சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, June 28, 2013

வரதட்சணை வழக்கில் பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர் அடித்த லூட்டி!!

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள்  பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று அவர்களது குடும்பம் நாசமாக வேண்டும்  என்பது எழுதப்படாத இந்திய  சட்டம்  என்று அனைவருக்கும் தெரியும்.   பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி வேதனைப்படும் குடும்பங்களில் பிணந்திண்ணி கழுகு போலமுடிந்தவரை பிடுங்கித்தின்று பல காவல்- மற்றும் சட்டக்-குடும்பங்கள் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதும் அவரவர் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.

பிணத்தை உண்டு வாழும் கழுகிற்கும், ஓநாய்களுக்கும் அது திண்ணும் பிணம் நல்லவனின் உடலா அல்லது கெட்டவனின் உடலா என்று தெரியுமா? அல்லது அது என்றாவது அது பற்றி யோசித்திருக்குமா?   எது கிடைத்தாலும் திண்ணும்.  அதுபோலத்தான் வரதட்சணை வழக்கு என்றால் அது உண்மையான வழக்கா அல்லது பொய் வழக்கா என்று சற்றும் கவலைப் படாமல் புகார் கொடுத்தவர், குற்றம் சாட்டப்பட்டவர் என இரு தரப்பிலும் பணத்தை பிடுங்கலாம் என்று வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன காவலும் நீதியும்.

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் சமுதாயத்தை சீர் குலைத்து, ஊழலுக்கு வழி வகுத்து, மனித உரிமை மீறல்களை செய்யும் கருவியாக்கப்பட்டு காவல் மற்றும் நீதித்துறைகளை அப்பாவிகளை துன்புறுத்தி பணம் பிடுங்கும் பிணந்திண்ணிகளாகவே மாற்றிவிட்டன என்று அறிந்துகொள்ள  டில்லி நீதிமன்ற தீர்ப்பினையும் இன்றைய செய்தித்தாளில் வந்துள்ள செய்தியையும் ஒப்பிட்டால் தெள்ளத் தெளிவாக தெரியும்.
IN THE COURT OF Dr. KAMINI LAU: ADDL. SESSIONS

JUDGE-II (NORTH-WEST): ROHINI COURTS: DELHI

Criminal Revision No. 377/2010

Man Mohan Sharma ............ Petitioners/ Revisionists   Vs    State of NCT of Delhi............. Respondent

Dated: 25.2.2011Lastly, I am compelled to observe that Section 498A IPC in the recent years has become consummate embodiment of gross human rights violation, extortion and corruption and even the Apex Court of our country had acknowledged this abuse and termed it as Legal Terrorism. The provisions of Section 498 A IPC are not a law to take revenge, seek recovery of dowry or to force a divorce but a penal provision to punish the wrong doers. The victims are often misguided into exaggerating the facts by adding those persons as accused who are un-connected with the harassment under a mistaken belief that by doing so they are making a strong case. Courts cannot be a party to any kind of exploitative situation and it is necessary for every complainant to remember that it is only an honest complaint which succeeds in law where contents are supported by facts on the ground and persons, who are not connected with the harassment, should never be arrayed as accused. The platform of the courts cannot be permitted to be used to wreck personal vendetta or unleash harassment and the tendency of the complainants to come out with inflated and exaggerated allegations by roping in each and every relation of the husband is required to be deprecated. The obligation of the court is to ensure that innocent persons are not put to harassment and to curtail the frivolous allegations at the earliest stage by looking for due corroboration from the facts. (Ref.:- Savitri Devi Vs. Ramesh Chand & Ors., CRL (R) 462/2002 decided on 30.5.2003); Criminal Appeal No. 339-41/05 datde 2.3.2010, Delhi High Court; Arjun Ram Vs. State of Jharkhand & Anr., 2004 CLJ 2989; Mukesh Rani Vs. State of Haryana, 2002 (1) RCR (Criminal) 163 and Anu Gill Vs. State & Anr., 2001 (2) JCC (Delhi) 86.

I may further add that in any matrimonial dispute, it is the primary duty of every court to ensure that for any fault of the husband, his other relatives including married sisters and brothers who may be living jointly or separately and the aged parents are not involved either out of vengeance or to curl out appropriate settlement.


