எப்போதுதான் பெண் அதிகாரிகளை நிம்மதியாக “தொழில்” செய்ய விடுவார்களோ இந்த கொடுமைக்கார பொதுமக்கள், குறிப்பாக “ஆண்கள்”.
தினகரன் 11.2.2011
சென்னை : பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட பெண் பதிவாளர் கைது செய்யப்பட்டார். சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாசித். இவர், அதே பகுதியில் செருப்புக் கடை வைத்துள்ளார். இவரது உறவினர் ஜியாவுல் ஹக். இவர், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். இதனால் அவர் அனுப்பிய பணத்தைக் கொண்டு ஏழுகிணறு பகுதியில் ரூ.25 லட்சத்துக்கு ஒரு வீட்டை அப்துல் பாசித் வாங்கினார்.
பின் அதை ஏழுகிணறு பகுதியில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நேற்று பதிவு செய்தார். பதிவு செய்த பத்திரத்தை அப்துல் பாசித் கேட்டபோது, அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட பதிவாளர் ராதா (57) கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அப்துல் பாசித், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி துக்கையாண்டியிடம் புகார் செய்தார்.
நேற்று மாலையில், ஏழுகிணறு பகுதியில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காத்திருந்தனர். அப்போது, ரூ.5 ஆயிரத்தை ராதாவிடம் அப்துல் பாசித் கொடுத்தபோது, அவரை கைது செய்தனர்.
2 comments:
லஞ்சம் வாங்குவதில் ஆண் என்ன பெண் என்ன எல்லாம் ஓரினம் தான்..
என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்! குற்றம் என்று வரும்போது பெண்கள் செய்யும் குற்றங்களில் எப்போதும் ஒரு நியாயம் இருக்கும். இந்திய சட்டங்கள் அவர்களுக்கென்று சிறப்பு சலுகைகள் கொடுத்திருக்கிறது.
இந்திய சட்டத்தின் முன் ஆண் மட்டுமே எப்போதும் குற்றம் செய்பவன். அதற்காகவே அவன் படைக்கப்பட்டிருக்கிறான் என்ற ஒரு எழுதாத கோட்பாடு இந்த இந்திய சமுதாயத்தில் இருக்கிறது.
Post a Comment