இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, February 25, 2011

போலிஸைப் பார்த்து ஓடிய போலிஸ் (அப்பாவி போலிஸ் - பகுதி 5)


ராமேஸ்வரம்:தனுஷ்கோடி ஸ்டேஷனில் நள்ளிரவில் ஆய்வு செய்ய வந்த ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரியிடம், போதையில் இருந்த ஏட்டு சிக்கினார். உடன் இருந்த இரு போலீசார் தப்பியோடினர். எஸ்.பி., அனில்குமார் கிரி, ஸ்டேஷன்களில் திடீர் விசிட் செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த போது, அங்கிருந்த ஏட்டுகள் ஜெயச்சந்திரன், முருகன், கருப்பையா போதையில் இருந்தனர். எஸ்.பி.,யை பார்த்ததும் முருகன், கருப்பையா தப்பி ஓடினர். ஏட்டு ஜெயச்சந்திரனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, அவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டார். தப்பிய போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். கடந்த பிப்., 14ல் இலங்கை நபரை கைது செய்த "கியூ' பிரிவு போலீசார், அவரை தனுஷ்கோடி போலீசாரிடம் ஒப்படைக்க சென்ற போது, தப்பிய ஏட்டுகள் முருகன், கருப்பையா இருவரும் குடிபோதையில் தகராறு செய்தனர். இது குறித்து "கியூ' பிரிவு போலீசார் எஸ்.பி., யிடம் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தக் கோபமெல்லாம் இப்படித்தான் வெளிப்படும்....
கருத்துப்படங்கள் - தினமலர்

தேனி மாவட்டம், மூணாறில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின் போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தடையை மீறி, தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக வந்து வன்முறையில் ஈடுபட்டதால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.