
மேலுள்ள படத்தைப் பாருங்கள். சட்டத்தை மீறி பொதுமக்களும், காவல் அதிகாரியும் ஒன்றாக இணைந்து சாலையை கடப்பதுபோலத்தான் அப்பாவிகளுக்கெதிராக தொடரப்படும் பொய்வரதட்சணை வழக்குகளிலும் மருமகள்களும், காவல்துறையும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள்.பொய் வரதட்சணை வழக்குகள் பதிவாகும்போது காவல்துறை முறையான புலன்விசாரணை செய்யாமல் இருப்பதால் காவல்துறையும் தங்களுக்கு சாதகமாக பொய் வழக்குப்போட உதவுகிறது என்ற தைரியத்துடன் பல மருமகள்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை அடைவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும் தினம் தினம் பல பொய் வரதட்சணை வழக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் நடந்துகொண்டிருக்கும் தற்போதைய நடைமுறைப்படி விசாரணை என்பதே பல பொய் வரதட்சணை வழக்குகளில் செய்யப்படுவதில்லை. நடிகர் பிரசாந்த் அவர்களின் மீது சுமத்தப்பட்ட பொய் வரதட்சணை வழக்கை மட்டுமே காவல்துறை முறையாக விசாரணை செய்து அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று உண்மையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தார்கள். அந்த விசாரணை அறிக்கையை இங்கே சென்று பாருங்கள் (நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை). இதுபோல எத்தனை வரதட்சணை வழக்குகளில் முறையான விசாரணை நடைபெற்றிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
பெரும்பாலான பொய் வரதட்சணை வழக்குகளில் எந்தவித விசாரணையும் செய்யாமல் பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததுபோல அப்படியே புகாரை “காப்பியடித்து” விசாரணை அறிக்கை என்ற பெயரில் அப்பாவிகளை குற்றவாளி பட்டியலில்
சேர்த்து நீதிமன்றங்களில் பொய் வழக்குகளை குவித்துவிடுகிறார்கள். அதனால் இந்திய நீதிமன்றங்கள் பொய் வரதட்சணை வழக்குகள் என்னும் குப்பைகளால் நிரம்பி வழிந்து துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது. இதன்விளைவாகப் பல அப்பாவிகள் நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் நீதிகிடைக்காமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகளின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?

1 comment:
மிகவும் சரி
--S,A
Post a Comment