திருச்சி: பாஸ்போர்ட் பிரச்னையை தீர்த்து வைப்பதாக, லஞ்சம் வாங்கிய, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, திருவானைக்காவல், மாம்பழச்சாலையை சேர்ந்த வெங்கடேஷ் மீது, அவரது மனைவி, வரதட்சணை கேட்பதாக புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரில், அவரது உறவினர் ஜீவநாயகம் என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. அதனால், அவரது பாஸ்போர்ட்டை, திருவெறும்பூர் மகளிர் போலீசார், முடக்கி வைத்திருந்தனர்.

மலேசியாவில், வேலைக்கு செல்லவிருந்த ஜீவநாயகத்துக்கு, இதனால் சிக்கல் ஏற்பட்டது. பாஸ்போர்ட் பிரச்னையை, தீர்க்க, புரோக்கர் கிறிஸ்டோபர் என்பவர் மூலம், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினியிடம் பேச்சு நடந்தது.  இதற்கு, 35 ஆயிரம் ரூபாய், லஞ்சம் தர வேண்டும் என, கார்த்திகாயினி கேட்டுள்ளார். இறுதியாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என, பேரத்தில் முடிவானது.

ஆனால், பணம் கொடுக்க விரும்பாததால், இது குறித்து, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில், புகார் செய்யப்பட்டது. போலீஸ் ஆலோசனைப்படி, நேற்று பிற்பகலில், பெண் போலீசாரிடம் பணம் கொடுக்கப்பட்டது. அப்போது, கார்த்திகாயினி, 38, புரோக்கர் கிறிஸ்டேபார், 55, ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர். திருச்சி மன்னார்புரம் அரசு குடியிருப்புப்பில் உள்ள, கார்த்திகாயினி வீட்டில், சோதனை நடத்தினர். பின்னர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கார்த்திகாயினியின் கணவர் கார்த்திகேயன், சேலம், அரசு மருத்துவமனை டீனாக உள்ளார்.

Tuesday, June 18, 2013

முடிவில்லா குழப்பத்தில் முடியப்போகும் இந்தியத் திருமணங்கள்!!!

குழப்ப நிலையில் இருக்கும் இந்தியாவைப் போலவே இந்திய சட்டங்களும் அவற்றை விளக்கும் நீதிமன்றங்களின் கருத்துக்களும் இருக்கின்றன என்பதற்கு பின்வரும் செய்தி நல்ல உதாரணம்.

பின்வரும் செய்தியில் சென்னை உயர்நீதிமன்றம் வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மனைவியாக கருதப்படுவர் என்றும் மத முறைப்படி திருமணம் நடத்துவது, திருமணத்தை பதிவு செய்வது  போன்றவை வெறும் வெற்றுச் சடங்குகள் என்று கூறியிருக்கிறது!!!  இந்த விளக்கத்தின் மூலம் பின்வரும் கேள்விகளுக்கு இப்போது பதில் தெரியவில்லை!!!
 1. வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படும் என்றால் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என்று சட்டம் எடுத்துக் கொள்ளுமா? உறவில் ஈடுபட்ட பெண் திருமணம் செய்த மனைவியைப் போல வாடிக்கையாளர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவற்றை பய்ன்படுத்த முடியுமா? இல்லை உறவிற்கு பணம் பெற்றதால் அதை விபச்சாரமாகத்தான் கருதுமா?  அப்படியென்றால்..... பின்வரும் இரண்டாவது கேள்விக்கு என்ன பதில்?
 2. எல்லா சடங்குகளுடனும் திருமணம் செய்யும் இளம் பெண்கள் பலர் சில இரவுகள் கணவனுடன் கழித்துவிட்டு பிறகு பெருந்தொகையை  நஷ்ட ஈடாக கணவனிடம் கேட்டு குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள்.  (இந்தப் பெண்கள் உயர் கல்வி கற்று நல்ல பணியில் இருக்கிறார்கள்.  கணவனின் பணம் இல்லாமல் சுயமாக வாழமுடியும்)  உறவுக்கு பணம் கேட்கும் இவர்களை சட்டம் விபச்சாரிகளாக கருதுமா?
 3. திருமணத்தை பதிவு செய்வது வெறும் சடங்கு என்று சென்னை உயர்நீதிமன்ற  தீர்ப்பு செய்தி சொல்கிறது.  ஆனால் இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது .  பதிவு செய்யாதவர்களுக்கு தண்டனையும் உண்டு என்று கூறியிருக்கிறது.  இப்போது எந்த நீதிமன்றம் சொல்வதை எடுத்துக்கொள்வது??

