இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, February 19, 2011

பெண்களின் சாபம் பலிக்குமா?


மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறை பிடிக்கப்படுவதை கண்டித்து சென்னை மெரினா கண்ணகி சிலை முன் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆவேசமடைந்த பெண்கள், கண்ணகியைப் போலவே வேடமிட்டு வந்த பெண்கள், காற்சிலம்புகளை தூக்கி காட்டி ஆவேசமாக அரசுக்கு சாபமிட்டனர். ( செய்திப் படம்- தினமலர் 20.2.2011)

=======

மீன்பிடி தொழில் செய்யும் பல ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள் தங்களின் கணவனின் உயிரையும், தங்களது வாழ்க்கையைம் காப்பாற்றுங்கள் என்று தினம் தினம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வேதனையை இங்கே சென்று பாருங்கள் www.savetnfisherman.org

இந்தப் பெண்களின் கண்ணீர் யாருடைய கண்களுக்கும் தெரிவதில்லை. இவர்களின் அபயக்குரல்களோ யாருடைய செவிகளுக்கும் எட்டாது. ஏனென்றால் இவர்களுக்கு உதவினால் யாருக்கு லாபம்?

அதேசமயம் மேல்தட்டுவர்க்க நவநாகரீகப் பெண்னொருத்தி தன் கணவனையும் அவனது குடும்பதைத்தையும் பழிவாங்குவதற்காக கிசுகிப்பான குரலில் ஐயோ வரதட்சணைக் கொடுமை என்று கூறினால் போதும் மத்திய பெண்கள் நலத்துறை முதல் மாநில பெண்கள் வாரியம் வரை ஐயோ இந்தியப் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் துன்புறுகிறார்கள் என்று கூப்பாடு போடுவார்கள். இது போதாதென்று பெண்ணுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் ஓயமாட்டோம் என்று பல சிறு சிறு அமைப்புகள் வட்டமடித்து சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையாகவே துன்பப்படும் அப்பாவி இந்தியப் பெண்கள்
பெண் விடுதலை விரும்பிகளின் கண்களுக்கு எப்போதுமே தெரிவதில்லையே!

கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். மகளிர் சங்கத்தலைவிகளின் சேவையைப் போற்றி மகிழுங்கள்.



Thats Tamil News, 3/4/2008

நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.

அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.

குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர்.
========



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.