கண்டிப்பாக கண்ணகியை யாரும் புத்திசாலி என்று சொல்லமாட்டார்கள். ஏனென்றால் கணவனுக்காக அவள் எதைச்செய்தாலும் அவையெல்லாம் சரி என்று நினைத்து விட்டாள். இந்தக்காலத்தில் அந்தச் செயலுக்குப் பெயர்தான் சுயசிந்தனையற்ற “பெண்ணடிமைத்தனம்”. தனக்கென்று எதையும் சிந்திக்கத்தெரியவில்லையே!
இந்தக்காலத்தில் தன் விருப்பத்திற்குத் தடையாக வரும் கணவனையும் எதிர்க்கலாம், அதையும் தாண்டி கொல்லவும் செய்யலாம் என்ற தெளிவான சுய சிந்தனையுடன் இருப்பதற்குப் பெயர்தான் சுயமாக சிந்திக்கத் தெரிந்த பெண்ணடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட “சுதந்திரப் பெண்”.
தினமலர் ஜனவரி 07,2011
தூத்துக்குடி:தூத்துக்குடியில், கள்ளக்காதலனோடு சேர்ந்து, கணவர் முகத்தை தலையணையால் அழுத்தி, கொல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி, தாளமுத்துநகரை அடுத்த அய்யர்விளையைச் சேர்ந்தவர் நடராஜன்(49); மளிகை கடை வியாபாரி. இவரது மனைவி பால்கனி(40). இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில், பால்கனிக்கும், உறவினர் பழனிக்கும்(43), கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதை, நடராஜன் கண்டித்தார்.நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில், பால்கனி வீட்டிற்கு வந்த பழனி, அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்த நடராஜன், அதை பார்த்து விட்டார். அதனால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.உடனே பால்கனியும், பழனியும் சேர்ந்து, தலையணையை எடுத்து, நடராஜன் முகத்தில் அழுத்தினர். அதில், அவர் மூச்சுத்திணறி இறந்தது போல நடித்ததால், அவர் இறந்துவிட்டதாக கருதி, இருவரும் வீட்டை விட்டுவெளியேறினர்.சிறிது நேரம் கழித்து எழுந்த நடராஜன், நடந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அவரை கொலை செய்ய முயன்ற மனைவி பால்கனி, கள்ளக்காதலன் பழனியை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment