சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, February 09, 2011

காதலித்தால் மரணம்தான் பரிசா?

கணவனைப் பிடிக்காததால் வேறு ஒருவனைக் காதலித்தால் அதற்கு மரணம்தான் பரிசா? என்ன ஒரு கொடுமை இந்த நாட்டில்! “அபலைப் பெண்களை” காப்பாற்ற யாருமே இல்லையா? கணவனிடம் வரதட்சணைக் கொடுமை, கள்ளக் காதலனிடம் கொலை செய்துவிடுவானோ என்ற அச்சம். பெண்ணின் “அன்பை” பக்குவமாக புரிந்துகொண்டு அன்பு செலுத்த நேர்மையான ஆண்களே இல்லையா?

கணவனை ஏமாற்றிய மனைவி கள்ளக்காதலில் மரணம்
மாலைமலர் 8/2/2011

கோவை, பிப். 8-

கணவரை ஏமாற்றி விட்டு கள்ள காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார். கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்தவர் அருண் தினேஷ் (25). ஓட்டல் ஊழியர். இவரது மனைவி மலர்கொடி (21). இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மலர்கொடி மருந்து கடையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மலர்கொடிக்கு வடவள்ளி வி.ஓ.நகரை சேர்ந்த தன்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது. 2 பேரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

கள்ளகாதல் விவகாரம் கணவன் அருண்தினேசுக்கு தெரியாமல் இருப்பதற்காக தன்ராஜை தனது பழைய நண்பன் என்று கணவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். நேற்று முன்தினம் மலர்கொடியும், அருண்தினேசும், வடவள்ளியில் உள்ள தன்ராஜ் வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர்.
நேற்று தன்ராஜ் மலர் கொடிக்கு போன் செய்து வீட்டில் யாரும் இல்லை. நீ உடனே புறப்பட்டு வா? நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். இதையடுத்து மலர்கொடி கணவரிடம் கோவையில் வேலைக்கு விண்ணப்ப மனு கொடுக்க போவதாக பொய்யான தகவலை கூறிவிட்டு தன்ராஜ் வீட்டிற்கு சென்றார்.

அங்கு 2 பேரும் காலை முதல் மதியம் வரை உல்லாசமாக இருந்தனர். அப்போது தன்ராஜூக்கும் மலர்கொடிக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கள்ளகாதலன் தன்ராஜ் மலர்கொடியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தான்.

பின்னர் போன் மூலம் நடந்த தகவலை தாய் விஜயலட்சுமிக்கு போன் செய்து கூறினான். மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டான். அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தார். அங்கு படுக்கை அறையில் மலர்கொடி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். மலர்கொடி மூக்கில் இருந்து ரத்தம் வடிந்திருந்தது.

இதுகுறித்து விஜயலட்சுமி வடவள்ளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். கூடுதல் துணை சூப்பிரண்டுகள் ஜெயபாண்டியன், அண்ணா துரை, பேரூர் துணை சூப்பிரண்டு முத்தரசு ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்துவிட்டு தலைமறைவான தன் ராசை பிடிக்க பேரூர் டி.எஸ்.பி. முத்தரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தன்ராஜின் மோட்டார் சைக்கிள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நிற்பதை கண்டு பிடித்தனர்.

எனவே கொலையாளி தன்ராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. தனிப்படை போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.

தினமலர் பிப்ரவரி 10,2011

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கள்ளக்காதலியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.மேலகுமிழங்குளத்தை சேர்ந்தவர் நாகேஷ் (41). இவரது மனைவி சீதை (32). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில் இருவரும் வெளியூருக்கு ஓடி விட்டனர். சில மாதங்களில் சீதை ஊர் திரும்பினார். முருகனும் ஊர் திரும்பி, வேறு திருமணம் செய்து கொண்டார்.கடந்த 2007 ஜூன் 6ம் தேதி முருகனை சீதை சந்தித்தார். முருகன், "எனக்கு திருமணம் ஆகி விட்டது, நீ மருந்து குடித்து செத்து தொலை' எனக்கூறினார். வீடு திரும்பிய சீதை, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் முருகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து அருப்புக்கோட்டை சப் கோர்ட் நீதிபதி ஜெசிந்தா மார்டின் தீர்ப்பளித்தார்.

====

  • கள்ளக்காமத்தலைவனின் பேச்சை தலையில் தாங்கி தட்டாமல் உயிரைக்கூட விடும் பெண்கள் தன்னுடைய கணவனின் பேச்சை மட்டும் மதிப்பதில்லையே!
  • கள்ளக்காமத்தலைவனின் மீது வைத்திருக்கும் மதிப்பு மரியாதையில் சிறிதளவுகூட வயதான மாமனார் மாமியார் மீது வைப்பதில்லையே!
  • தான் பெற்ற குழந்தைகள் மீது இருக்கவேண்டிய பாசத்தைவிட கள்ளக்காமத்தில் இருக்கும் மோகம் அதிகமாக இருக்கிறதே!
ஆனால் இதெல்லாம் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை "பெண்ணடிமைத்தனம்" என்று சொல்வார்கள் பல தலைவிகள். அதனால் இதுபோன்ற கள்ளக்காமத்திற்கு ஏங்கும் “அப்பாவிப் பெண்களை” ஆதரித்து குரல் கொடுத்தால் நீங்களும் “பெண் விடுதலை விரும்பி” என்று சமுதாயத்தால் போற்றப்படலாம்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் ஏதோ ஒரு காரணத்தால் மனைவி இறந்துவிட்டால் கணவனும், அவனது குடும்பத்தாரும்தான் அதற்குக் காரணம் என்று கூறி “வரதட்சணைக் கொலை” என்ற ஒரு சட்டத்தின் பெயரில் கணவனை அவனது குடும்பத்தோடு சிறையில் அடைக்கும் நடைமுறை இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. இந்த சட்ட நடைமுறையுடன் சேர்த்து மனைவி கள்ளக்காமத்தில் பலியானால் அதற்கும் அவளது கணவன்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறி அதற்காக கணவனுக்கு தூக்குதண்டனை என்று ஒரு புதிய சட்டம் இயற்றவேண்டும் என்று பெண்ணுரிமை பேசி நாட்டு நடப்பிற்கேற்ப ஊரோடு நாமும் அனுசரித்துப்போவதுதான் புத்திசாலித்தனம்.“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.