சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, January 24, 2011

பையில் பிறந்த குழந்தை!

இப்போதெல்லாம் இந்தியாவில் குழந்தைகள் கருப்பையிலிருந்து பிறக்கிறதா அல்லது ஏதாவது ஒரு பையில் பிறக்கிறதா என்று விஞ்ஞானத்திற்கே சவால் விடும் அளவிற்கு பிறந்த குழந்தைகளை வீதியிலும், குப்பைத்தொட்டியிலும், சாக்கடையிலும் வீசியெறியும் வினோதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

வெளிநாட்டுக் கூட்டு முயற்சியில் இந்திய மக்கள் தொகையைக் குறைக்க இப்படி ஏதாவது ஒரு புது திட்டம் போட்டிருக்கிறார்களா என்றும் தெரியவில்லை!


டிராவல் பேக்கில் ஆண் குழந்தை வீசிச் சென்ற தாய் யார்?
தினகரன் 25.1.2011

சென்னை : பிறந்த ஆண் குழந்தையை டிராவல் பேக்கில் வைத்து ரோட்டில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். எஸ்பிளனேடு பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நேற்று குழந்தை அழுகுரல் கேட்டது. அங்கு வந்த மாநகர பஸ் கண்டக்டர் சத்தம் கேட்டு தேடினார். அப்போது ரோட்டோரத்தில் கிடந்த டிராவல் பேக்கில் இருந்து சத்தம் வந்ததை கேட்டார். உள்ளே பார்த்தபோது,

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையின் தொப்புள் கொடிக்கூட வெட்டப்படாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கி உடல் முழுவதும் இருந்த ரத்தத்தை கழுவினார். அதன் பிறகு எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் அருளிடம் ஒப்படைத்தார்.

பிறந்து சில மணி நேரத்தில் ஈவு இரக்கம் இல்லாமல் குழந்தையை இப்படி தூக்கி வீசிவிட்டு சென்றவர்கள் யார்? கள்ளக்காதலில் பிறந்தா? என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தில் கூடிவிட்டனர். குழந்தையை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என பாசத்தோடு சிலர் கேட்டனர்.

ஆனால் போலீசார், குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர். கொடுங்கையூரில் அன்பு இல்லத்தில் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

==========

மேலுள்ள செய்தியைப் பார்க்கும்போது அமெரிக்க நாட்டு பள்ளிச் சிறுமிகள் எவ்வளவோ பரவாயில்லை! பள்ளியில் படிக்குபோதே குழந்தை பெற்றாலும் அதை வீதியில் வீசி எறியாமல் பத்திரமாக பாசமுடன் வளர்க்கிறார்கள். இந்தியாவில் மேலைநாடுகளைப் பார்த்து பாதி விஷயங்களை மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். இப்போதுதான் திருமணம் செய்யாமல் கூடிவாழும் முறையில் அல்லது சரியான திருமண வயதிற்கு முன்பாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையை தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப் பெற்றுக்கொள்ளும் குழந்தையை வீதியில் வீசியெறியாமல் இருக்கும் மனப்பக்குவம் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

விடுதலை விரும்பிகள் இதற்கு ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் வகுத்தால் நல்லது.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.