  The Hindu :  Register all marriages: Supreme Court www.hindu.com/2007/10/26/stories/2007102656810100.htm Oct 26, 2007 – NEW DELHI: The Supreme Court on Thursday ordered compulsory registration of marriages of couples belonging to all religions across the ...

 4. சரி இந்திய உச்ச நீதிமன்றம் சொல்லும் கட்டளையை பின்பற்றி திருமண பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய ஆண் பெண் இருவரும் உறவு கொண்டதை அடிப்படையாக வைத்து  அதை “திருமணம்” என்று பதிவு செய்வார்களா?  பின்வரும் செய்தியில் தாலி கட்டுவது, மத சடங்குகளை நடத்துவது எல்லாம் ஒரு  வெற்று சடங்குதான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் திருமண பதிவு சட்டம் அந்தந்த மத முறைப்படி திருமணம் நடந்திருந்தால்தான் அதை (சிறப்பு திருமணங்களைத் தவிர) குறிப்பிட்ட மதத் திருமணமாக பதிவு செய்யமுடியும் என்று கூறுகிறது.

  Proof for all these shall be given  for Hindu Marriage
  1 . MARRIAGE  Wedding Invitation (or)
  Temple Marriage Receipts (or)
  Any proof of marriage solemnization
  2. RESIDENCE ID Card (or)
  Ration Card (or)
  Driving License (or)
  Passport or Visa
  3. AGE Birth Certificate (or)
  School/College Certificate (or)
  Passport / Visa 
இப்போது எந்த விஷயம் சரி எது தவறு என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  இந்தியாவில் தெளிவான சட்டங்கள் கிடையாது.  ஏமாந்தவனை தண்டிக்க வெள்ளையன் பயன்படுத்திய சட்டம் இன்றும் மக்களை குழப்பி அப்பாவிகளை தண்டிக்க மட்டுமே பயன்படுகிறது.

தாலி கட்டி, மாலை மாற்றி, அக்னி வலம் வந்தால் தான் திருமணமா?

 தினமலர் 18 ஜூன் 2013

சென்னை:"சட்டப்படியான வயது நிரம்பிய ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், அன்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், முஸ்லிம் வழக்கப்படி, 1994ம் ஆண்டு, திருமணம் நடந்தது. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 1999ம் ஆண்டு, எங்களை விட்டு விட்டு, அன்வர் சென்று விட்டார். அவர், வியாபாரம் செய்து வருகிறார். மாதம், 25 ஆயிரம் ரூபாய், சம்பாதிக்கிறார்.ஜீவனாம்சம் கேட்டு, கோவை, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். என் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், "பாத்திமா, என் மனைவி அல்ல; குழந்தைகள் எனக்கு பிறக்கவில்லை; முஸ்லிம் வழக்கப்படி, திருமணம் நடந்திருந்தால், ம‹தியில் உள்ள, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல கோர்ட், "இரண்டு குழந்தைகளும், ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. ஆவண சாட்சியங்கள் மூலம், திருமணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற, பாத்திமாவுக்கு உரிமையில்லை' என, உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை, என்னைப் பொருத்தவரை, ரத்து செய்ய வேண்டும். ஜீவனாம்சம் பெற, எனக்கு உரிமையுள்ளது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தொடர்பாக, அனைத்து சடங்குகளையும் பின்பற்றினால் தான், அது, செல்லத்தக்க திருமணம் என்கிற பொருள் அல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரை, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை; ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்து, மருத்துவமனை ஆவணங்களில், கணவர் கையெழுத்திட்டுள்ளார்.எனவே, குழந்தைகள், முறைதவறி பிறந்தது என்கிற கேள்வி எழவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பின் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, கணவர் கையெழுத்திட்டுள்ளதால், பாத்திமா தனது மனைவி என்பதை, கணவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். திருமண சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம்; கண்டிப்பு இல்லை.

ஒரு பெண், 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன், செக்ஸ் உறவு கொண்டு, அதன் மூலம், கர்ப்பமுற்றால், அந்தப் பெண்ணை, மனைவி என்றும், ஆணை, கணவன் என்றும் கருத வேண்டும். அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர்.

