சென்னை அபிராமபுரம் கோவிந்தசாமி நகர் கட்ட பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (34). பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அபிராமபுரத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். கஸ்தூரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. கணவர் பெயர் ஆறுமுகம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர்.கஸ்தூரி தனது மகளை தாய் வீட்டில் ஒப்படைத்து விட்டு லோகநாதனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகம் மனைவியைத் தேடி அபிராமபுரம் வந்தார். லோகநாதனை சந்தித்து மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். கஸ்தூரியையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு இருவரும் மறுத்து விட்டனர்.நேற்று இரவு 11.30 மணிக்கு ஆறுமுகம் மீண்டும் வந்து லோகநாதனிடம் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். அனுப்ப மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை குத்தினார்.இதில் கத்திக்குத்து பட்ட லோகநாதன் அதே இடத்தில் இறந்தார். பின்னர் ஆறுமுகம் கத்தியுடன் போய் அபிராமபுரம் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
ஏதோ ஒரு காரணத்தால் தாலி கட்டிய கணவனைப் பிடிக்காமல் சிலர் பிரிந்து வாழ்கின்றனர். சிலர் பலவித தப்புக் கணக்குப் போட்டு கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையில் தள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பொய் வரதட்சணை வழக்குகளை போட்டுவிட்டு பிறகு கணவனைப் பிரிந்து வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்திய நீதித்துறையின் புண்ணியத்தால் வழக்கும் ஒரு முடிவுக்கு வராது, SIF-ன் தவறான வழிகாட்டுதலால் கணவனும் அவ்வளவு எளிதாக மனைவிபோடும் கணக்கிற்கு அடிபணிந்து அவளது வழிக்கு வரமாட்டான். கடைசியில் இதுபோன்ற 498A-இளம் மனைவியர் இளமையில் தனிமையில் இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு நீதிமன்றத்திலும், காவல்நிலையங்களிலும் பார்வைக்கு விருந்தாகிவிடுகிறார்கள்.
இப்படி எந்தப் பிரிவின் கீழ் கணவனைப் பிரிந்து இருந்தாலும் சட்டப்படி விவாகரத்து செய்யும்வரை இவர்கள் அந்த ஆணுக்கு சட்டப்படி மனைவிதான் என்று இந்திய திருமணச் சட்டம் சொல்கிறது. இந்த சட்டம் ஆணுக்கும் பொருந்தும் என்பதால் சில பொய் வரதட்சணை வழக்குப்போடும் பெண்கள் கணவனை துன்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு சட்டப்படியான விவாகரத்தைப் பெறாமல் தனியாக இருந்துகொண்டு திருமணமான பெண் என்ற பெயரிலும் இல்லாமல், விவாகரத்து பெற்றவள் என்ற பெயரிலும் இல்லாமல், திருமணம் ஆகாதவள் என்ற பெயரிலும் இல்லாமல் சமுதாயத்தில் ஒரு சுய அடையாளமே இல்லாமல் “498A-பொம்பளை” என்ற ஒரு தனிப்பிரிவாக திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
கடைசியில் இளமையில் தனிமையில் இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு இளமையின் உந்துதலால் திருமணம் செய்யாமல் கூடிவாழலாமா? கள்ளக்காதலில் ஈடுபடலாமா? என்று தப்புத் தப்பாக யோசிக்கவேண்டியிருக்கிறது.
இவர்கள் தங்களது சுயதேவைக்கு ஆள் தேடும்போதுதான் சமுதாயத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன. கள்ளக்காதல், கொலை போன்ற குற்றங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. இதோடு மட்டுமல்லாமல் இவர்களின் வயிற்றில் பிறந்த பாவத்திற்காக இவர்களின் குழந்தைகள் சரியான ஒரு வாழ்க்கை முறை இல்லாமல் சிதைக்கப்படுகிறார்கள்.
சமுதாயத்தில் 498A-பெண்களுக்கு இதுபோன்ற இன்னல்கள் ஏற்படாமல் இருப்பதற்கு பெண்கள் அமைச்சகமும், பெண்கள் வாரியமும் 498A சட்டத்தை உருவாக்கிக் கொடுத்ததுபோல் தனியாக “நிதி ஒதுக்கீடு” செய்து பொய் வரதட்சணை வழக்குப்போட்டுவிட்டு இளமையில் தனிமையில் தவிக்கும் பெண்களுக்காக தனியாக அன்னை “..............’’ 498A-பெண்கள் மறுமணத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கித் தரவேண்டும். (498A) மரம் வைத்தவர்கள்தானே (மறுமணம் என்ற) தண்ணீரையும் ஊற்றவேண்டும்!
இந்த புதிய திட்டத்தை உருவாக்கினால் நாட்டில் 75% வன்முறைகள் குறைந்துவிடும். இப்போது நாட்டில் நடக்கும் பெரும்பாலான வன்முறைகள் இதுபோன்ற கள்ளக்காதல், குடும்பப்பிரச்சனை இவைகளால்தான் ஏற்படுகிறது என்று தினமும் செய்தித்தாள் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்தத்திட்டத்தை உருவாக்கினால் நாட்டில் பல 498A அபலைப் பெண்கள் தங்களுக்கென்று சரியான ஒரு முகவரியுடன் தைரியமாகவும், சுதந்திரமாகவும் தங்களுக்கான வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளும் அற்புதமான நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுவரை மேலுள்ள செய்தியைப்போலத்தான் பல வன்முறைச்செய்திகள் தினம் தினம் வந்துகொண்டிருக்கும்.
No comments:
Post a Comment