சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, October 15, 2010

கொலை = பொய் = மனைவி?

கொலை, பொய், வஞ்சகம், சுயநலம், அரக்க குணம், மனைவி இவை எல்லாவற்றிற்கும் ஒரே அர்த்தம்தான் போலிருக்கிறது.

அக்டோபர் 09,2010 தினமலர்

சென்னை: சேர்ந்து வாழ்ந்த இரண்டாவது கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் பெற்ற மகனை தீவைத்து கொளுத்திவிட்டு, தீக்காயங்களுடன் நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் லதா (26). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்தவருடன் திருமணமாகி, வசந்த் (5) என்ற மகன் உள்ளான். கணவரை பிரிந்த லதா, சென்னை வந்து எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வந்தவர் செல்வம் (35). பெயின்டரான இவருக்கு திருமணமாகி வித்யா (7), காவ்யா (4) என்ற இரு மகள்கள் உள்ளனர். செல்வத்தின் மனைவி கிரேசி கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தனிமையில் இருந்த லதாவிற்கும், செல்வத்திற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, காதலாகி பின், இருவரும் ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், செல்வத்திற்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த லதா, செல்வத்திடம் கேட்டு சண்டையிட்டுள்ளார்.

கருத்து வேறுபாடு இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து மகன் வசந்த் மீது ஊற்றி லதா தீ வைத்தார். தன்மீதும் மண்ணெண்ணெய் ஊற்றியிருந்ததால், லதாவின் உடலிலும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. கையில் மண்ணெண்ணெய் கேனுடன் எம்.ஜி.ஆர்., நகர் போலீஸ் நிலையம் சென்ற லதா, போலீசில் தனது கணவன் செல்வம் தன்மீதும், குழந்தை மீதும் தீ வைத்துவிட்டு சென்றதாக புகார் அளித்தார். போலீசார், லதாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்ததுடன், கருகிய நிலையில் கிடந்த வசந்தை "108' உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்த் இறந்தான். லதாவிடம், போலீசார் நடத்திய விசாரணையில், தனது மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். லதாவின் இரண்டாவது கணவர் செல்வம், தனது இரண்டு பெண்குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, எங்கோ மாயமாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

======================

பொய் வழக்குப்போட்டு கணவனைப் பிரிந்து பிறகு தனிமை ஏக்கத்தில் கிடைக்கின்ற ஆணுடன் கூடி வாழ்ந்து அதில் பிரச்சனை ஏற்படும்போது தான் பெற்ற குழந்தைக்கு தானே தீ வைத்து பிறகு அந்தப் பழியை தவறு செய்யாத ஆள்மீது சுமத்தி குற்றவாளியாக்கி காவல்நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சிக்கவைத்து சுகம் காணும் இழிபிறவியாகிவிட்டனரே! பெண்களின் நிலை ஏன் இப்படி தாழ்ந்து கொண்டிருக்கிறது? இதற்கு யார் காரணம்?
அரசாங்கம் கொடுத்திருக்கும் தவறான சட்டங்களைப் பயன்படுத்தி
வாழ்க்கையில் தனிமைப்படுத்தப்பட்டு தவறிழைக்க இதுபோல பல பெண்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளே ஜாக்கிரதை!
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.