உடல் ரீதியான தொடர்புக்குப் பின், அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து விட முடிவெடுத்தால், கோர்ட் மூலம் விவாகரத்து பெறாமல், வேறு திருமணம் செய்ய முடியாது.

தாலி கட்டுவது, மாலை, மோதிரம், மாற்றிக் கொள்வது, அக்னி ”ற்றி வருவது, திருமணத்தை பதிவு செய்வது, இவை எல்லாம், சமூகத்தை திருப்திபடுத்த, ஒவ்வொருவரும் தங்கள் மத வழக்கப்படி செய்து கொள்பவை.


இருந்தாலும், எந்த ஜோடியும், சட்டப்படி திருமண வயதை எட்டிய பின், உடல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டால், அதை, செல்லத்தக்க திருமணம் என கருத வேண்டும்.

அவர்களை, கணவன், மனைவி என, கருத வேண்டும்.மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திருமணங்களிலும், உடல் ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால், அந்த திருமணம் தோல்வியடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். எனவே, செல்லத்தக்க திருமணத்தில், சட்ட ரீதியான முக்கிய அம்சம், கணவன், மனைவிக்கு இடையேயான, உடல் ரீதியான தொடர்பு.இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரருக்கு, ஜீவனாம்ச தொகை, மாதம், 500 ரூபாய், 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், பாக்கித் தொகையை, கணவர் வழங்க வேண்டும். அதன்பின், மாதம் தோறும், வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Saturday, June 15, 2013

அடுத்தவன் மனைவி மீது எப்பவுமே நமக்கு தனி பாசம்தான்!! கோவை நீதிமன்றத்தில் நடந்த சம்பவம்

சமீபகாலமாக இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் சில இரவுகளுக்குப் பிறகு விவாகரத்தில் போய்முடிகிறது.  அல்லது கணவன் தனிக் குடுத்தனம் வர மறுப்பதால்  மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் சென்று முடிகிறது.  இன்னும் சில திருமணங்களில் சில இரவுகளிலே மனைவிக்கு சலிப்பு ஏற்பட்டு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு கடைசியில் கணவனுக்கு மனைவியின் கையாலே சிவலோக பதவி அடையும் பாக்கியமும் கிடைத்துவிடுகிறது.   இதுதான் செய்தித்தாள்களில் தினமும் வந்துகொண்டிருக்கிற இந்திய குடும்ப கலாச்சார செய்திகள்.  உதாரணத்திற்கு இன்று தினமலரில் வந்துள்ள குடும்ப செய்திகள்:
 • உ.பி., பெண் எம்.எல்.ஏ., "கள்ளத் தொடர்பு' அம்பலம்  ஜூன் 15,2013  லக்னோ: உத்தர பிரதேச பெண், எம்.எல்.ஏ., ஒருவர் மீது அவரின் கணவர், கள்ளத்தொடர்பு புகார் கூறியதால் ஏற்பட்ட பரபரப்பை விட, "நீ என் கணவனே கிடையாது' என பெண், எம்.எல்.ஏ., கூறியதும், அதிர்ச்சி [...]
 • கணவன் கொலை வழக்கில் மனைவி உட்பட 4 பேர் கைது   ஜூன் 15,2013  ஓசூர்: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவருக்கு, சாப்பாட்டில், தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்ட, [...]
 • மனைவியை குத்திய கத்தியுடன் கணவன் சரண்   ஜூன் 15,2013  திருப்பூர்: மனைவி மற்றும் குடும்பத்தாரை, கத்தியால் குத்திய நபர், ரத்தம் சொட்டும் கத்தியுடன், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். திருப்பூர், எஸ்.வி., காலனியில் வசிப்பவர் சரவணன், 36; பனியன் [...]
இந்த செய்திகளையெல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல கோவை நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் இளம் மனைவிகளை காப்பாற்றுவதில்  சட்டம் படித்தவர்களின் பெருந்தன்மையான பங்கை பக்குவமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது.

காதலுக்குப் பிறகு திருமணம் என்ற பெயரில் சில இரவுகளை பகிர்ந்துகொண்ட ஒரு ஜோடி வழக்கம்போல பிரிந்துவிட்டது. பொதுவாக கணவனைப் பிரிந்துவரும் அபலைப் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அரவணைக்க காவல்துறையும்,  பல சட்ட மேதைகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் (பொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா?).

