சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, September 12, 2010

அன்னை வயிற்றிலிருந்து சிசு செய்த வரதட்சணைக் கொடுமை

அன்னையின் வயிற்றுக்குள் இருக்கும் பிறக்காத கருவாக இருந்தாலும் சரி பிறந்து சில நாட்களே ஆன குழந்தையாக இருந்தாலும் சரி இவையெல்லாம் மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்கின்றன. இந்த அதிசயம் இந்தியாவில் மட்டுமே நடக்கும். அரசாங்கம் கொடுத்திருக்கும் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் எத்தனை விதமான ஜாலங்கள் செய்கின்றன!

இந்தியாவில் இருக்கும் அனைத்து பொய் வரதட்சணை வழக்குகளிலும் குறைந்த பட்சம் 5 குடும்ப உறுப்பினர்கள் குற்றவாளியாகச் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு புகாரிலும் குறைந்தபட்சம் 3 பெண்கள் சிக்கவைக்கப்படுகிறார்கள். இதுதவிர கர்ப்பிணிகள், சிறுகுழந்தைகள், பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர், திருமணமாகாத இளம் பெண்கள், முதியோர் என்று ஒரு பட்டியலே இருக்கிறது. பொய்வழக்கில் சிக்கும் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பெண்களுக்குப் பாதுகாப்புத் தருகிறேன் என்ற பெயரில் பல அப்பாவிப் பெண்களையும் அவர்களது வாழ்க்கையையும் சிதைப்பவைதான் இந்திய நாட்டின் வரதட்சணை மற்றும் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள். சிதைந்துபோவது உங்கள் குடும்பமாக இருக்கும் வரையில் காவல், நீதித்துறைக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. பூனைப்படை வைத்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும்வரை ஆள்பவர்களுக்கு அப்பாவிகளின் வாழ்க்கை சிதைந்தால் என்ன, குடும்பத்தோடு உயிரே போனால் என்ன. எதற்காகக் கவலைப்படவேண்டும்?


கோர்ட்டில் ஆஜராகுமாறு நிறைமாத கர்ப்பிணிகளை கட்டாயப்படுத்த முடியாது-உயர்நீதிமன்றம்
செப்டம்பர் 12, 2010 ThatsTamil

டெல்லி: நிறைமாத கர்ப்பிணிகளாக இருக்கும் பெண்களை வழக்குக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரதட்சணைக் கொடுமை வழக்கில் ஆஜராகாத, நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரண்ட்டை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

அப்போது நீதிபதி கெளபா பிறப்பித்த உத்தரவில், கீழ்க் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு மிகவும் வேதனை தருகிறது. ஆறு மாத கர்ப்பமாக உள்ள பெண்ணை நேரில் வந்து ஆஜராகுமாறு கூறியிருப்பது மிகவும் தவறானதாகும்.

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பது, நேரில் ஆஜராகுமாறு கட்டாயப்படுத்துவது போன்றவை சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றார் அவர்.

சென்ற ஆண்டு இரண்டுமாதக் குழந்தையை வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து பெருமைப்பட்டது காவல்துறையும், நீதித்துறையும். அதை இந்த வீடியோவில் காணுங்கள்.
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.