இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, June 18, 2013

முடிவில்லா குழப்பத்தில் முடியப்போகும் இந்தியத் திருமணங்கள்!!!

குழப்ப நிலையில் இருக்கும் இந்தியாவைப் போலவே இந்திய சட்டங்களும் அவற்றை விளக்கும் நீதிமன்றங்களின் கருத்துக்களும் இருக்கின்றன என்பதற்கு பின்வரும் செய்தி நல்ல உதாரணம்.

பின்வரும் செய்தியில் சென்னை உயர்நீதிமன்றம் வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மனைவியாக கருதப்படுவர் என்றும் மத முறைப்படி திருமணம் நடத்துவது, திருமணத்தை பதிவு செய்வது  போன்றவை வெறும் வெற்றுச் சடங்குகள் என்று கூறியிருக்கிறது!!!  இந்த விளக்கத்தின் மூலம் பின்வரும் கேள்விகளுக்கு இப்போது பதில் தெரியவில்லை!!!
  1. வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படும் என்றால் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என்று சட்டம் எடுத்துக் கொள்ளுமா? உறவில் ஈடுபட்ட பெண் திருமணம் செய்த மனைவியைப் போல வாடிக்கையாளர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவற்றை பய்ன்படுத்த முடியுமா? இல்லை உறவிற்கு பணம் பெற்றதால் அதை விபச்சாரமாகத்தான் கருதுமா?  அப்படியென்றால்..... பின்வரும் இரண்டாவது கேள்விக்கு என்ன பதில்?
  2. எல்லா சடங்குகளுடனும் திருமணம் செய்யும் இளம் பெண்கள் பலர் சில இரவுகள் கணவனுடன் கழித்துவிட்டு பிறகு பெருந்தொகையை  நஷ்ட ஈடாக கணவனிடம் கேட்டு குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள்.  (இந்தப் பெண்கள் உயர் கல்வி கற்று நல்ல பணியில் இருக்கிறார்கள்.  கணவனின் பணம் இல்லாமல் சுயமாக வாழமுடியும்)  உறவுக்கு பணம் கேட்கும் இவர்களை சட்டம் விபச்சாரிகளாக கருதுமா?
  3. திருமணத்தை பதிவு செய்வது வெறும் சடங்கு என்று சென்னை உயர்நீதிமன்ற  தீர்ப்பு செய்தி சொல்கிறது.  ஆனால் இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது .  பதிவு செய்யாதவர்களுக்கு தண்டனையும் உண்டு என்று கூறியிருக்கிறது.  இப்போது எந்த நீதிமன்றம் சொல்வதை எடுத்துக்கொள்வது??

    The Hindu :  Register all marriages: Supreme Court www.hindu.com/2007/10/26/stories/2007102656810100.htm Oct 26, 2007 – NEW DELHI: The Supreme Court on Thursday ordered compulsory registration of marriages of couples belonging to all religions across the ...

  4. சரி இந்திய உச்ச நீதிமன்றம் சொல்லும் கட்டளையை பின்பற்றி திருமண பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய ஆண் பெண் இருவரும் உறவு கொண்டதை அடிப்படையாக வைத்து  அதை “திருமணம்” என்று பதிவு செய்வார்களா?  பின்வரும் செய்தியில் தாலி கட்டுவது, மத சடங்குகளை நடத்துவது எல்லாம் ஒரு  வெற்று சடங்குதான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் திருமண பதிவு சட்டம் அந்தந்த மத முறைப்படி திருமணம் நடந்திருந்தால்தான் அதை (சிறப்பு திருமணங்களைத் தவிர) குறிப்பிட்ட மதத் திருமணமாக பதிவு செய்யமுடியும் என்று கூறுகிறது.

    Proof for all these shall be given  for Hindu Marriage
    1 . MARRIAGE  Wedding Invitation (or)
    Temple Marriage Receipts (or)
    Any proof of marriage solemnization
    2. RESIDENCE ID Card (or)
    Ration Card (or)
    Driving License (or)
    Passport or Visa
    3. AGE Birth Certificate (or)
    School/College Certificate (or)
    Passport / Visa 
இப்போது எந்த விஷயம் சரி எது தவறு என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  இந்தியாவில் தெளிவான சட்டங்கள் கிடையாது.  ஏமாந்தவனை தண்டிக்க வெள்ளையன் பயன்படுத்திய சட்டம் இன்றும் மக்களை குழப்பி அப்பாவிகளை தண்டிக்க மட்டுமே பயன்படுகிறது.

தாலி கட்டி, மாலை மாற்றி, அக்னி வலம் வந்தால் தான் திருமணமா?

 தினமலர் 18 ஜூன் 2013

சென்னை:"சட்டப்படியான வயது நிரம்பிய ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், அன்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், முஸ்லிம் வழக்கப்படி, 1994ம் ஆண்டு, திருமணம் நடந்தது. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 1999ம் ஆண்டு, எங்களை விட்டு விட்டு, அன்வர் சென்று விட்டார். அவர், வியாபாரம் செய்து வருகிறார். மாதம், 25 ஆயிரம் ரூபாய், சம்பாதிக்கிறார்.ஜீவனாம்சம் கேட்டு, கோவை, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். என் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், "பாத்திமா, என் மனைவி அல்ல; குழந்தைகள் எனக்கு பிறக்கவில்லை; முஸ்லிம் வழக்கப்படி, திருமணம் நடந்திருந்தால், ம‹தியில் உள்ள, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல கோர்ட், "இரண்டு குழந்தைகளும், ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. ஆவண சாட்சியங்கள் மூலம், திருமணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற, பாத்திமாவுக்கு உரிமையில்லை' என, உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை, என்னைப் பொருத்தவரை, ரத்து செய்ய வேண்டும். ஜீவனாம்சம் பெற, எனக்கு உரிமையுள்ளது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தொடர்பாக, அனைத்து சடங்குகளையும் பின்பற்றினால் தான், அது, செல்லத்தக்க திருமணம் என்கிற பொருள் அல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரை, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை; ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்து, மருத்துவமனை ஆவணங்களில், கணவர் கையெழுத்திட்டுள்ளார்.எனவே, குழந்தைகள், முறைதவறி பிறந்தது என்கிற கேள்வி எழவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பின் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, கணவர் கையெழுத்திட்டுள்ளதால், பாத்திமா தனது மனைவி என்பதை, கணவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். திருமண சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம்; கண்டிப்பு இல்லை.

ஒரு பெண், 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன், செக்ஸ் உறவு கொண்டு, அதன் மூலம், கர்ப்பமுற்றால், அந்தப் பெண்ணை, மனைவி என்றும், ஆணை, கணவன் என்றும் கருத வேண்டும். அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர்.

உடல் ரீதியான தொடர்புக்குப் பின், அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து விட முடிவெடுத்தால், கோர்ட் மூலம் விவாகரத்து பெறாமல், வேறு திருமணம் செய்ய முடியாது.

தாலி கட்டுவது, மாலை, மோதிரம், மாற்றிக் கொள்வது, அக்னி ”ற்றி வருவது, திருமணத்தை பதிவு செய்வது, இவை எல்லாம், சமூகத்தை திருப்திபடுத்த, ஒவ்வொருவரும் தங்கள் மத வழக்கப்படி செய்து கொள்பவை.


இருந்தாலும், எந்த ஜோடியும், சட்டப்படி திருமண வயதை எட்டிய பின், உடல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டால், அதை, செல்லத்தக்க திருமணம் என கருத வேண்டும்.

அவர்களை, கணவன், மனைவி என, கருத வேண்டும்.மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திருமணங்களிலும், உடல் ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால், அந்த திருமணம் தோல்வியடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். எனவே, செல்லத்தக்க திருமணத்தில், சட்ட ரீதியான முக்கிய அம்சம், கணவன், மனைவிக்கு இடையேயான, உடல் ரீதியான தொடர்பு.இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரருக்கு, ஜீவனாம்ச தொகை, மாதம், 500 ரூபாய், 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், பாக்கித் தொகையை, கணவர் வழங்க வேண்டும். அதன்பின், மாதம் தோறும், வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

Suresh Ram said...

மேற்கத்திய அநாகரிகங்களின் தாக்கத்தால் கட்டற்ற பாலியல் சுதந்திரம், திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல், பெற்றோரின் ஒப்புதல் இல்லாத காதல் திருமணங்களை ஊக்குவித்தல் என்பன தமிழ்நாட்டில் பேசப்படுவதன் வாயிலாக குடும்ப அமைப்புக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது............

குடும்பம், திருமணம், பாலியல் உரிமை போன்ற விடயங்களில் மேலை நாடுகள் என்னென்ன தவறுகளைச் செய்தனவோ, அதே தவறுகளை நாம் செய்துவிடக் கூடாது......

குடும்பம், அரசுக்கு முந்தையது; அரசை விட மேலானது; இயற்கையானது. குடும்ப அமைப்பை அழியாமல் காப்பாற்றி அடிப்படை மனித உரிமைகளையும், ஜனநாயகப் பண்பையும் போற்றி வளர்ப்பதில் குடும்பங்கள் முக்கிய பங்கினை ஆற்ற அனைவரும் வழிவகுக்க வேண்டும். இதுவே இன்றைய உடனடித் தேவையாகும்...............

http://bit.ly/15ry5yJ


கட்டுரையாளர்: நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.