"டீன்' பதவி ஆசை: சான்றிதழில் திருத்தம் செய்து புனிதமான டாக்டர் தொழிலுக்கு களங்கம்
"அரசு மருத்துவக் கல்லூரி டீன் பதவிக்கு ஆசைப்பட்டு, கல்வி சான்றிதழில், "கை' வைத்த பேராசிரியை மீது, விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்; முதற்கட்டமாக, "சஸ்பெண்ட்' நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, தமிழக சுகாதாரச் செயலர் சுப்புராஜ் தெரிவித்தார்.சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில், அறுவை சிகிச்சை பேராசிரியையாக வேலை செய்பவர் பூங்கோதை. சில மாதங்களுக்கு முன், தன்னுடைய சான்றிதழ் காணவில்லை என, புகார் செய்தார்; மாற்று சான்றிதழ் பெற்றார்.அதில், தன்னுடைய பிறந்த ஆண்டை 1953 என்பதற்கு பதிலாக, 1956 என திருத்தம் செய்துள்ளார்.
அதேபோல, பணிக்கால பதிவேட்டிலும் திருத்தம் செய்து, அத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைத்துள்ளார்.இந்த மோசடி காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரி டீன் பதவி உயர்வுக்கான பட்டியலில், பூங்கோதை பெயர் முதலிடத்துக்கு வந்தது. இதுகுறித்து, பதவி உயர்வு பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டதால் பாதிக்கப்பட்ட டாக்டர் ஒருவர், அப்போதைய சென்னை மருத்துவக் கல்லூரி டீன் மோகனசுந்தரத்துக்கு புகார் அனுப்பினார்.அதன் எதிரொலியாக, அரசு கெஜட்டில் பதிவாகி இருந்த பூங்கோதையின் வயது உள்ளிட்ட விவரங்கள், ஆய்வு செய்யப்பட்டது. அதில், பேராசிரியை பூங்கோதை பிறந்த ஆண்டு, 1953 என்று இருப்பது உறுதியானது. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, அவரது பள்ளிப் படிப்பு சான்றிதழ் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன.பள்ளி சான்றிதழிலும் 1953 என பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பூங்கோதை வயது தொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், அவர் செய்துள்ள மோசடி அம்பலமாகியுள்ளது.இது தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி வரும், சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் கனகசபை கூறுகையில், "மருத்துவக் கல்லூரி பேராசிரியை பூங்கோதை, சான்றிதழில் பிறந்த ஆண்டை திருத்தி மோசடி செய்திருப்பது, பள்ளி சான்றிதழ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணை நடக்கிறது."இரண்டொரு நாளில் சுகாதாரச் செயலர் சுப்புராஜ் வசம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். துறை ரீதியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கட்டாய ஓய்வு வழங்கவும் வாய்ப்புள்ளது' என்றார்.சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் கூறுகையில், "பேராசிரியை மீதான அறிக்கை கைக்கு கிடைத்ததும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் உண்டு. முதற்கட்டமாக "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.அரசு மருத்துவக் கல்லூரியில் டீன் பதவிக்கு வர வேண்டும் என்றால், ஓய்வு பெறுவதற்கான கால அவகாசம் குறைந்தது ஓராண்டாவது இருக்க வேண்டும். ஆனால், பூங்கோதை ஓய்வு பெற இன்னும் ஆறு மாதங்களே உள்ளது.எனவே, டீன் பதவிக்கு ஆசைப்பட்டு, திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு, புனிதமான டாக்டர் தொழிலுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார் என, பாதிக்கப்பட்ட டாக்டர்கள் கூறினர்.குறிப்பு: வழக்கம்போல் இந்த சட்டமும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும். ஆண்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.
THE PROHIBITION OF SEXUAL HARASSMENT OF WOMEN AT WORKPLACE BILL, 2010 சட்டத்தின் ஒரு பகுதி
3. At any workplace, no woman, shall be subjected to sexual harassment including unwelcome sexually determined behavior, physical contact, advances, sexually coloured remarks, showing pornography, sexual demand, request for sexual favours or any other unwelcome conduct of sexual nature whether verbal, textual, physical, graphic or electronic or by any other actions, which may include, but is not limited to -
(i) implied or overt promise of preferential treatment in employment; or
(ii) implied or overt threat of detrimental treatment in employment; or
(iii) implied or overt threat about the present or future employment status;
(iv) conduct which interferes with work or creates an intimidating or offensive or hostile work environment; or
(iv) Humiliating conduct constituting health and safety problems.
1 comment:
சட்டம், நா அப்டித்தான் ....
இதுல இருக்கு ஒரு சூப்பர் ஆப்பு ....
"which may include, but is not limited to"
மவனே எல்லா பயலுகளுக்கும் எனிமா தான்.
Post a Comment