இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, September 29, 2010

பெண் அதிகாரியை துன்புறுத்திய ஆண் !

பெண் குழந்தைகளின் நலனுக்காக ஒரு பெண் அதிகாரி செய்திருக்கும் அரும்பெரும் உதவியை பின்வரும் செய்தியில் படித்து மகிழுங்கள்.

உதவித் தொகை பெற லஞ்சம் பெண் அலுவலர் கைது
செப்டம்பர் 30,2010 தினமலர்

திருவண்ணாமலை : அரசு உதவித் தொகை பெற 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊர்நல அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கன்னுகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன்(30). இவருக்கும் ரேவதி என்பவருக்கும் 2004ல் திருமணம் நடந்தது; இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் அரசு உதவி தொகை பெற விண்ணப்பத்துடன், இரு நாட்களுக்கு முன் கந்தன் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊர் நல அலுவலர் முனியம்மாள் (54), என்பவரிடம் மனுவை கொடுத்தார். முனியம்மாள், "விண்ணப்பத்தை சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க 4,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்றும், தற்போது விண்ணப்பத்துடன் 2,000 ரூபாய் தர வேண்டும்' என, கேட்டுள்ளார்.

கந்தன், பணம் தயார் செய்து கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டார். பின், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் அறிவுரைப்படி நேற்று முன்தினம் மாலை கந்தன் பி.டி.ஓ., அலுவலகத்தில் முனியம்மாளிடம் 2,000 ரூபாய் பணம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முனியம்மாளை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
=======

இந்த செய்தியை “பெண்ணுரிமை” என்ற பெயரில் இப்படியும் சொல்லலாம்: கிராமங்களில் பணிபுரியும் பெண் அதிகாரிகளை ஆண்கள் எப்படியெல்லாம் கொடுமைப் படுத்துகிறார்கள்!

இந்தியாவில் 80% பேர் ஊழல்வாதிகள் என்று சில நாட்களுக்கு முன்புதான் செய்தி வந்திருந்தது. அப்படியிருக்கும்போது ஒரு பெண் அதிகாரி லஞ்சம் கேட்டால் அவரை இப்படியா போலிஸில் மாட்டிவிடுவது. அவர் ஒரு பெண் என்ற காரணத்தால்தானே இப்படி செய்கிறார்கள். ஆண்களின் அராஜகம் ஒழிக!

இப்படித்தான் பொய் வழக்குப்போடும் மருமகள்களுக்கும் பெண்கள் அமைப்புகள் ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நாட்டில். பெண் தவறு செய்யலாம் அதை யாரும் தட்டிக்கேட்கக் கூடாது. அப்படி அதை சுட்டிக் காட்டினால் அதற்குப் பெயர்தான் ஆணாதிக்கம். இதுதான் 21ம் நூற்றாண்டின் புதிய பெண்ணியவாதத்தின் கோட்பாடு.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.