அப்படி ஒரு வழிகாட்டுதலில் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு வந்த அந்த இளம் மனைவியைக் கண்ட கணவன் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.  அடுத்தவனின் மனைவியானாலும் அவளை  பாதுகாக்கவேண்டும் என்ற கடமையுணர்ச்சியுடன் இளம் மனைவியின் வழக்கறிஞர் கணவனை அடித்திருக்கிறார்.  வழக்கம்போல சட்டம் படித்தவர்கள் ஒன்றுகூடி  கைகலப்பில் இறங்கி அந்தக் கணவனை நீதிமன்றத்திலேயே தாக்கியிருக்கிறார்கள்! 

செய்தியை படிப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

1. சென்ற ஆண்டு கோவை நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து விவாகரத்து வழக்குகளை நடத்தி  வழக்கறிஞர்கள் பிடிபட்டதாக செய்தி வந்திருந்தது.

2.  அப்பாவிப் பெண்கள் குடும்பப் பிரச்சனைக்காக காவல்நிலையத்தையோ, சட்டம் படித்தவர்களையோ நாடினால் தகுந்த ஆலோசனை வழங்காமல் தவறாக வழிகாட்டி கணவனுக்கெதிராக அப்பாவி மனைவியரை பொய் வரதட்சணை வழக்குப் போடத்தூண்டுவதாக தேசிய பெண்கள் வாரியத் தலைவி சில ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்கிறார்.  
 •  National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said. (The Times of India, 1Feb 2009)

இப்போது இந்த கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தை படித்துப் பாருங்கள்.  அடுத்தவன் பொண்டாட்டி மேல நமக்கு எவ்வளவு பாசம் இருக்குதுன்னு புரியும்!

விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த கணவரை காப்பாற்றிய மனைவி: கோர்ட் வளாகத்தில் நெகிழ்ச்சி   ஜூன் 15,2013 தினமலர்

கோவை:கோர்ட் வளாகத்தில் கணவருக்கும், மனைவியின் வக்கீலுக்கும், இடையே ஏற்பட்ட தகராறில், கணவரை காப்பாற்றி வெளியே அழைத்துச் சென்றார், விவாகரத்து வழக்கு தொடர்ந்த அவரது மனைவி.

கோவையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 25. சென்னையைச் சேர்ந்த கோபால் என்பவரை காதலித்து, இருவீட்டாரின் எதிர்ப்பையம் மீறி திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளே சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளுக்குள், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் மீது கோபம் கொண்ட மகேஸ்வரி, தனியாக பிரிந்தார்; விவாகரத்து கேட்டு, கோவை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக இருவரும் கோவை கோர்ட் வளாகத்துக்கு வந்தனர்.விசாரணைக்காக கோர்ட் படியேறும்போது, மகேஸ்வரியை பார்த்த கோபால் ஆத்திரத்துடன், ""எனக்கு தெரியாமல், விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறாயா; என்னை கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்துகிறாயா,'' எனக் கேட்டார். குறுக்கிட்ட மகேஸ்வரியின் வக்கீல், ""வழக்கு என வந்த பின்,இங்கே எதுவும் பேசக்கூடாது,'' என எச்சரிக்கை விடுத்தார்.

இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு, கோபாலும், வக்கீலும் கைகலப்பில் ஈடுபட்டனர். வக்கீல் தாக்கப்படுவதை பார்த்த, அங்கிருந்த வக்கீல்கள் சிலர் கோபாலை தாக்கினர். இதில், கோபால் கீழே விழுந்தார். கணவரின் நிலைமையைப் பார்த்து, பரிதாபப்பட்ட மகேஸ்வரி, ஓடிச் சென்று கணவர் தாக்கப்படுவதை தடுத்தார். ""எங்களுக்குள், இந்த வழக்கு வேண்டாம்,'' எனக்கூறி, கணவரை கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்றார். இவர்களை பின்தொடர்ந்து வக்கீல்களும் சென்றனர்.

ரேஸ்கோர்ஸ் போலீசில் இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். இச்சந்தர்ப்பத்தில் மகேஸ்வரி, அங்கிருந்து வெளியே சென்று விட்டார். இதன் பின், மாலையில் வக்கீல்கள் சிலர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதேபோல், கோபாலும் தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். கோர்ட்டில் நடக்கும் விவாரத்து வழக்கு வாபஸ் ஆகுமா அல்லது மீண்டும் கணவனும், மனைவியும் கோர்ட்க்கு வருவார்களா என்பது, அவர்களுக்குத்தான் தெரியும்.


