சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, October 07, 2010

மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்

திருமணமானவுடன் மாமியார் மாமனாரை விரட்டிவிட்டு கணவனை அடிமைப்படுத்த நினைக்கும் புரட்சிப் பெண்கள் பலர் இப்போது உருவாகிவிட்டார்கள். பெற்றவர்களை வெளியே விரட்டவேண்டும் அல்லது தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று பல மனைவியர் கணவனுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி “அன்புக் கட்டளை” போடுகிறார்கள்.

இதுபோன்ற மூத்தோர் இல்லாத குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டை களைவதற்கும், தக்க அறிவுரை கூறுவதற்கும் ஆளில்லாமல் எல்லாக் குடும்பப் பிரச்சனைகளுக்கும் “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் வழிகாணலாம்” “வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி மிரட்லாம்” என்று பெண்களுக்குத் தவறான வழிகாட்டப்படுவதால் மூத்தோர் இல்லாத வீட்டில் போலிசும் சட்டமும்தான் புகுந்து குடும்பங்களை சிதைத்துவிட்டுச் செல்லும். இதனால் நஷ்டப்படப்போவது பெண்களும், அப்பாவிக் குழந்தைகளும்தான்.

தலைவிகள் சொல்லும் பின்வரும் அறிவுரைகளைப் படித்துவிட்டு அதனைத் தொடர்ந்து வரும் செய்தியையும் படியுங்கள்.


"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

கணவருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா நடத்திய மனைவி

அக்டோபர் 07,2010 தினமலர்

விருதுநகர்: விருதுநகரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவர் வீட்டு முன் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார். போலீசார் சமரசத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டார்.

விருதுநகர் பெரிய கிணற்று தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகள் அஷ்டலட்சுமி(32). இவருக்கும் முத்தமிழ் வீதி குறுக்கு தெருவைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் சிவசங்கருக்கும் 1998ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 53 சவரன் நகைகள், பொருட்கள் வழங்கப்பட்டன.

சிவசங்கர், பழைய பாலி பேக் இயந்திரங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பாலகணேஷ்(12) பாலமுருகன்(9) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.தொழிலுக்காக ஊர், ஊராக சென்று வருபவர். இவர் மனைவியையும், குழந்தைகளையும் கவனிப்பதில்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மகளிர் போலீசில் புகார் செய்ததில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் செய்து அனுப்பினர். இந்நிலையில், சிவசங்கர், மனைவிக்கு நேற்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் கணவருடன் சேர்த்து வைக்கும் படி கூற மாமனார் வீட்டிற்கு அஷ்டலட்சுமி வந்தார். அங்கு யாரும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி முதல் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். பாண்டியன் நகர் போலீசார், புகார் தெரிவிக்க கூறியதால், இரவு 7.15 மணிக்கு அஷ்டலட்சுமி தன் போராட்டத்தை கைவிட்டார்.

=======

“வெளிச்சம் புகாத வீட்டில் வைத்தியன் புகுவான்” என்பது பழமொழி

“மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்” என்பது புதுமொழி

ஆரோக்கியமற்ற வீட்டிற்குள்தான் வைத்தியன் புகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வைத்தியன் புகுந்து குடும்பத்திற்குள் ஆரோக்கியத்தை மீண்டும் கொண்டு வருவான்.

அழியப்போகின்ற குடும்பத்திற்குள்தான் போலிஸ் புகும். குடும்பத்திற்குள் போலிஸ் புகுந்த பிறகு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்வதை விட குடும்ப அழிவு விரைவுபடுத்தப்பட்டு அதன் அழிவு உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

இதுதான் பழமொழிக்கும் புதுமொழிக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.
1 comment:

Anonymous said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.