இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, January 04, 2011

இப்படியும் ஒரு மனைவி, இப்படியும் ஒரு போலிஸ்


நெல்லை: பாளையங்கோட்டையில் பார்வையற்றவர் மனைவியுடன் முன்னாள் காவலர் ஓட்டம் பிடித்துள்ளார். தனது மனைவியை மீட்டுத் தருமாறு கணவர் நெல்லை எஸ்பியிடம் புகார் கொடுத்தார்.

பாளை கக்கன்நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ராஜ்குமார். பார்வையற்றவரான இவர் நேற்று எஸ்பி விஜேந்திர பிதாரியிடம் அளித்த மனுவில் குறிப்பி்ட்டுள்ளதாவது,

எனக்கும், கக்கன்நகரைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகன் 8-ம் வகுப்பிலும், மகள் 6-ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். மனைவி சத்துணவு ஊழியராக வேலை செய்தார். நான் பூத் ஒன்றை நடத்துகிறேன்.

எங்கள் பூத்திற்கு சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த சுப்பையா என்பவர் வருவார். அவர் இன்ஸ்பெக்டர் என கூறி பல இடங்களில் மோசடி செய்ததால் டிஸ்மி்ஸ் செய்யப்பட்டார். அவர் என மனைவியுடன் தொடர்பு வைத்தார்.

இதை நான் கண்டித்ததால் என் மனைவியை அழைத்து கொண்டு சென்று விட்டார். நான் அவர்களை பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்தேன். எனவே பார்வையற்ற எனக்கு எனது மனைவியை மீ்ட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.