இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, October 08, 2009

சூப்பர் நியூஸ்!

அரசு ஊழியர்கள் வரதட்சணை உறுதி படிவம் அளிக்க உத்தரவு

Dinamalar: October 9,2009

சென்னை: அரசு ஊழியர்கள் தங்களது திருமணம் மட்டுமின்றி, தங்களது குழந்தைகளின் திருமணங்களின் போது வரதட்சணை வாங்கவில்லை என்பதற்கான உறுதிமொழி படிவத்தை, துறைத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் போது, எந்த அரசு ஊழியரும் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ மணமக்களின் பெற்றோர் அல்லது காப்பாளரிடம் எவ்வித வரதட்சணையும் கோரக் கூடாது.இந்த விதிகளில், 2006ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, அரசு ஊழியர்கள் தங்களது திருமணத்துக்கு பின் அல்லது தங்களது குழந்தைகளின் திருமணத்தை கொண்டாடும் போது, துறைத் தலைவரிடம் தான் எவ்வித வரதட்சணையும் பெறவில்லை என்பதற்கான உறுதிமொழியை கொடுக்க வேண்டுமென உத்தரவிடப் பட்டது. இந்த உறுதிமொழி படிவத்தில், தங்களது குழந்தையை திருமணம் செய்பவரிடமும், அவரது பெற்றோரிடமும் கையெழுத்து பெற வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இந்த விதியில், தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அட்டவணை 4ன் கீழ் அரசு வகுத்துள்ள படிவத்தின்படியே உறுதிமொழியை அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர் தங்களது குழந்தையின் திருமணத்தின் போது, இந்த படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பூர்த்தி செய்து, உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடுவதோடு, திருமணம் செய்பவரது பெற்றோர் மற்றும் சாட்சிகளிடமும் கையெழுத்து பெற வேண்டுமென தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

========================
இதுவரை யார் பின்பற்றினார்கள்? இனி யார் பின்பற்றுவார்களோ? IPS, IAS- களுக்கும், நீதிபதிகளுக்கும் பிரச்சனை வரும்போது தான் இது போன்ற விதிமுறைகளை தூசி தட்டி தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பு அடியில் வந்தால் தான் எழுந்து தேட ஆரம்பிக்கிறார்கள்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.