இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, January 21, 2011

பெண்ணைக் கற்பழிக்க அரசாங்க நிதியுதவி!



சென்னை : நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த பெண் கீதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:


கடந்த 1984ம் ஆண்டு எனக்கும் எனது மைத்துனிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதுபற்றி போலீசில் புகார் தர நான் நாங்குனேரி சர்கில் போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். அங்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கள தன்ராஜ் என்பவர் என்னை கற்பழித்து விட்டார். பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை வட்டியுடன் சேர்த்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

வழக்கை தனி நீதிபதி விசாரித்து, மனுதாரருக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை அரசு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து தர வேண்டும், ஏற்கனவே அரசு ரூ.1 லட்சம் நஷ்டஈடு கொடுத்துள்ளதால் மீதம் உள்ள 8 லட்சம் ரூபாயை அரசு தர வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால் ,நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை அரசு தான் தர வேண்டும். ரூ.8 லட்சம் ரூபாய் மட்டும் அரசு கொடுத்தால் போதும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டது தவறானது.

ஏற்கனவே அரசு ஒரு லட்சம் நஷ்டஈடு தொகை கொடுத்திருந்தாலும் மேலும் ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகை அரசு தர வேண்டும். அதுவும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 6 வாரத்திற்குள் தர வேண்டும். இந்த தொகையை அரசு முன்னாள் டி.எஸ்.பி. மங்கள் தன்ராஜிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். அரசு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

=======

காவல் நிலையத்திற்கு வரும் பெண்ணை கற்பழிப்பது என்பது அவ்வப்போது செய்தித்தாள்களில் வந்துகொண்டிருக்கும் செய்தி. இவர்களை நம்பித்தான் பல வரதட்சணை வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. இதுபோன்ற பொய் வரதட்சணை வழக்குகளை விசாரணை செய்யாமலேயே குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அப்பாவிகளை நீதிமன்றத்தில் அலையவிடுவதும் இவர்கள்தான்.

சில நாட்களுக்கு முன் கோவையில் சிறுவர்களை கடத்திக் கொன்றதாக பிடிக்கப்பட்ட ஆளை நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி “எண்கவுட்ண்டர்” என்ற பெயரில் சுட்டுத்தள்ளி புகழை வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். ஆனால் காவல்துறையிலேயே இருந்துகொண்டு காவல்துறையின் கண்ணியத்தை சிதைத்ததோடு மட்டுமல்லாமல் பெண்ணிற்கு பாதுகாப்பு தரவேண்டிய கடமையை செய்யாமல் புகார் கொடுக்க வந்த பெண்ணையே கற்பழித்த போலிஸிற்கு “டபுள் எண்கவுண்ட்டர்” போட்டு மார்தட்டிக்கொள்வார்களா? போலிஸின் இதுபோன்ற வீரச்செயல் பற்றி எப்போதாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதுபோல புகார் கொடுக்க வரும் பெண்களை கற்பழிப்பவருக்கு தண்டணையாக வரும் அபராதத்தொகையை அரசாங்கம் கட்டுகிறதே. இது என்ன வினோதமான செயல்!

மேலுள்ள செய்தியில் ஒரு பெண் தனக்கு காவல்துறையால் இழைக்கப்பட்ட அநீதிக்கு சுமார் 25 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறார். பெண்கள் நலவாரியம், பெண்கள் அமைச்சகம், பெண் விடுதலை விரும்பிகள் போன்றவர்களுக்கு மேலுள்ள செய்தியில் இருக்கும் பெண்ணைப் போல பாதிக்கப்பட்டவர்களெல்லாம் கண்ணுக்குத் தெரிவதில்லையே அது ஏன்? எப்போதுமே இவர்கள் கண்களுக்குத் தெரிவதெல்லாம் தனது கள்ளக்காதலை பாதுகாக்க பொய்வரதட்சணை வழக்குப்போடும் “அபலைப் பெண்களும்” , ஆணுக்குச் சரிநிகர் சமமாக “பப்புகளில் (Pub)” குடித்துவிட்டு கூத்தடிக்க உரிமை கேட்கும் புரட்சிப் பெண்கள் மட்டுமே. என்ன ஒரு விசித்திரமான பெண் விடுதலைப்போராட்டத் தியாகிகள் !




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.