இந்த சட்டங்களின்படி விவாகரத்து செய்யும் பெண்ணுக்கு கணவனின் சொத்தில் சமபங்கு கொடுக்கவேண்டும் என்றும், அதே போல மனைவி விவாகரத்து கோரினால் கணவன் அதை எதிர்க முடியாது உடனடியாக மனைவிக்கு விவாகரத்து கிடைக்கும்படியாகவும், ஆனால் அதேசமயம் கணவன் விவாகரத்து கோரினால் மனைவி எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும் பெண்களின் மீது மிகுந்த அக்கறையுடன் இநத் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது.
இந்த புதிய சட்டங்களில் பலனடையப்போகும் “இந்தியப் பெண்கள்” யார் தெரியுமா? பொய் வழக்குப்போட்டு கணவனிடம் பணம் பிடுங்கும் மேல்தட்டுவர்க்கம் மட்டுமே. பின்வரும் செய்திப்படத்திலுள்ள இந்தியப் பெண்களுக்கு இந்த சட்டங்களால் என்ன பயன்? அவர்களின் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? இந்தப் பெண்ணைப் போன்றவர்கள் இந்த புதிய சட்டத்தின் மூலம் விவாகரத்து பெற்றால் கணவனிடமிருந்து என்ன கிடைக்கும்?தாயும்... சேயும்...: ஐ.பி.எல் போட்டிகளை காண சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்களிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் டி-சர்ட்,கொடி உள்ளிட்ட பொருட்களை விற்கும் தாயும் சேயும். (தினமலர்)
பெண்கள் சட்டங்கள் என்ற பெயரில் ஆண்களை அடிமைப்படுத்தும் ஒருதலைபட்சமான சட்டங்களால் உண்மையாகவே கஷ்டப்படும் அடித்தட்டு இந்தியப் பெண்களுக்கு என்ன பயன்? இந்த சட்டங்களின் பலனை யார் அனுபவிக்கிறார்கள்? பின்வரும் In&Out Chennai என்ற பத்திரிக்கையில் வந்துள்ள கட்டுரையை படித்துப் பாருங்கள்.
(நன்றி: http://inandoutchennaifortnightly.blogspot.com/)
No comments:
Post a Comment