சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, February 17, 2011

இந்திய மூத்த குடிமக்களுக்கு எச்சரிக்கை!

18.2.2011 தினகரன்

காஜியாபாத் : காஜியாபாத்தைச் சேர்ந்தவர் ஹனிப், திடீரென மாயமானார். குடும்பத்தினர் புகாரின்பேரில் போலீசார் விசாரித்தனர். இதில், ஹனிப்பின் மருமகள் கமர்ஜகானுக்கும், ரியாசுல் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது. இருவரையும் விசாரித்தபோது, ஹனிப்பை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

கள்ளக்காதலை கண்டித்ததால் கமர்ஜகானின் ஆலோசனைப்படி 3 நண்பர்கள் உதவியுடன் ஹனிப்பை கடத்தி கழு த்தை அறுத்து ரியாசுல் கொன்றுள்ளார் என்று தெரிந்தது. 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கமர்ஜகான் கர்ப்பமாக உள்ளதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
=====

கள்ளக்காதல் செய்யும் மருமகள்களுக்கு இந்திய சட்டங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிட்டால் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்கில் உள்ளே தள்ளிவிடுவார்கள் பாசக்கார மருமகள்கள். இதுபோன்ற இழி செயல்களுக்கு துணைபோவது யாரென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். பொய் வழக்குக் கொடுத்தாலும் அதைத் தட்டிக்கேட்காமல் அதை எந்தெந்தத் துறைகள் எப்படியெல்லாம் கையாள்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

கள்ளக்காதல் விஷயம் மாமனாருக்குத் தெரிந்துவிட்டால் மாமனார் ஒரு தள்ளாடும் கிழவராக இருந்தாலும் அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று அவர் மீது கூசாமல் ஒரு குற்றச்சாட்டையும் அந்த பொய் வரதட்சணைப் புகாரில் சேர்த்துவிடுவார்கள் இதுபோன்ற மருமகள்கள். இப்போதெல்லாம் "Trend" மாறிவிட்டது போலிருக்கிறது. நேரடியாக கொலையே செய்துவிடுகிறார்கள். கைதேர்ந்த மருமகள்கள்! மருமகள் இருக்கும் வீடுகளில் வாழும் மூத்த குடிமக்களே ஜாக்கிரதை.

வாழ்க பாரதம்! மன்னன் எவ்வழியோ மருமகள்களும் அவ்வழியே.
=====


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.