நான்கு வயது சிறுவன் கொலை குற்றவாளியா? பீகார் போலீசாரின் விசித்திரம்
ஜூன் 01,2011 தினமலர்
பாட்னா: பீகாரில் கொலை வழக்கு ஒன்றில், நான்கு வயது சிறுவனை, போலீசார் குற்றவாளியாக சேர்த்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சண்டை ஒன்றில், அச்சுனாந்த் பாண்டே என்பவர் கொல்லப்பட்டார். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், பாண்டேவுக்கும் இடையே நடந்த சண்டையின் காரணமாக, இந்த கொலை நடந்தது. இதில், பாண்டேயின் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் சமீபத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களில், நான்கு வயதே நிரம்பிய, பச்சிளம் சிறுவன் ஒருவனும் இருந்தது, கோர்ட் வளாகத்தில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட சிறுவனின் வயது எத்தனை என்பதை பூர்த்தி செய்யவில்லை. வாழ்க்கை என்றால் என்ன, மரணம் என்றால் என்ன என்பது தொடர்பான விவரங்களைப் பற்றி, எதுவுமே அறியாத ஒரு சிறுவனை, எப்படி கொலை வழக்கில் சேர்த்தனர் என, அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். சிறுவன் செய்த ஒரே தவறு, கொலை செய்யப்பட்ட பாண்டேயின் பக்கத்து வீட்டில் பிறந்தது தான்.
இதுகுறித்து வக்கீல்கள் சிலர் கூறுகையில், "ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது. இது தொடர்பாக சட்ட விதிமுறையே உள்ளது. ஆனால், இந்த கொலை வழக்கில், நான்கு வயது சிறுவனை எப்படி சேர்த்தனர் என, தெரியவில்லை' என்றனர்.போஜ்பூர் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் திரிபாதி கூறுகையில்,"நான்கு வயது சிறுவன் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல், என் கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணையில், நான்கு வயது சிறுவனின் பெயர், கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தால், உடனடியாக, அந்த சிறுவனின் பெயர், வழக்கில் இருந்து நீக்கப்படும்' என்றார்.இதுபோன்ற சுவாரஸ்யமான பல கதைகளை பின்வரும் இணைப்புகளில் படித்து மகிழுங்கள்.
அப்பாவி போலிஸ் (பகுதி - 2)
அப்பாவி போலிஸ் (பகுதி - 3)
அப்பாவி போலிஸ் (பகுதி - 4)
(அப்பாவி போலிஸ் - பகுதி 5)
அமெரிக்க போலிஸ் செய்தால் கொடுமை! இந்தியப் போலிஸ் செய்தால் சேவை!!
No comments:
Post a Comment