பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்ததுகூட தெரியாமல் பல ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருப்பவர்கள் இந்த குடியரசு தினத்திலாவது தெரிந்துகொள்ளுங்கள்.
திருச்சி : திருச்சியில் பத்திரம் பதிவு செய்வதற்கு, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள, பெண் அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேஷ் கண்ணா (40). சில நாட்களுக்கு முன், உறையூர் பாண்டமங்கலத்தில் உள்ள, தன் இரண்டு வீட்டுமனைகளை, குளித்தலையைச் சேர்ந்த லட்சுமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாருக்கு விற்பனை செய்தார். அவர்களது பெயரில் வீட்டுமனைகளை பதிவுச் செய்து பத்திரம் பெறுவதற்காக, ஜன., 24ம் தேதி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள சசிகலாவை (36) அணுகினார். "பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்றால், ஒரு பத்திரத்துக்கு தலா, 10 ஆயிரம் என, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும்; மறு நாள் பணம் கொடுத்தால் தான் பத்திரப் பதிவு செய்ய முடியும்' என்று சசிகலா கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஷ் கண்ணா, நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்கள், ரசாயனம் பூசப்பட்ட, 20 ஆயிரம் ரூபாயை, ராஜேஷ் கண்ணாவிடம் கொடுத்தனர். நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார், சார் பதிவாளர் அலுவலகத்தில் மாறு வேடத்தில் காத்திருந்தனர்.
ராஜேஷ் கண்ணாவிடம் இருந்து சசிகலா பணம் வாங்கிய போது கையும், களவுமாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ராஜசேகரன் முன் சசிகலா ஆஜர்படுத்தப்பட்டார். சசிகலாவை, 15 நாள், ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, வயலூர் சாலையில் உள்ள சசிகலா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அவர் வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்ந்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து, வங்கி கணக்கு புத்தகம் உட்பட முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
No comments:
Post a Comment