இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, February 23, 2011

மாறிவரும் இந்தியக் குடும்பங்கள்!

திருமணமான தங்களது மகள் ஏதாவது தப்புத் தண்டா செய்து அது அவளுடைய கணவனுக்குத் தெரிந்துவிட்டால் உடனடியாக மகளை ஏவிவிட்டு பொய் வரதட்சணை வழக்குப் பதிவுசெய்வதுதான் வழக்கமாகப் பெற்றோர்கள் செய்துவந்த நடைமுறை.

இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் ரொம்ப திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. வீட்டுக்கு அடங்காத பெண்ணை தாங்களே கூலிப்படை வைத்து கொன்றுவிடுகிறார்கள். எது எப்படியோ வீட்டிற்கு வரும் அப்பாவி மருமகனை பலிகடாவாக்கி பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து சீரழிக்காமல் தங்கள் குடும்பத்திற்குள்ளேயே சங்கு ஊதிக்கொள்வது மிகவும் உத்தமமான செயல். அதுதான் பின்வரும் செய்தியில் வந்திருக்கிறது.


பிப்ரவரி 23,2011 தினமலர்

பல்லாவரம்: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற தந்தையை கூட்டாளிகளுடன் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மதுரை, திருநகரை சேர்ந்தவர் மனோகர் (51). இவரது மகள் தீபிகா (19). பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (23). இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தீபிகாவிற்கு 18 வயது பூர்த்தியானது. இதையடுத்து, காதலனுடன் அவர் மதுரை, தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார். அப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு போலீசார் செய்த சமரசத்தை பெற்றோர் ஏற்க மறுத்தனர். மேலும், தங்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டால், கொலை செய்து விடுவோம் என்று பெண்ணின் பெற்றோர் மிரட்டினர். இதையடுத்து, தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தாம்பரம் சானடோரியம், மாதவன் தெருவில் நாகராஜ் மனைவியுடன் வாடகை வீட்டில் குடிபெயர்ந்தார். வீட்டிற்கு அருகே வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி மதியம் தீபிகா வீட்டில் தனியாக இருந்த போது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த தீபிகா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி, பரங்கிமலை துணை கமிஷனர் ராமர் மேற்பார்வையில், தாம்பரம் உதவி கமிஷனர் நாராயணசாமி, குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையில், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், தீபிகாவின் தந்தை மனோகர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. உள்ளகரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மனோகரையும், குரோம்பேட்டை நியூ காலனியில் தங்கியிருந்த பாரதி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (20), முருகன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து மனோகர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: என் மகளின் காதல் விவகாரம் தெரிந்தவுடன் அவரை கண்டித்தேன். பொறியியல் கல்லூரியில் மகளை படிக்க வைத்தேன். இரண்டு லட்ச ரூபாய் கல்லூரிக்கு கட்டணம் செலுத்தினேன். ஆனால், எங்களை ஏமாற்றிவிட்டு, திட்டமிட்டபடியே நாகராஜை, அவள் திருமணம் செய்து கொண்டாள். இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. என் சகோதரர் மகன் பாரதியின் உதவியுடன், மதுரையை சேர்ந்த கூலிப்படையை வைத்து தீபிகாவை கொலை செய்ய திட்டமிட்டோம். இதன்படி கூலிப்படைக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று, மதுரையில் இருந்து கூலிப்படையினர் காரில் சென்னை வந்தனர். பாரதி அவர்களுடன் வந்தான். தீபிகாவை கூலிப்படைக்கு அவன் தான் அடையாளம் காட்டினான். இவ்வாறு மனோகர் வாக்குமூலத்தில் கூறினார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

துணுக்குச் செய்தி: போலிஸ்காரர் மகளிடம் திருடிய களவாணிகள்!

தேனி: காதலனாலும், அவரது நண்பனாலும் ஏமாற்றப்பட்டு, திருப்பூரில் நடுரோட்டில் தவித்த தேனி போலீஸ்காரர் மகள் மீட்கப்பட்டார். தேனி அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் மேகலா (பெயர் [...]
=====


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.