சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, November 21, 2010

அண்ணாமலை தீபமும் ஆண்கள் அமைச்சகமும்

அண்ணாமலை தீபமும் ஆண்கள் தினமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த விஷயங்களை மத உள்நோக்கம் இல்லாமல் புரிந்துகொண்டால் இந்திய ஒருமைப்பாட்டை வெளிநாட்டுக்காரன் கொடுக்கும் காசிற்காக அடமானம் வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் அசிங்கமான முகத்தை நீங்கள் தோலுரித்துப் பார்க்கலாம்.

கீழுள்ள முதல் செய்தியைப் பாருங்கள்.


திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
தினமலர் 22 நவம்பர் 2010

மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேதராக முருகன், அண்ணாமலையார் சமேதராக உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்கக் கொடி மரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பஞ்சமூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். மாலை 5.59 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் தங்கக் கொடி மரம் முன் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் கொண்டு வந்து கொடி மரத்தின் முன் உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்பட்டது. பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு, அவற்றை கொண்டு 2 ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் ஏற்றும் காட்சியை 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அர்த்தநாரீஸ்வரர் ஆண்டில் ஒரு முறை மஹாதீபத்தன்று மட்டுமே கோவில் கொடி மரத்தின் பலி பீடம் அருகே வந்து அருள்பாலிப்பார்.

==============

பல ஆண்டுகளாக திருவண்ணாமலையில் நடந்து வரும் தீபத்திருவிழாவின் உள்நோக்கம் என்னவென்றால் ஆணும் பெண்ணும் சரி சமமானவர்கள் என்ற தத்துவத்தைப் வெளிக்காட்டும் விதமாக இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

திருவிழாவின் கடைசி நாளான தீபத்திருநாள் அன்று அர்த்நாரீஸ்வரர் என்னும் விக்ரகத்தை குறிப்பிட்ட நிமிடத்திற்குள் காட்சியளிக்கச் செய்து மீண்டும் ஆலயத்திற்குள் எடுத்துச் சென்றுவிடுவார்கள். இந்த அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் என்பது வேறொன்றுமல்ல ஆண் கடவுளும், பெண்கடவுளும் சரி சமமாக இருக்கும் ஒரு நிலை (அர்த்தம் = பாதி, நாரி = பெண், ஈஸ்வரர் = ஆண்). இந்த சமுதாயத்தில் ஆண் பெண் பாரபட்சமின்றி சமமாக நடத்தப்பட்டால் இந்தப் பிரபஞ்சத்தின் ஐம்பெரும் சக்திக்கு இணையாக ஆற்றல் பெறலாம் என்ற தத்துவத்தைத்தான் இந்தத் திருவிழா காட்டுகிறது.

இந்தத் தத்துவத்தை உலகிற்கு காட்டும் திருவிழாதான் தீபத்திருவிழா. இதுபோன்ற அரிய நல்ல வாழ்க்கைத் தத்துவங்களை மக்களுக்குப் புகட்டாமல் நமது நல்ல கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறைத்து வெளிநாட்டுக்காரன் கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருதலைபட்சமாக சட்டங்களை இயற்றி ஆண் பெண் இருவரிடையே சமமற்ற நிலையை உருவாக்கி இந்திய சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய ஏற்றத்தாழ்வையே இந்திய அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டார்கள். இதன் வெளிப்பாடுதான் பெண்ணை பாதுகாக்கிறேன் என்று கூறிக்கொண்டு உருவான பல ஒருதலைபட்சமான தவறான சட்டங்கள். நல்ல வாழ்க்கைத் தத்துவத்தை உலகிற்கே சொல்லும் நமது நாட்டை பல தவறான சட்டங்கள் மூலம் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அது எந்த அளவிற்கு மோசமாகப் போய்விட்டது என்பதைத்தான் அடுத்த செய்தி சொல்கிறது. பெண்ணை பாதுகாக்கிறேன் என்று ஆடுகளைப் பார்த்து கண்ணீர் விடும் ஓநாய் போல பல சுயநலவாதிகள் ஆண்களை அழித்து ஒழிப்பதுதான் பெண்களின் சமஉரிமை என்று தவறான எண்ணத்தை உருவாக்கி பல தவறான சட்டங்களை பெண்களின் கையில் கொடுத்து சமுதாயத்தை சீர்குலைத்துவிட்டார்கள். இந்தியாவின் பாரம்பரியத்தையும் நல்ல கருத்துக்களையும் மறந்திருப்பது மகா அவமானம்.ஊழியர்கள், அலுவலர்கள், தொழிற்சங்கங்கள் என பல தரப்பினரும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவர். இதில் புதுவிதமாக, "ஆண்களுக்கு தனி ஆணையமும், அமைச்சகமும் ஏற்படுத்த வேண்டும்' என்று விநோத கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. அகில இந்திய ஆண்கள் நலச்சங்கத்தினர் தான், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கொடி பிடித்துள்ளனர்.நவம்பர் 19ம் தேதி, உலக ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடந்த 19ம் தேதி சென்னை, டில்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில், ஆண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தர்ணா மற்றும் ஊர்வலங்கள் நடந்தன.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், அகில இந்திய ஆண்கள் நலச்சங்க உறுப்பினர் சுரேஷ் ராம் கூறியதாவது:ஆண்களுக்கு எதிராக, வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏராளமான பொய் வழக்குகள் போடப்படுகின்றன. வரதட்சணை, குடும்ப வன்முறை உட்பட பெண்கள் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும், ஆண் எதிர்ப்பு சட்டங்கள் தான். ஆண், பெண் இரு பாலருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் இயற்ற வேண்டும். பெண்களுக்காக பல மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்களை தாக்கும் நோய்களுக்கு தீர்வு காணும் வகையில் திட்டங்களை உருவாக்குவது கிடையாது. பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தவறாக ஆண்கள் மீது பயன்படுத்துகின்றனர். ஆண்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்பட தனி ஆணையம் மற்றும் அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு பொரிந்து தள்ளினார் சுரேஷ் ராம்.
இந்த கோரிக்கைகள் வேடிக்கையாக இருந்தாலும், பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டு வருவது தான், ஆண்களை கோஷம் போட வைக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது. வரும் காலங்களில் ஆண்களுக்கு ஆதரவாக, தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகள் வாய்க்குவந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும் வியப்பதற்கில்லை.

அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற கீழ்கண்ட இணைய தளத்தை தொடர்பு கொள்ளவும். அல்லது அகில இந்திய அளவிலான தன்னார்வ தொண்டர்களை தொடர்பு கொள்ளலாம்.

Tele-Support Help Desk

TAMIL NADU

Ariyalur Anbazhagan: 94452 14658
Sivagangai Francis: 99620 04649
Chennai Asif: 98403 84114
Francis: 99620 04649
Suresh Ram: 99410 12958

Thanjavur G.Babu: 98221 25872
Cuddalore Ramesh: 94444 88301
Tiruchi Arul David: 98401 66695
Coimbatore Padmanaban: 97900 19658
Thirupur Murugesan: 99947 75913
Erode Krishna: 98941 03539
Tirunelveli Raja: 97873 44744
Karur Rajasekar: 98434 44894
Tuticorin Jayakanthan: 94881 03531
Madurai Prem: 98411 12337
Tiruvallur
Nagekoil Dr. Greens: 98403 25026
Ramanathapuram Kalai Selvan: 94451 19559
Namakkal M.Valavan: 94880 35489
Virudhunagar Ramesh: 94433 39802
Nagapattinam Suresh Ram: 99410 12958
Villupuram Ramana: 98948 49091
Kanchipuram Sridhar: 98410 66946
Vellore Sanjeev: 97872 83241

Bangalore

English/Hindi 9886368480
Kannada 9880491289 / 9902055933

Hyderabad

9704683163

All India – State-wise

All India 92434 73794 (Bangalore)
Tamil Nadu 98403 24551 / 99410 12958
Delhi 98106 11534
Maharashtra 98693 23538 / 92243 35577
Karnataka 98451 43724 / 93428 54372
Rajasthan 93525 62456
West Bengal 98301 51555
Andhra Pradesh 98482 80354
Gujarat 98989 89884
Uttar Pradesh 98390 38424 / 93350 14984
Vidharba 98909 74788
Kerala 99954 33034
Chattisgarh 94255 56519
Goa 98221 25872


===========

பெண்களுக்கு அமைச்சகம், வாரியம், பெண்களைத் தவறு செய்யத் தூண்டும் விதமாக பல அடுக்கடுக்கான சட்டங்கள் இவைகளெல்லாம் ஆச்சரியமான விஷயங்கள் கிடையாது. ஆனால் ஆண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைச் சொன்னால் அது வினோதம்! இப்படிப் பட்ட மனப்பான்மை எப்போது இந்த சமுதாயத்தில் மாறுமோ அப்போதுதான் இந்தியா நல்ல நிலையை அடையும். அதுவரை பல இளைஞர்கள் அரசாங்கத்தால் தவறான பாதைக்கு திசை திருப்பப்படுவார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள் வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்.
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.