சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, October 25, 2010

தாயுள்ளமும் கள்ளக்காதலும்

கள்ளத்தொடர்பில் பிறந்த சிசுவைக் கொலை செய்த தாய்

அக்டோபர் 25,2010 தினமலர்

மதுரை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கள்ளத்தொடர்பில் பிறந்த சிசுவை, தாயே கொலை செய்தது குறித்து விசாரித்து, இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இளையான்குடி மாடக்கோட்டை ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: மகன் மாதவனுக்கும், திருவாடானை அருகே கம்பகுடியை சேர்ந்த ரேணுகாவிற்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். தனிக்குடித்தனம் நடத்தினர். மாதவன் வேலைக்காக வெளிநாடு சென்றார். ரேணுகாவிற்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. ரேணுகா கர்ப்பமுற்றார். தவறான உறவில் பிறந்த சிசுவை ரேணுகா கொலை செய்து வீட்டருகே புதைத்தார். பின் துர்நாற்றம் வீசவும், அதை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. புகார் தெரிவித்ததால், ரேணுகாவிற்கு நெருக்கமான சிலர், மிரட்டல் விடுக்கின்றனர். எஸ்.பி., கலெக்டரிடம் புகார் கூறியும், நடவடிக்கை இல்லை. ரேணுகா மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி ஜி.ராஜசூர்யா, ""இதுகுறித்து விசாரித்து இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.