இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, January 11, 2011

விதவிதமாக திருமண உறவை அனுபவிக்கும் பெண்கள்

பெண்களுக்கு சட்டங்கள் சாதகமாக இருப்பதால் திருமண உறவை எப்படியெல்லாம் அனுபவித்து மகிழ்கிறார்கள்! ஆண் இதுபோல திருமணத்தை விதவிதமாக அனுபவிக்க நினைத்தால் அவன் மீது பலதார மண தடுப்புச் சட்டம், கற்பழிப்பு, வரதட்சணைக் கொடுமை, பெண் கொடுமை என அடுக்கடுக்காக பல சட்டங்கள் பாய்கின்றன. அதுவே ஒரு பெண் இந்த வேலைகளைச் செய்தால் அந்தப் பெண்ணை ஆதரித்து திரும்பவும் ஆணைத்தான் சட்டங்கள் தண்டிக்கின்றன. விசித்திரமான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்!

2 வது கணவர் ஓட்டம் : கர்ப்பிணி மனைவி புகார்
தினமலர் ஜனவரி 11, 2011

இளஞ்செம்பூர் : இளஞ்செம்பூர் அருகே வீரம்பலில் முதல் கணவரை பிரிந்த நிலையில், இரண்டாவதாக மணமுடித்த கணவர் ஓட்டம் பிடித்ததால், கர்ப்பிணி மனைவி ஐகோர்ட் உத்தரவுபடி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இளஞ்செம்பூர் அருகே வீரம்பலை சேர்ந்த முத்துக்குமாரி (23) அதே ஊரை சேர்ந்த ஞானராஜ் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். குழுந்தை ஒன்றும் பிறந்தது. வேலைக்காக ஞானராஜ் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில், முத்துகுமாரிக்கும் அதே ஊரை சேர்ந்த இருதயராஜுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதற்கு முத்துக்குமாரி வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்காமல், இருவரையும் கணவன் மனைவியாக சேர்த்து, இருதயராஜிடம் 50 ரூபாய் பத்திரத்தில் , முத்துகுமாரியை பிரியமாட்டேன் என எழுதி வாங்கி கொண்டு, சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ஐந்து மாதங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த இருதயராஜ், முத்துக்குமாரியை கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவானார். தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ,மதுரை ஐகோர்ட் கிளையில் முத்துக்குமாரியின் தந்தை ஞானஒளிவு மனு செய்தார். அதன்படி தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ,இளஞ்செம்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

===============

நாகர்கோவில் : மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவர், மண மேடையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே கடம்பன்குழியைச் சேர்ந்தவர் வினோ (35). இவருக்கும், அஞ்சுகிராமம் பாப்பையன் மகள் ஹெப்சிபாவுக்கும், எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜோன்சி (8), மிஸ்பா (7) என இரு மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஹெப்சிபா தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், காட்டாத்துறையை சேர்ந்த, சாந்திரி (28) என்ற பெண்ணை, வினோ, இரண்டாம் திருமணம் பேசி, சாமியார் மடத்தில் உள்ள ஒரு மண்டபத்தில், நேற்று திருமணம் நடக்க ஏற்பாடானது. இது பற்றி தகவல் கிடைத்த ஹெப்சிபா, தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குச் சென்ற போது வினோ, சாந்திரி கழுத்தில் தாலி கட்டிவிட்டார். மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததற்காக, போலீசார் அவரை கைது செய்தனர். இதனால், திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, சாந்திரி பெற்றோரை வினோ ஏமாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது.

============

மேலுள்ள இரண்டு செய்திகளையும் பாருங்கள். முதல் செய்தியில் கணவன் வெளிநாடு சென்றதும் மனைவி இரண்டாவதாக ஒரு ஆளை தேர்வு செய்து சந்தோஷமடைந்து பிறகு அந்த இரண்டாவது ஆள் மீது புகார் கொடுத்திருக்கிறார். இதில் ஏமாற்றப்பட்ட முதல் கணவனைப் பற்றி சட்டம் கவலைப் பட்டதா? அல்லது அந்தப் பெண் செய்தது சரியா என்று யாராவது யோசிப்பார்களா?

இரண்டாவது செய்தியில் இதேபோல கணவன் முதல் மனைவியை விட்டு இரண்டாவது திருமணம் செய்ததும் போலிஸ் அவரை கைது செய்துவிட்டார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் சட்டம் ஆண், பெண் இருவரையும் எப்படி வெவ்வேறு விதமாக பார்க்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று புரிந்துகொள்ளவேண்டும். அதுதான் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சரியான சமஉரிமை.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.