இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, January 30, 2011

சோரம்போகும் பாசக்கார மருமகள்கள்

தன்னாட்சி பெற்றதாக நினைத்துக்கொள்ளும் இளம் மருமகள்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! புருசனை நம்புவதில்லை, வயதில் மூத்த மாமனார் மாமியாரை மதிப்பதில்லை.

இதுபோன்ற மருமகள்கள் மாமியார் குடும்பத்தை அழிப்பதாக நினைத்துக்கொண்டு கடைசியில் காசைக்கொடுத்து போலிச் சாமியார்களிடம் சோரம் போகிறார்கள். அல்லது கணவன் மீது பொய் வழக்குப்போட்டு காவல் நிலையத்திலும், நீதிமன்றங்களிலும் தங்களைத் தாங்களே அலங்கரித்துக்காட்டும் கிளுகிளுப்பான காட்சிப் பொருளாக தினம் தினம் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற மருமகள்களைப் பற்றி காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று ஒருநாள் அங்கு சென்று கவனித்துப்பாருங்கள். உங்கள் காதுகள் கூசும்!

தினகரன் 31 ஜனவரி 2011

கோவை : பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மோசடி ஜோதிடரின் பூஜை அறையில் இருந்து பல பெண்களின் போட்டோக்கள் கைப்பற்றப்பட்டன. அவை செய்வினை வைப்பதற்காக மருமகள்கள் கொடுத்த, மாமியார்களின் போட்டோக்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி அருகே உள்ள சிவிஜி நகரில் வசிப்பவர் வி.டி.ஈஸ்வரன். ஹம்சவேணி ஜோதிட சித்த மருத்துவ மாந்த்ரீக நிலையம் நடத்தி வந்தார். ஜோதிடம் பார்க்க சென்ற ஒரு பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்தது தொடர்பாக போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர். தற்போது, இவர் மீது ஏராளமானோர் புகார் செய்து வருகின்றனர்.

புகார் அளித்தவர்கள் சொன்ன தகவல்படி ஜோதிடர் ஈஸ்வரன் மாதம் ஸீ3 லட்சம் வரை சம்பாதித்ததாக தெரிகிறது. அவரது பூஜை அறையில் இருந்து 300க்கும் மேற்பட்ட காதல்ஜோடிகளின் போட்டோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காதலன் அல்லது காதலியை வசியப்படுத்துவதற்காக அவர்கள் கொடுத்த போட்டோக்கள்தான் அவை என்பது தெரியவந்தது. மேலும், பல மாமியார்களின் போட்டோக்களும் இருந்தன. அவை, செய்வினை வைப்பதற்காக மருமகள்கள் கொடுத்ததாக ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.