சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, October 31, 2009

தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி

அக்டோபர் 31, 2009

இதுகுறித்து சுதாமதி கொடுத்த வாக்குமூலம்..

சம்பவத்தன்று எனது கணவர் செல்வத்தை விடியற்காலையில் உடலுறவுக்கு அழைத்தேன். அப்போது அவர் வர மறுத்தார். இதனால் கோபமடைந்த நான், நீ வேறு எந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று கேட்டு அவரிடம் தகராறு செய்தேன்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், நீ கல்லூரிக்கு செல்கிறாயே, நீ வேறு யாருடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று கூறி கன்னத்தில் அறைந்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதையடுத்து எனது கணவர் செல்வம் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் நான் சுதாரித்து கொண்டு எனது கணவரின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினேன். இதில் பலத்த வெட்டுப்பட்டு எனது கணவர் சம்பவ இடத்திலேயே செத்தார்.

இந்த தகராறில் எனது குழந்தைக்கு அருகில் இருந்த கட்டிலில் மோதி காயம் ஏற்பட்டது. உடனே அரிவாளால் என்னையே நான் வெட்டிக்கொண்டு காயம் ஏற்படுத்திக் கொண்டேன். பின்னர் எனது சகோதரன் வசந்தகுமாரிடம் கூறி, இதை வெளியில் சொன்னால் குழந்தைகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினேன். இதனால் அவனும் என்னை அப்போது காட்டிக் கொடுக்கவில்லை என்றார்.

இதையடுத்து சுதாமதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முழுச்செய்தியை இங்கே காண்க: தட்ஸ்தமிழ் செய்தி

====================

இதெல்லாம் நம்ம ஊரில் தான் நடக்கிறது. ஆண்கள் மட்டும் தான் ஏதோ தவறு செய்பவர்கள் என்ற தவறான எண்ணமிருந்தால் உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். செய்தியில் சொ(கொ)ல்லப்பட்டுள்ள கணவர் மனைவியின் அழைப்புக்கு ஒத்துழைக்காததால் மனைவியால் கொல்லப்பட்டார்.

அப்படி கொல்லப்படவில்லையென்றால் மனைவி அவரை 498A கேசு மூலம் கொன்றிருப்பார். எப்படியென்றால் 498A சட்டப்படி மனைவி "கற்பனையாக" மனதளவில் கஷ்டப்பட்டால் கூட கணவன் குற்றவாளியாகக் கருதப்படுவார். எனவே மனைவியின் அழைப்புக்கு வராத கணவர் மனைவியை மளதளவில் கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்படுவார்.


அப்படியே இந்த நிகழ்ச்சியை இப்படி யோசித்துப்பாருங்கள் - கணவர் மனைவியை அழைத்து அதற்கு அந்த மனைவி மறுத்து கணவர் கட்டாயப்படுத்தியிருந்தால் அப்போதும் கணவர் குற்றவாளியாகத் தான் கருதப்படுவார். ஏனென்றால் அதற்குப் பெயர் "Marital Rape" என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருப்பார்.

எனவே எப்படிப்பார்த்தாலும் "கணவர்" என்ற நிலையிலிருப்பவர்கள் அனைவரின் தலைக்கு மேலாக தவறான சட்டங்கள் என்ற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.

எப்படியிருந்தாலும் அப்பாவி கணவர்களின் உயிரும், மானமும் ஏதாவது ஒருவகையில் என்றாவது ஒரு நாள் பறிக்கப்பட்டுவிடும். அதுவும் சட்டப்படி தான்....No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.