2 கணவர்களை விவாகரத்து செய்து 3-வது கணவரை கொன்று கால்வாயில் வீசிய பெண்
மாலைமலர் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09, 2011
புதுடெல்லி, ஜன.9-மாலைமலர் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09, 2011
டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்த பெண் ஷேனாஸ் (வயது 35). இவர் திருமணமான சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்தாள். அதன்பறகு 2-வது திருமணம் செய்தாள். அவருடனும் சில வருடங்களே குடும்பம் நடத்தி அவரையும் விவாகரத்து செய்தாள். 2 கணவர்கள் மூலம் அவளுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகளுக்கு 14 வயதும், 3-வது மகளுக்கு 5 வயதும் ஆகிறது. இந்த நிலையில் 35 வயதான ஷேனாஸ் தன்னை விட 6 வயது குறைந்த 29 வயதான ராகேஷ்குப்தா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் கடந்த 3 வருடங்களாக கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இதற்கிடையே ராகேஷ் குப்தாவை கடந்த அக்டோபர் மாதம் திடீர் என்று காணவில்லை. இதுபற்றி ஷேனாஸ் போலீசில் புகார் செய்தாள். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.
ஷேனாசுக்கு சகீல், சாகித் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எந்த துப்பும் கிடைக்கவில்லை. இவர்கள் ஷேனாஸ் குடியிருக்கும் பகுதியிலேயே வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.
இதில் சாகித் பழைய குற்றவாளி என தெரியவந்தது. சந்தேகப்பட்டு அவனது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது சாகித்தின் வீட்டு “செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் அடித்தது. சந்தேகப்பட்டு பார்த்த போது அங்கே ஒரு பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அது காணாமல் போன ராகேஷ் குப்தா என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஷேனாசை பிடித்து விசாரித்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சம்பவத்தன்று ராகேஷ் குப்தாவிடம் ஷேனாஸ் பணம் கேட்டாள். ஆனால் ராகேஷ் குப்தா டெய்லர் தொழில் பார்த்து வந்ததால் ஷேனாஸ் கேட்ட தொகையை கொடுக்க முடியவில்லை.
இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது கிரிக்கெட் மட்டையால் ஷேனாஸ், ராகேஷ்குப்தாவை தலையில் அடித்தாள். இதில் அவர் செத்துப் போனார். பிணத்தை 24 மணி நேரம் தனது வீட்டிலேயே வைத்து இருந்தாள். மறுநாள் சகோதரர்கள் மூலம் பிணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்று செப்டிக் டேங்குக்குள் போட்டு விட்டனர்.
கொலையை மூடி மறைக்க ராகேஷ்குப்தா காணாமல் போய்விட்டதாக ஷேனாஸ் போலீசில் புகார் செய்து நாடகமாடினாள். ஆனால் போலீசார் துப்பு துலக்கி ஷேனாசையும், அவளது சகோதரர் சகீல் ஆகியோரை கைது செய்தனர். சாகித் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment