1. அடிப்படை தேவையைக் கொடுக்கமாட்டோம். ஆனால் தேவையற்ற இலவசங்களை வேண்டாமென்றாலும் கட்டாயப்படுத்திக் கொடுப்போம்.
(தினமலர்) "டிவி' கொடுத்தும் பயனில்லை: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சிக்குட்பட்ட துரைகுளம் ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் உள்ள குடிசைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டும் அவற்றை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2. மக்களை மனிதாபிமானத்துடன் நடத்தமாட்டோம். அனைத்து இடங்களிலும் இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கமாட்டோம். ஆனால் நாங்கள் மிகவும் பண்பானவர்கள், கருணை மிக்கவர்கள், அன்பானவர்கள் என்று உலகெங்கும் பெருமை பேசித்திரிவோம்.
(தினமலர்) சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுதிறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த மாற்றுதிறனாளிகள் வளாகத்திலிருந்து, அலுவலகம் வரை சிலர் குதித்தும், சிலர் ஊர்ந்தும், தவழ்ந்தபடி வந்தனர். மாற்றுதிறனாளிகளை அழைத்து வர அமைக்கப்பட்ட சக்கர வாகனம் பயன்படுத்தாததால் பொதுமக்கள் பலர் முகம் சுளித்துக்கொண்டனர்.
(இந்த படத்துடன் தொடர்புடைய மற்றொரு பதிவு:நல்லதை கற்க மறுக்கும் இந்தியர்கள்)
(இந்த படத்துடன் தொடர்புடைய மற்றொரு பதிவு:நல்லதை கற்க மறுக்கும் இந்தியர்கள்)
3. எல்லோரும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கண்டிப்பாக நடந்துகொள்வோம். அறிவுரைகளை அள்ளி வழங்குவோம். நீதிதேவதையின் மானத்தையே நாங்கள்தான் கடுமையான சட்டங்கள் மூலம் காப்பாற்றி வருகிறோம் என்று சொல்வோம். ஆனால் அந்த சட்டங்களை நாங்கள் கடைபிடிக்கமாட்டோம். அது எந்த சட்டங்களானாலும் சரி.
(தினமலர்) சட்டப்படி நம்பர் பிளேட் எழுதப்படாத வாகனங்களுக்கு அக்., 20 வரை கெடு விதித்த எஸ்.பிரபாகரன் எஸ்.பி., அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே போலீஸ்காரர் முன்பே விதிமீறிய டூவீலர் சென்றது. (அடுத்த படம்) விருதுநகர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்.
இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லி நாம் பெருமைப்படும் இந்தியாவா?
No comments:
Post a Comment