தலைவிகள் இந்தியப் பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு எப்படி நிதி ஒதுக்கலாம் என்று யோசிக்கிறார்கள் என்று பின்வரும் செய்தி விளக்கமாகச் சொல்கிறது. அதனைத் தொடர்ந்து இந்தியப் பெண்ணின் நிலையை தலைவிகள் உண்மையாக எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் காணலாம்.
சர்வதேச மகளிர் தின விழா: ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேச்சு
மாலை மலர் 18/2/2011
செய்தியின் சில முக்கியமான பகுதிகள்
தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி சாய்லட்சுமி வரவேற்று பேசினார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் காயத்திரிதேவி எம்.எல்.ஏ. தொடக்க உரையாற்றினார். விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேசியதாவது:-
தன்னை தேடி வந்த பிரதமர் பதவியையும் வேண்டாம் என்ற தியாகத் தலைவிதான் சோனியா காந்தி. அவர் பெண்களுக் கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். பொருளாதார துறை, சட்டத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இளம் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கும்போது அவர் அடிக்கடி சொல்வார், பெண்கள் மாபெரும் சக்தி, அவர்களது ஒத்துழைப் பால்தான் நாடு முன்னேற முடியும் என்பார்.
அரசு வேலைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். பெண்கள் வன்முறை தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமுல் படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும். சுய உதவிக்குழுக்களுக்கும், வங்கிகளுக்கும் உள்ள பிரச்சினைகளை களைய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
பெண்ணுரிமை பேசும் சங்கங்களுக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்.
=====
பல ஏழைச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நல்ல கல்வி கூட கிடைக்காமல் தினம் தினம் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நலனிற்காக நிதி ஒதுக்கி பல நல்ல உபயோகமான திட்டங்களை செயல்படுத்தினால் யாருக்கும் “லாபம்” கிடைக்காதோ? அல்லது இவர்கள் எல்லாம் பெண்கள் என்று கருதப்படுவதில்லையா? அல்லது இதுபோன்ற இந்தியச் சிறுவர், சிறுமிகளுக்கு நல்ல கல்வி கிடைத்து தங்கள் நாட்டை தாங்களே ஆளும் அளவிற்கு திறமை வளர்ந்துவிடும் என்ற அச்சமோ?
பெண்கள் வன்முறை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் அடுக்கடுக்காக பல சட்டங்களை இயற்றி நிதி ஒதுக்கினால் உண்மையாக பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை ஏற்படுவதை விட சுற்றி இருப்பவர்களுக்கு அதிக வருமானமும், லாபமும் கிடைக்கும் என்று பலருக்கும் தெரிந்த உண்மை. ஒரே ஒரு பொய் வழக்கினால் ஒரு குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாகும்போது போலிஸ், வழக்கறிஞர், நீதிமன்றம் மற்றும் இடைத்தரகர்கள் என்று பலருக்கும் வருமானம் இருக்கிறதல்லவா? அதனைத் தொடர்ந்து வரும் விவாகரத்து பல ஆண்டுகளாக பல வழக்கறிஞர்களின் வாழ்வை வளமாக்கும் அல்லவா?
ஏழைச் சிறுமிகளின் நலனுக்காக நிதி ஒதுக்கீடு செய்து நல்ல காரியங்களைச் செய்தால் மேலே சொல்லப்பட்ட வருமானங்கள் யாருக்காவது கிடைக்குமா? நம்ம நாட்டுத் தலைவிகள் எப்போதுமே மாறுபட்ட கோணத்தில்தான் எதையும் யோசிப்பார்கள்.
====
No comments:
Post a Comment