நீங்கள் எந்த சூழ்நிலையையும் சமாளித்து வாழும் திறமையுடையவரா என்பதை அறிந்து கொள்ள கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியுமா என்று சோதித்துப் பாருங்கள்.
இந்த பூமியுள்ள எல்லா நாடுகளிலும் திருமணமான கணவன் மனையிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நீதிமன்றத்தில் முறைப்படி விவாகரத்துப் பெற்று தங்களது புதிய திருமண வாழ்க்கையை தொடர்வார்கள். ஆனால் எங்குமே இல்லாத வழக்கமாக ஒரே ஒரு நாட்டில் மட்டும் கணவரையும் அவரது குடும்பத்தில் உள்ள தத்தி நடக்கும் குழந்தை முதல் தள்ளாடி நடக்கும் முதியோர் வரை அனைவர் மீதும் பொய் கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கும் பழக்கம் அரசாங்க உதவியுடன் நடந்து கொண்டிருக்கிறது. அந்த கைது நடவடிக்கைக்கு எந்த வித ஆதாரமும், விசாரணையும் நடத்தப்படுவதில்லை. இது போன்ற கொடிய செயல் எங்கு நடைபெறுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்த கேள்விக்கு யோசிக்காமல் உடனடியாக உங்களுக்கு பதில் தெரிந்தால் நீங்கள் இந்த அண்டத்தில் எந்த கிரகத்திற்கு சென்றாலும் தைரியமாக எல்லாவித தாக்குதல்களிலிருந்தும் சமாளித்து வாழும் தகுதியைப் பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். பதில் தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக ஒரு சிறு குறியீடு தருகிறேன். கூகுள் தளத்திற்குச் சென்று "498A" என்று டைப் செய்யுங்கள். நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப்பற்றிய ஏராளமான செய்திகள் கிடைக்கும். படித்தவுடன் உங்களுடனேயே அந்த விஷயத்தை வைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்தக் கேள்வியை அனுப்பி அவரது குடும்பத்தையும் காப்பாற்ற உதவி செய்யுங்கள்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
No comments:
Post a Comment