அக்டோபர் 16,2009
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் பெண் எம்.எல்.ஏ.,வை கொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது கணவரை விடுதலை செய்து சென்னை மகளிர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில், கடந்த 2001ம் ஆண்டு, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருப்பாயி.
இவர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர். அவரது கணவர் கருப்பையா. இவர் கருப்பாயியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவருக்கு எதிராக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் கருப்பாயி புகார் கொடுத்தார். அதையடுத்து கருப்பையா கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ., விடுதியில் உள்ள அறையில் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, கணவர் கருப்பையாவுக்கு எதிராக புகார் கொடுத்தார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் இச்சம்பவம் நடந்தது. இந்த வழக்கை சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி ஜபருல்லாகான் விசாரித்தார். கருப்பையா சார்பில் வக்கீல் செல்வம் சவுந்தர் ஆஜரானார். கருப்பையா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை எனக் கூறி, அவரை விடுதலை செய்து நீதிபதி ஜபருல்லாகான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment