
சேலம் 53வது வார்டு வேலு புதுத்தெருவில் செயல்பட்டு வரும் சிறிய குழந்தைகள் மையத்தில், குழந்தைகள் அதிகளவில் உள்ளதால் போதிய இடவசதி இல்லாமல், ஒருவர்மேல் ஒருவர் என்று படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியாக சமையலறை வசதி இன்றி, சிறிய வகுப்பறைக்குள் சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள், காஸ் சிலிண்டர் வைத்துள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளது.
(தினமலர் படம் 25 செப்டம்பர் 2010)இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை என்று ஒரு தனி அமைச்சகமே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இதற்காக நிதி “ஒதுக்கீடும்” நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கண்ணில் படுவதெல்லாம் பொய் வரதட்சணை வழக்குப் போட்டு நாட்டை சீர்குலைக்கும் “அப்பாவிப்” பெண்கள் மட்டுமே. அவர்களுக்காக அடுக்கடுக்காக பல சட்டங்கள் இயற்றுவதற்குமட்டும்தான் இந்த அலுவலர்கள் வியர்வை சிந்தி உழைப்பார்கள்!
அமைச்சகத்தின் உழைப்பிற்கு ஒரு உதாரணம்:
`Pub bharo' to beat moral police: Renuka Choudhary
Times of India 6 Feb 2009
NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since Renuka Choudhary on Thursday suggested that the only way to tackle the moral police was to launch a " pub bharo andolan".
பொய் வரதட்சணை வழக்குகள் எவ்வளவு அதிகமாக பதிவு செய்யப்படுகிறதோ அவ்வளவு எண்ணிக்கையில் பெண்கள் இந்தியாவில் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று புள்ளி விவரம் காட்டி நிதியுதவி பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் எத்தனை FIR பதிவு செய்யப்படுகிறது என்பதை மட்டும்தான் கணக்கில் கொள்ளவேண்டும். அப்போதுதான் அது மிகப்பெரிய எண்ணாகத் தெரியும். வழக்கின் முடிவில் எத்தனை உண்மையானவை என்று எண்ணிப்பார்த்து உண்மையைச் சொன்னால் பிழைக்க முடியாதல்லவா! அதனால் பெண்களைக் காப்பாற்றுகிறேன் என்று புதுப்புது சட்டங்களை இயற்றி அதிக அளவில் பொய் வழக்குகளை உருவாக்கினால் அதிக எண்ணிக்கையில் FIR பதிவுசெய்யப்பட்டு பணமழையாகப் பொழியுமல்லவா.
இதுபோல் குழந்தைகளை வைத்து ஏதாவது பணம் பார்க்கமுடியுமா? அல்லது குழந்தைகள்தான் பொய்வழக்குப் போடுவார்களா?
No comments:
Post a Comment