Wednesday, June 12, 2013

சில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்

தற்போது இந்தியாவில் இளம் பெண்களிடையே பரவலாக ஒரு புது வியாபார யுக்தி பரவிவருகிறது.  சில இரவுகள் கணவனுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதற்காக தேய்மானச் செலவாக பல இலட்சங்களை நஷ்ட ஈடாக கணவனிடம் கேட்கிறார்கள்.  இதற்கு அவர்கள் “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை” பயன்படுத்துகிறார்கள். 

இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005ம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.  இந்த சட்டத்தின் மூலம் கணவனுடன் சில இரவுகளை கழித்ததற்காக கணவனின் சொத்துக்கள், வீடு, மாதந்தோறும் பல ஆயிரங்களில் பராமரிப்பு செலவு மற்றும் தன்னை கணவன் பயன்படுத்தியதற்காக தேய்மானச் செலவு பல இலட்சங்கள் என பட்டியலிட்டு நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்தால் உடனடியாக நீதிபதி இவையனைத்தையும் கணவன் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுவிடுவார். 

கணவன் போதிய அளவு பண வசதியில்லாதவர் என்றால் சிறுநீரகத்தை விற்றாவது பணத்தைக் கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடும்.

Punjab: Man wants to sell kidney to pay alimony - Times Of India

 The Times of India

CHANDIGARH: Unable to pay maintenance to his wife, a man has approached a court in Punjab to allow him to sell his one of his two kidneys so that he could pay up.

The Ropar resident, who found the sum stipulated by the court way beyond his means, filed an application under section 125 of CrPC (order for maintenance of wives, children) in the court of the judicial magistrate on August 22, seeking permission to sell his kidney to pay Rs 8,000 as interim maintenance to his wife.

Narrating his ordeal in the application, he said the court had ordered him to pay his wife a monthly interim allowance of Rs 3,500 under CrPC and another interim maintenance of Rs 4,500 per month under the Domestic Violence Act. Denying any permanent means of livelihood, he said he found it difficult to sustain himself as his small monthly earnings made up for only Rs 3,600 per month.

Despite his meagre income, the man tried to pay maintenance to his wife regularly. But, under the circumstances, he is left with no option but to sell his body organs.
இதுபோன்ற வழக்குகளில் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் கல்வியறிவில்லாத பல ஏழைப் பெண்கள்கூட கூலி வேலை செய்து தங்களது வாழ்வை தானே சுயமாகவும், கௌரவமாகவும் நடத்துகிறார்கள்.  கல்வி கற்க வேண்டிய வயதில் பல குழந்தைகள்கூட தொழிலாளிகளாகவேலை செய்து  வாழ்கிறார்கள்.    

ஆனால்  உயர் கல்வி கற்று சுயமாக சம்பாதிக்கும் திறனும், அறிவும் உள்ள பல இளம் மனைவிகள்
சட்டம் சாதகமாக இருக்கிறது என்பதற்காக தங்களது கணவனுடன் சில இரவுகள் கழித்ததற்காக பல இலட்சங்களை கணவனிடம் வாங்கித் தரும்படி நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.  இவர்களால் பணம் ஈட்டி சுயமாக தங்களை பராமரித்துக் கொள்ள முடிந்தாலும்  இப்படி பணம் சம்பாதிக்க நினைப்பது  பாரம்பரியம் மிக்க ஒரு தொழிலை நினைவு படுத்துவது போல இருக்கிறது அல்லவா!!!! இந்திய சட்டங்கள் இப்படி பெண்களை மாற்றிவிட்டதா? அல்லது இளம் பெண்கள் இப்படி மாறிவிட்டார்களா?  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று  கல்வி கற்க முடியாமல் கடினமாக உழைத்து வாழ்க்கையை நடத்தும் குழந்தைகள் படும் இன்னல்களை ஒரு பக்கம் நினைத்துப் பார்க்கும் போது மற்றொரு பக்கம் நன்கு படித்து அனைத்து வசதிகளுடன் கூடிய இளம் பெண்கள் இப்படி சுய கௌரவத்தை இழந்து பணம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.