திருப்பூர் : திருப்பூரில், திருமணமான 15வது நாளில், கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற இளம் மனைவியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவினாசியை அடுத்துள்ள நரியம்பள்ளியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் ஜமுனா (25). இவரும், திருப்பூர் பி.என்., ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபுவும் காதலித்தனர். இதையறிந்த ஜமுனாவின் பெற்றோர், அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மண்ணரை பகுதியைச் சேர்ந்த செல்வராஜூக்கும் (25), ஜமுனாவுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, திடீரென ஜமுனாவின் தந்தை மாணிக்கம் இறந்து விட்டார். எனினும், நிச்சயித்தபடி, செப்டம்பர் 12ம் தேதி, கருவலூர் பொன்காளியம்மன் கோவிலில் செல்வராஜூக்கும், ஜமுனாவுக்கும் திருமணம் நடந்தது.பிரபுவின் மீது தீராத காதல் கொண்டிருந்த ஜமுனா, திருமணத்துக்கு பிறகும் பிரபுவை மறக்க முடியாமல் தவித்தார். கணவர் செல்வராஜை கொலை செய்துவிட்டு, காதலன் பிரபுவுடன் சென்றுவிட முடிவு செய்தார்.
திருமணமான 15வது நாளான செப்டம்பர் 26ம் தேதி, கோவிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தில் விஷம் கலந்து, செல்வராஜூக்கு தந்தார். அதை குடித்த சில நிமிடங்களில் செல்வராஜ் மயங்கி விழ, அவரை திருப்பூர் வலையங்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்வராஜ் குடித்த தீர்த்தத்தில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. செல்வராஜூக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக ஜமுனா மீது, செல்வராஜின் தந்தை சுப்ரமணியம், திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ஜமுனாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜமுனாவை, 15 நாள் சிறைக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment