சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, June 15, 2013

அடுத்தவன் மனைவி மீது எப்பவுமே நமக்கு தனி பாசம்தான்!! கோவை நீதிமன்றத்தில் நடந்த சம்பவம்

சமீபகாலமாக இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் சில இரவுகளுக்குப் பிறகு விவாகரத்தில் போய்முடிகிறது.  அல்லது கணவன் தனிக் குடுத்தனம் வர மறுப்பதால்  மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் சென்று முடிகிறது.  இன்னும் சில திருமணங்களில் சில இரவுகளிலே மனைவிக்கு சலிப்பு ஏற்பட்டு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு கடைசியில் கணவனுக்கு மனைவியின் கையாலே சிவலோக பதவி அடையும் பாக்கியமும் கிடைத்துவிடுகிறது.   இதுதான் செய்தித்தாள்களில் தினமும் வந்துகொண்டிருக்கிற இந்திய குடும்ப கலாச்சார செய்திகள்.  உதாரணத்திற்கு இன்று தினமலரில் வந்துள்ள குடும்ப செய்திகள்:
  • உ.பி., பெண் எம்.எல்.ஏ., "கள்ளத் தொடர்பு' அம்பலம்  ஜூன் 15,2013  லக்னோ: உத்தர பிரதேச பெண், எம்.எல்.ஏ., ஒருவர் மீது அவரின் கணவர், கள்ளத்தொடர்பு புகார் கூறியதால் ஏற்பட்ட பரபரப்பை விட, "நீ என் கணவனே கிடையாது' என பெண், எம்.எல்.ஏ., கூறியதும், அதிர்ச்சி [...]
  • கணவன் கொலை வழக்கில் மனைவி உட்பட 4 பேர் கைது   ஜூன் 15,2013  ஓசூர்: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவருக்கு, சாப்பாட்டில், தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்ட, [...]
  • மனைவியை குத்திய கத்தியுடன் கணவன் சரண்   ஜூன் 15,2013  திருப்பூர்: மனைவி மற்றும் குடும்பத்தாரை, கத்தியால் குத்திய நபர், ரத்தம் சொட்டும் கத்தியுடன், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். திருப்பூர், எஸ்.வி., காலனியில் வசிப்பவர் சரவணன், 36; பனியன் [...]
இந்த செய்திகளையெல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல கோவை நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் இளம் மனைவிகளை காப்பாற்றுவதில்  சட்டம் படித்தவர்களின் பெருந்தன்மையான பங்கை பக்குவமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது.

காதலுக்குப் பிறகு திருமணம் என்ற பெயரில் சில இரவுகளை பகிர்ந்துகொண்ட ஒரு ஜோடி வழக்கம்போல பிரிந்துவிட்டது. பொதுவாக கணவனைப் பிரிந்துவரும் அபலைப் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அரவணைக்க காவல்துறையும்,  பல சட்ட மேதைகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் (பொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா?).

அப்படி ஒரு வழிகாட்டுதலில் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு வந்த அந்த இளம் மனைவியைக் கண்ட கணவன் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.  அடுத்தவனின் மனைவியானாலும் அவளை  பாதுகாக்கவேண்டும் என்ற கடமையுணர்ச்சியுடன் இளம் மனைவியின் வழக்கறிஞர் கணவனை அடித்திருக்கிறார்.  வழக்கம்போல சட்டம் படித்தவர்கள் ஒன்றுகூடி  கைகலப்பில் இறங்கி அந்தக் கணவனை நீதிமன்றத்திலேயே தாக்கியிருக்கிறார்கள்! 

செய்தியை படிப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

1. சென்ற ஆண்டு கோவை நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து விவாகரத்து வழக்குகளை நடத்தி  வழக்கறிஞர்கள் பிடிபட்டதாக செய்தி வந்திருந்தது.

2.  அப்பாவிப் பெண்கள் குடும்பப் பிரச்சனைக்காக காவல்நிலையத்தையோ, சட்டம் படித்தவர்களையோ நாடினால் தகுந்த ஆலோசனை வழங்காமல் தவறாக வழிகாட்டி கணவனுக்கெதிராக அப்பாவி மனைவியரை பொய் வரதட்சணை வழக்குப் போடத்தூண்டுவதாக தேசிய பெண்கள் வாரியத் தலைவி சில ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்கிறார்.  
  •  National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said. (The Times of India, 1Feb 2009)

இப்போது இந்த கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தை படித்துப் பாருங்கள்.  அடுத்தவன் பொண்டாட்டி மேல நமக்கு எவ்வளவு பாசம் இருக்குதுன்னு புரியும்!

விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த கணவரை காப்பாற்றிய மனைவி: கோர்ட் வளாகத்தில் நெகிழ்ச்சி   ஜூன் 15,2013 தினமலர்

கோவை:கோர்ட் வளாகத்தில் கணவருக்கும், மனைவியின் வக்கீலுக்கும், இடையே ஏற்பட்ட தகராறில், கணவரை காப்பாற்றி வெளியே அழைத்துச் சென்றார், விவாகரத்து வழக்கு தொடர்ந்த அவரது மனைவி.

கோவையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 25. சென்னையைச் சேர்ந்த கோபால் என்பவரை காதலித்து, இருவீட்டாரின் எதிர்ப்பையம் மீறி திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளே சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளுக்குள், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் மீது கோபம் கொண்ட மகேஸ்வரி, தனியாக பிரிந்தார்; விவாகரத்து கேட்டு, கோவை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக இருவரும் கோவை கோர்ட் வளாகத்துக்கு வந்தனர்.விசாரணைக்காக கோர்ட் படியேறும்போது, மகேஸ்வரியை பார்த்த கோபால் ஆத்திரத்துடன், ""எனக்கு தெரியாமல், விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறாயா; என்னை கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்துகிறாயா,'' எனக் கேட்டார். குறுக்கிட்ட மகேஸ்வரியின் வக்கீல், ""வழக்கு என வந்த பின்,இங்கே எதுவும் பேசக்கூடாது,'' என எச்சரிக்கை விடுத்தார்.

இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு, கோபாலும், வக்கீலும் கைகலப்பில் ஈடுபட்டனர். வக்கீல் தாக்கப்படுவதை பார்த்த, அங்கிருந்த வக்கீல்கள் சிலர் கோபாலை தாக்கினர். இதில், கோபால் கீழே விழுந்தார். கணவரின் நிலைமையைப் பார்த்து, பரிதாபப்பட்ட மகேஸ்வரி, ஓடிச் சென்று கணவர் தாக்கப்படுவதை தடுத்தார். ""எங்களுக்குள், இந்த வழக்கு வேண்டாம்,'' எனக்கூறி, கணவரை கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்றார். இவர்களை பின்தொடர்ந்து வக்கீல்களும் சென்றனர்.

ரேஸ்கோர்ஸ் போலீசில் இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். இச்சந்தர்ப்பத்தில் மகேஸ்வரி, அங்கிருந்து வெளியே சென்று விட்டார். இதன் பின், மாலையில் வக்கீல்கள் சிலர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதேபோல், கோபாலும் தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். கோர்ட்டில் நடக்கும் விவாரத்து வழக்கு வாபஸ் ஆகுமா அல்லது மீண்டும் கணவனும், மனைவியும் கோர்ட்க்கு வருவார்களா என்பது, அவர்களுக்குத்தான் தெரியும்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.