சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, October 27, 2009

முரண்பாடுகள்

திருமணம் செய்யாமல் பெண்ணை ஏமாற்றிய சாப்ட்வேர் நிறுவன மேலாளர் கைது
அக்டோபர் 28,2009

சென்னை: காதலித்து, திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக, பெண் கொடுத்த புகாரில், சாப்ட்வேர் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக்நகரை சேர்ந்த சீனிவாசனின் மகள் ஸ்ரீவித்யா(30). தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிறார்.

இவர் இதற்கு முன், அபிராமபுரத்தை சேர்ந்த கார்த்தீஷ்(32) என்பவர் நடத்தும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒரு ஆண்டுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. இதற்கு சில நாட்களுக்கு பின், கார்த்தீஷ் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவை மாற்றிக் கொண்டு அவரை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவித்யாவை சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் வந்து சந்திக்குமாறு அழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்துள்ளது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கார்த்தீஷை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். கார்த்தீஷை பிடித்து சென்ற அபிராமபுரம் போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். முதலில், ஸ்ரீவித்யாவை தெரியாது என கூறிய கார்த்தீஷ், பின் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து ஸ்ரீவித்யா போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், கார்த்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

============================
மேலுள்ள செய்தியைப் படித்து விட்டு கீழுள்ள வீடியோவைப் பார்த்தால் சட்டத்தில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றன என்பது புரியும். இது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் அல்ல. நாட்டில் இருக்கும் உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம். இரு பாலினருக்கும் பொதுவான நேர்மையான சட்டங்கள் கிடையாது. இது தான் உண்மை.

பொம்பளை செத்தா உயிர், ஆம்பிளை செத்தா......?

"தேவதையைக் கண்டேன்"


4 comments:

இ.பி.கோ 498A said...

நல்லதொரு முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

மேலும் உங்கள் வலைப்பதிவை www.tamilmanam.net/ திரட்டியிலும், www.tamilish.com/ இணைப்புச் சேவையிலும் சேர்த்து பலர் காண வழி செய்யுங்கள். எங்கோ ஒரு மூலையில் ஒலிக்கும் குரலாக இல்லாமல் உங்களைப் போன்ற பலர் எழுதுகிறார்கள் என்னும் உணர்வு வாசிப்பவர்களுக்கு வரவேண்டும்.

மேலும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை tamil498a [at] gmail [dot] com -க்கு அனுப்புங்கள். சில கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவும்.

நன்றி

இ.பி.கோ 498A said...

அதிகமாக தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்காத எனக்கு இது பிரமிப்பாக இருக்கிறது. இந்த வீடியோவை எனக்கு அனுப்ப இயலுமா? என் பதிவிலும் உள்ளிடுகிறேன்.

நன்றி.

கிராமத்துப் பையன் said...

உங்களுடைய கருத்துப் பதிவிற்கு நன்றி.


வீடியோவை கீழுள்ள YouTube தளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் அல்லது நேரடியாக Embed செய்து கொள்ளலாம்.

http://www.youtube.com/watch?v=hEZda7X7T84

நன்றி.

தமிழ். சரவணன் said...

அன்பு நண்பரே தங்கள் இடுகைகள் அணைத்தும் அருமை மற்றும் தங்கள் இணைத்துள்ள இத்தமிழ் படித்தின் காட்சிகள் உண்மையின் பிரதிபலிப்பு... தொடரட்டும் தங்கள் சேவை

வாழ்க வளமுடன்!

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.