33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி(30) என்பவருக்கும், கள்ளத்தொடர்பு இருந்தது. மனைவியின் கள்ளத்தொடர்பை லட்சுமணன் கண்டித்தார்.

ஆத்திரமடைந்த இந்திராணி, கள்ளக்காதலன் பழனிச்சாமி உதவியுடன் கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அக்., 29, 2008ல், லட்சுமணனை கடத்திச் சென்ற பழனிச்சாமி, அன்னவாசல் அருகிலுள்ள தைலமர காட்டில் அடித்துக் கொலை செய்து, பிணத்தை வீசிச் சென்றார். அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில், லட்சுமணனை அவரது மனைவி இந்திராணி தூண்டுதலின் பேரில், கள்ளக்காதலன் பழனிச்சாமி, இவரது ஆதரவாளர்கள் அடப்பன்காரசத்திரம் பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ், செல்வம், பாண்டியன், பாலசுப்பிரமணியன், ராஜமாணிக்கம் ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடிவந்தனர்.குற்றஞ்சாட்டப்பட்ட இந்திராணி உட்பட ஏழு பேரும், கீரனூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இவர்களை போலீசார், திருச்சி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான வழக்கு, புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட இந்திராணி உட்பட ஏழு பேரும், ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இவர்களில் பழனிச்சாமி மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதால், அவரை மீண்டும் கைது செய்த அன்னவாசல் போலீசார், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கீரனூரைச் சேர்ந்த வி.ஏ.ஓ., ராதாகிருஷ்ணன் மகன் ரஞ்சித்(27) என்பவருடன் இந்திராணி, கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இச்சம்பவம் சிறையில் இருந்த பழனிச்சாமிக்கு தெரிந்து, இந்திராணியை கண்டித்தார். இருந்தும், இவர்களது கள்ளத்தொடர்பு நீடித்தது.இந்நிலையில், லட்சுமணன் கொலை வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நேற்று விசாரணை நடந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, பழனிச்சாமியை போலீசார் அழைத்து வந்தனர். இவருடன் வழக்கில் தொடர்புடைய இந்திராணி உட்பட மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

வழக்கு விசாரணை டிச., 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இவர்கள் ஏழு பேரும் கையெழுத்து போடுவதற்காக, நீதிமன்றத்துக்குள் காத்திருந்தனர். அப்போது, கத்தியுடன் வந்த இந்திராணியின் இரண்டாவது கள்ளக்காதலன் ரஞ்சித், கள்ளக்காதலன் பழனிச்சாமியை குத்த முயன்றார். சுதாரித்துக் கொண்ட பழனிச்சாமி, அவரது கையை தட்டி விட்டு, இருவரிடையே கைகலப்பு நடந்தது.உஷாரடைந்த போலீசார், நீதிமன்றத்துக்குள் கைதியை கொலை செய்ய முயன்ற ரஞ்சித், இவரது நண்பர் மருதாந்தøலை கிராமத்தைச் சேர்ந்த பிரபு(28), இவர்களை தூண்டிவிட்ட இந்திராணி ஆகியோரை கைது செய்தனர்.இச்சம்பவம், புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் நேற்று மதியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

============

கள்ளக்காதலிகளுக்கு சரியான பயிற்சி அளித்துக் கணவனை பக்குவமாகக் கொல்வது எப்படி என்று பாடம் நடத்தினால் இதுபோல் அப்பாவித்தனமாக மாட்டிக்கொள்ள மாட்டார்கள். இந்த அபலைப் பெண்களின் நலனுக்காக யாராவது குரல்கொடுக்கமாட்டார்களா? கள்ளக் காமம் என்ற இந்திய பிறப்புரிமையை பெண்களுக்கு சட்டப்பூர்வமாக பெற்றுத்தரப்போவது யார்? “வாரியங்களும்” “அமைச்சகமும்” தனியாக பயிற்சிப் பாசறை அமைத்து பயிற்சி கொடுத்தால்தான் இதுபோன்ற பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை கட்டுப்படுத்த முடியும்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.